ஆடுபுலி ஆட்டம்:
புதுக்கோட்டை மாவட்டம் பல தொல்லியல் எச்சங்களை தன்னகத்தேக் கொண்டது. புதுக்கோட்டையின் தொல்லியல் எச்சங்களை அறிந்து சுற்றுலாவிற்கு உள்ள வாய்ப்புகள் குறித்த ஆய்வில் புகழ்பெற்ற திருமயம் கோட்டையில் சில ஆச்சரியங்கள் கண்டேன். அவை மலைக்கோட்டையின் உச்சியில் இருக்கும் பீரங்கி, குகைக்கோயில், 7000 வருடத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள், அத்துடன் சில சிறுபாடு (ஓடியாடாமல் உட்கார்ந்து விளையாடுதல்) விளையாட்டுகளுக்கான (தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்றவை) கீறல்கள் காணப்பட்டது. படைவீரர்கள் ஓய்வின் போது விளையாடியிருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஆட்டத்தை பல பொதுமக்கள் கூடும் சத்திரங்கள், மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட திண்ணைகள் போன்றவற்றில் இளைஞர்கள் அமர்ந்து ஆடக் கண்டிருக்கிறேன்.
நற்றிணையில் 341 வது பாடல், மதுரை மருதன் இளநாகனார் அவர்கள் பாடிய “வங்கா வரிப்பாறைச் சிறுபாடு முணையின்...” என்று துவங்கும் பாடலானது ஆடு புலி ஆட்டத்தினைக் குறிக்கிறது. இந்தப் பாடலின் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டாகும்.
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் தனது பண்பாட்டு அசைவுகள் புத்தகத்தில், ‘மூன்று புலிகளும் 21 ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது. அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம்.
அரசன், மதகுரு, குதிரைவீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள். ‘ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல’ என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது” என்று குறிப்பிடுகிறார்.
இந்த விளையாட்டு திட்டமிடுதலுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்க உதவும். புத்திக்கூர்மைக்கும் உதவுகிறது.
ஆடுபவர்கள்: இரண்டு நபர்கள்
ஆட்ட அமைவு:
ஒரு முக்கோணக் கூம்புக் கோட்டில். கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளிருந்து இரண்டு கோடுகள் தொட வேண்டும். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக் கோடுகள் அல்லது படுக்கைக் கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். (படத்தைக் காண்க).
தேவையான பொருட்கள்: சாக்பீஸ், அல்லது ஸ்கெட்ச் (ஆட்டக்களம் வரைவதற்கு), 15 சிறிய காய்கள், 3 பெரிய காய்கள்
விளையாடும் முறை:
ஆட்டக்களத்தில் வரையப்பட்டுள்ள கோடுகள் ஆடுகளும் புலிகளும் செல்லும் வழிகளாகும், கோடுகள் சந்திக்கும் புள்ளிகள் காய்கள் வைக்குமிடமாகும். ஆட்டம் துவங்கும் பொழுது முக்கோணத்தின் உச்சியில் ஒரு புலியும் அதற்கு அடுத்தச் சந்திகளில் இரண்டு புலிகளும் (அதாவது பெரிய காய்கள்) முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொரு சந்திகளாக இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும் புலி அடுத்தச் சந்திக்கு நாலாப்புறமும் நகரும். நகரும் போது ஒரு சந்தியில் ஆடு இருந்து அதற்கு அடுத்தச் சந்தியில் வெற்றிடமாக இருந்தால் புலி ஆட்டை வெட்டிவிட்டு அடுத்தச் சந்திக்குத் தாவும். இவ்வாறு புலி தாவுவதற்கு இடம் கொடுக்காமல் ஆடுகளை சரியான சந்தியில் இறக்க வேண்டும். எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலியை நகரவிடாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. (அதாவது சதுரங்கத்தில் ராஜா நகரவிடாமல் வியூகம் அமைத்து செக் வைத்து அவரை நகர விடாத நிலையில் இருக்கும் போது வெற்றி என்று அழைக்கப்படுகிறதல்லவா அது போல சூழல்). எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி.
