STOP விளையாட்டு
S, T, O, P என்கிற ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி பின் STOPஎன்று சொல்லி விளையாடுவதால் இந்த விளையாட்டிற்கு STOP விளையாட்டு என அழைக்கப்படுகிறது.
இந்த விளையாட்டிற்கு குறைந்தது 5 நபர்கள் இருந்தால் விளையாட்டு விறுவிறுப்பாக அமையும். ஏதேனும் முறையில் பட்டவராக இருப்பர். மற்றவர்கள் ஒரு 5 மீட்டர் தொலைவில் நிற்பர். பட்டவர் அவர்களை பார்க்காமல் மறுபக்கம் திரும்பி என்ற S, T, O, P எழுத்துக்களைக் கூறி இறுதியில் STOP என்று முடித்து உடனே திரும்புவார். இதற்குள் பின்னே நின்று கொண்டிருப்பவர்கள் முன்னேறி வருவர் பட்டவர் STOP என்று கூறி திரும்பும் போது மற்றவர்கள் அனைவரும் அசையாமல் சிலைபோல் நிற்பர். அப்படி மீறி அசைந்தால் அவர் ‘அவுட்” என அறிவிக்கப்பட்டு வெளியில் நிற்க வெண்டும். மறுபடியும் பட்டவர் திரும்பி S, T, O, P என்று ஒவ்வொரு எழுத்துக்களாகக் கூறி இறுதியில் STOP என்று கூறி திரும்புவார். அவர் மறுபக்கம் திரும்பி ஒவ்வொருமுறையும் கூறிக்கொண்டிருக்கும் போது மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவர். பட்டவர் திரும்பி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரை மற்றவர்கள் தொட்டுவிட்டால் பட்டவரே மறுபடியும் STOP என்று சொல்லி திரும்பும் பணியினை மேற்கொள்வார். பட்டவர் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டால் மறுபடியும் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்டம் தொடரும்.
இந்த விளையாட்டின் மூலம் சுதாரிப்பாக இருப்பதற்கும், சுய கட்டுப்பாடுடன் அசையாமல் இருப்பதிற்கான பயிற்சியினை கற்றும் கொடுக்கிறது.
இதே முறையில் ‘Statue” என்ற விளையாட்டு விளையாடப்படுகிறது.
‘As the Gods will’ என்கிற ஜப்பானிய திகில் படத்தில் வரும் விளையாட்டுகளில் முதல் விளையாட்டு இதுபோன்ற அமைப்பில் இருக்கும். முதலில் ஒரு வகுப்பறையில் இந்த விளையாட்டு நடப்பது போன்ற காட்சியமைவுகள் இருக்கும். இதில் போதிதர்மர் பொம்மை திரும்பிப் பார்க்கும் போது எவரேனும் அசைந்தால் அவருடைய தலை வெடித்துச் சிதறும். அந்த பொம்மைத் தலையின் பின்புறம் ஒரு பொத்தான் இருக்கும் அதனை அந்த பொம்மை திரும்புவதற்குள் அழுத்தி விட்டால் வெற்றி பெறலாம். இறுதியில் ஒரு மாணவன் மட்டும் அந்த வகுப்பறையில் அழுத்தி தான் மட்டும் அந்த வகுப்பறையில் இருந்து தப்பிப்பிழைப்பது போன்று காட்சி அமைவுகள் இருக்கும்.

No comments:
Post a Comment