கரணப்பந்து:
நன்றி
1. விக்கிப்பீடியா
இது குரங்குப் பந்து என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு குழு விளையாட்டாகும். இதில் பந்தாக துணியின் முறுக்கிய திரி பயன்படுத்தப்படுகிறது. திரிப்பந்தை கால் கட்டைவிரல் இடுக்கில் பிடித்துக் கரணம் போட்டுக் காலால் வீசுவர். எதிரில் இருப்பவர்கள் அதனைப் பிடிக்க வேண்டும். பிடித்தால் யார் பிடிக்கிறார்களோ அவர் கரணப்பந்து வீசலாம்.
பிறர் பிடிக்காவிட்டால் பந்து விழுந்த இடத்திலிருந்து முன்பு அடித்தவரே முன்போலவே ஆடலாம். யார் அதிக தொலைவு பந்தைக் கொண்டு செல்கிறாரோ அவர் பெருமை பெறுவார். பிடி நழுவிப் பந்து பின்பக்கம் விழுந்துவிட்டால் அவர் ஆட்டம் போய்விடும். எவர் ஒருவர் வெற்றி பெற்றுக்கொண்டே சென்ற கடைசி இடத்திலிருந்து மற்றவர்கள் நொண்டி அடித்துக் கொண்டு முதலில் ஆட்டம் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர வேண்டும். இது பந்தை பிடிக்காமல் விட்ட தோல்விக்குத் தண்டனையாகும்.
இந்த விளையாட்டு காலுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது.
இரண்டு அணியாகப் பிரிந்து விளையாடினால் இது ஆனமானத் திரி என்று அழைக்கப்படும். அப்படி விளையாடுகையில் தோற்ற அணியினர் வெற்றி பெற்றவர்களை அவர் கடைசியில் முடித்த இடத்திலிருந்து உப்பு மூட்டை சுமந்து வர வேண்டும். அதாவது முதுகில் சுமந்து வர வேண்டும்.
நன்றி
1. விக்கிப்பீடியா
No comments:
Post a Comment