இந்த ஆட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டியினை சொடுக்கி பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=_EBRCrgqS3M
நன்றி:
1. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
2. பண்பாட்டு அசைவுகள், தொ. புரமசிவன், காலச்சுவடு பதிப்பகம்,2016
3. https://www.youtube.com/watch?v=_EBRCrgqS3M
4. http://vaiyan.blogspot.com/2017/01/natrinai-341.html
5. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
புதுக்கோட்டை மாவட்டம் பல தொல்லியல் எச்சங்களை தன்னகத்தேக் கொண்டது. புதுக்கோட்டையின் தொல்லியல் எச்சங்களை அறிந்து சுற்றுலாவிற்கு உள்ள வாய்ப்புகள் குறித்த ஆய்வில் புகழ்பெற்ற திருமயம் கோட்டையில் சில ஆச்சரியங்கள் கண்டேன். அவை மலைக்கோட்டையின் உச்சியில் இருக்கும் பீரங்கி, குகைக்கோயில், 7000 வருடத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள், அத்துடன் சில சிறுபாடு (ஓடியாடாமல் உட்கார்ந்து விளையாடுதல்) விளையாட்டுகளுக்கான (தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்றவை) கீறல்கள் காணப்பட்டது. படைவீரர்கள் ஓய்வின் போது விளையாடியிருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஆட்டத்தை பல பொதுமக்கள் கூடும் சத்திரங்கள், மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட திண்ணைகள் போன்றவற்றில் இளைஞர்கள் அமர்ந்து ஆடக் கண்டிருக்கிறேன்.
நற்றிணையில் 341 வது பாடல், மதுரை மருதன் இளநாகனார் அவர்கள் பாடிய “வங்கா வரிப்பாறைச் சிறுபாடு முணையின்...” என்று துவங்கும் பாடலானது ஆடு புலி ஆட்டத்தினைக் குறிக்கிறது. இந்தப் பாடலின் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டாகும்.
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் தனது பண்பாட்டு அசைவுகள் புத்தகத்தில், ‘மூன்று புலிகளும் 21 ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது. அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம்.
இந்த விளையாட்டு திட்டமிடுதலுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்க உதவும். புத்திக்கூர்மைக்கும் உதவுகிறது.
ஆடுபவர்கள்: இரண்டு நபர்கள்
ஆட்ட அமைவு:
ஒரு முக்கோணக் கூம்புக் கோட்டில். கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளிருந்து இரண்டு கோடுகள் தொட வேண்டும். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக் கோடுகள் அல்லது படுக்கைக் கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். (படத்தைக் காண்க).
தேவையான பொருட்கள்: சாக்பீஸ், அல்லது ஸ்கெட்ச் (ஆட்டக்களம் வரைவதற்கு), 15 சிறிய காய்கள், 3 பெரிய காய்கள்
விளையாடும் முறை:
ஆட்டக்களத்தில் வரையப்பட்டுள்ள கோடுகள் ஆடுகளும் புலிகளும் செல்லும் வழிகளாகும், கோடுகள் சந்திக்கும் புள்ளிகள் காய்கள் வைக்குமிடமாகும். ஆட்டம் துவங்கும் பொழுது முக்கோணத்தின் உச்சியில் ஒரு புலியும் அதற்கு அடுத்தச் சந்திகளில் இரண்டு புலிகளும் (அதாவது பெரிய காய்கள்) முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொரு சந்திகளாக இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும் புலி அடுத்தச் சந்திக்கு நாலாப்புறமும் நகரும். நகரும் போது ஒரு சந்தியில் ஆடு இருந்து அதற்கு அடுத்தச் சந்தியில் வெற்றிடமாக இருந்தால் புலி ஆட்டை வெட்டிவிட்டு அடுத்தச் சந்திக்குத் தாவும். இவ்வாறு புலி தாவுவதற்கு இடம் கொடுக்காமல் ஆடுகளை சரியான சந்தியில் இறக்க வேண்டும். எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலியை நகரவிடாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. (அதாவது சதுரங்கத்தில் ராஜா நகரவிடாமல் வியூகம் அமைத்து செக் வைத்து அவரை நகர விடாத நிலையில் இருக்கும் போது வெற்றி என்று அழைக்கப்படுகிறதல்லவா அது போல சூழல்). எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி.
இந்த ஆட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டியினை சொடுக்கி பார்க்கவும்
1. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
2. பண்பாட்டு அசைவுகள், தொ. புரமசிவன், காலச்சுவடு பதிப்பகம்,2016
3. https://www.youtube.com/watch?v=_EBRCrgqS3M
4. http://vaiyan.blogspot.com/2017/01/natrinai-341.html
5. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
No comments:
Post a Comment