நட்சத்திர விளையாட்டு:
இது விண்மீன் விளையாட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆட்டமும் ஆடு புலி ஆட்டம் போலவே காய் நகர்த்தல்கள் இருக்கும். அதாவது வழியில் இருக்கும் காயினை வெட்டி அடுத்த காலி இடத்திற்கு தாவுதல்.
ஆடு மேய்க்கையில் பொழுது போக்காக விளையாடப்படும் விளையாட்டு என நம்பப்படுகிறது.
ஒருவர் ஆடும் விளையாட்டு
ஆடுகளம்:
படத்தில் காட்டியவாறு நட்சத்திரம் சாக்பீஸ் அல்லது ஸ்கெட்ச் பென், அல்லது மார்க்கர் கொண்டு வரைந்து விளையாடலாம்.
காய்கள்: சிறு கற்கள், புளியங்கொட்டைகள், பெரிய அளவுடைய விதைகள் அல்லது சோழி போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மொத்தம் 9 காய்கள்
விளையாடும் முறை:
இரண்டு வகைகள் உள்ளது:
வகை 1:
பொது:
நட்சத்திரத்தில் 10 முனைகளும் அல்லது முகங்கள் வருமாறு வரைய வேண்டும் உள்புறம் 5 இணைப்புகள் கிடைக்கும். (நிறைய நேரம் விளையாட வேண்டும் என ஆவல் இருந்தால் நட்சத்திர முனைகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். எத்தனைச் சந்திகள் இருக்கிறதோ அந்த எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து காய்கள் வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாமொத்தம் சந்திகள் அல்லது இணைப்புகள் இருக்கும். இப்பொழுது ஒன்பது காய்களை சந்திகளில் வைக்க வேண்டும்.
வகை 1 இல் நட்சத்திரத்தின் வெளிப்புற 5 முனைகளிலும் 5 காய்கள் அவசியம் வைக்க வேண்டும். உள்புற சந்திகளில் நான்கு காய்கள் வைக்க வேண்டும். ஆடு புலி ஆட்டம் போல ஒரு காயை வெட்டி அடுத்த வெற்றுச் சந்திக்குத் தாவ வேண்டும். ஆட்ட இறுதியில் ஒரே ஒரு காய் மட்டுமே மீந்திருக்க வேண்டும். அப்படி மீந்திருந்தால் வெற்றி பெற்றதாகும்.
வகை 2:
இதில் நட்சத்திரத்தின் உட்புற சந்திகள் ஐந்திலும் காய்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். வெளிப்புறத்தில் ஒரு முனையில் காலியாக இருக்க வேண்டும்.
இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் நினைவாற்றல் மற்றும் சாதுர்யம் ஆகும். குருட்டாம்போக்கில் காய் நகர்த்தி வெற்றி பெறுதல் முக்கியமல்ல. எந்த காயினை எப்படி நகர்த்தி வெற்றி பெற்றோம் என்பதை நினைவில் கொண்டால் அடுத்த முறை எளிதான வெற்றியினை பெற முடியும். மேலும், நம்முடைய ஒவ்வொரு நகர்த்தலுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். நம்மைச் சுற்றி நடப்பதை தெளிவாக உணர்வதற்கு ஒரு பிரச்சனைக்கு பலவித தீர்வுகள் சிந்திப்பதற்கு இது உதவும். பிரச்சனையின் ஆரம்பத்தினை உணர்வதற்கும் அதை எவ்விதம் கையாளலாம் என்பதை இந்த விளையாட்டு நமக்கு மறைமுகமாக கற்றுத் தருகிறது.

இந்த ஆட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டியினை சொடுக்கி பார்க்கவும்
நன்றி:
1. https://www.youtube.com/watch?v=sTiKcWE6ndI&vl=ta
2.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81#/media/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Game_star-coining.jpg

No comments:
Post a Comment