Wednesday, 8 April 2020

நமது விளையாட்டுக்கள் 10:

மச்சிலே யாரு:
இது இருவர் விளையாடும் விளையாட்டு
மச்சி என்பது மொட்டை மாடியினைக் குறிக்கும்.
ஒருவர் குனிந்து தன் முதுகில் மற்றவரை முதுவில் குப்புறவோ அல்லது மல்லாந்தோ சுமந்து பாட்டு வடிவில் கேள்வி பதில் உரையாடல் இருக்கும்.  உரையாடலின் முடிவில் குனிந்து இருப்பவர் திடீரென்று அவரை விட்டு நகர்ந்து எழுந்திருப்பார். பின்னால் சாய்ந்திருப்பவர் பாட்டிலும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கிக் கொண்டிருப்பவர் நகரும் போது சுதாரிப்பாக விழாமல் இருக்க வேண்டும்.
இது கவனமாக இருப்பதற்காக பயிற்சி அளிக்கும் ஒரு விளையாட்டாகும்.

பாடல் இப்படி அமையும்:
குனிந்திருப்பவர்: மச்சிலே யாரு?
சாய்ந்திருப்பவர் : நானு
குனிந்திருப்பவர்: என்ன செய்கிறாய்?
சாய்ந்திருப்பவர் : நெல் காயப் போடுறேன்
குனிந்திருப்பவர்: என்ன நெல்லு?
சாய்ந்திருப்பவர் : பச்சை நெல்லு
குனிந்திருப்பவர்: பச்சை நெல்லு எதற்கு?
சாய்ந்திருப்பவர் : பணியாரம் சுட
குனிந்திருப்பவர்: பணியாரம் எனக்கு?
சாய்ந்திருப்பவர் : ம்ம்ம்.. பிசுக்கு
பாடல் முடியும் போது குனிந்திருப்பவர் சடாரென எழுந்து கொள்ளுவார். சாய்ந்திருப்பவர் சுதாரிப்பாக விழாமல் நிற்க வேண்டும்.
தேவையென்றால் நீங்கள் சொந்தமாக பாடல் அமைத்து விளையாடிப் பார்க்கலாம்.

நன்றி
1. விக்கிப்பீடியா
 2. இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980

No comments:

Post a Comment