Monday, 6 April 2020

நமது விளையாட்டுக்கள் 8:

ஊதித்தள்ளு அல்லது ஊதுமுத்து

இது எளிய முறை விளையாட்டாகும்.
முன்பு புளியங்கொட்டையை வைத்து விளையாடப்பட்ட விளையாட்டு. புளியங்கொட்டையை முத்து என்பர் ஆதலால் ஊது முத்து என்று பெயர் பெற்றது. மேலும், இது வட்டத்தில் இருந்து ஊதி வெளியே தள்ளும் விளையாட்டு ஆதலால் ஊதித்தள்ளு என்ற பெயரும் பெற காரணமாயிற்று.
தற்போது கொரோனா வைரஸ் கிருமி அனைவருடைய நுரையீரலையும் பாதித்து வருகிறது. இந்த விளையாட்டு நுரையீரலுக்கு நன்கு பயிற்சியளிக்கக் கூடிய விளையாட்டாகும்.

இதில் இருவர் முதல் நான்கு நபர்கள் வரை விளையாடலாம். காய்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூடுதலாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்கு புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இல்லையெனில் தற்போதைய சூழலில் பெரிய விதைகள், சோழிகள், பாசிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாடலாம்.

விளையாடும் முறை:
ஒரு வட்டம் வரைந்து கொண்டு அதில் காய்களை குவித்து வைக்க வேண்டும். வாய் அடுக்கில் படாமல் ஊத வேண்டும். ஊதலில் கோட்டைத் தாண்டி வரும் காய்களை தனதாக்கிக் கொள்ள வேண்டும். அதிக காய்களை இறுதியில் பெற்றிருந்தாரோ அவரே வெற்றி பெற்றவராகிறார்.

இது எளிய முறை விளையாட்டாகும்.
முன்பு புளியங்கொட்டையை வைத்து விளையாடப்பட்ட விளையாட்டு. புளியங்கொட்டையை முத்து என்பர் ஆதலால் ஊது முத்து என்று பெயர் பெற்றது. மேலும்இ இது வட்டத்தில் இருந்து ஊதி வெளியே தள்ளும் விளையாட்டு ஆதலால் ஊதித்தள்ளு என்ற பெயரும் பெற காரணமாயிற்று.
தற்போது கொரோனா வைரஸ் கிருமி அனைவருடைய நுரையீரலையும் பாதித்து வருகிறது. இந்த விளையாட்டு நுரையீரலுக்கு நன்கு பயிற்சியளிக்கக் கூடிய விளையாட்டாகும்.

இதில் இருவர் முதல் நான்கு நபர்கள் வரை விளையாடலாம். காய்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூடுதலாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்கு புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இல்லையெனில் தற்போதைய சூழலில் பெரிய விதைகள்/ சோழிகள்/ பாசிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாடலாம்.

விளையாடும் முறை:
ஒரு வட்டம் வரைந்து கொண்டு அதில் காய்களை குவித்து வைக்க வேண்டும். வாய் அடுக்கில் படாமல் ஊத வேண்டும். ஊதலில் கோட்டைத் தாண்டி வரும் காய்களை தனதாக்கிக் கொள்ள வேண்டும். அதிக காய்களை இறுதியில் பெற்றிருந்தாரோ அவரே வெற்றி பெற்றவராகிறார்.

நன்றி

1. விக்கிப்பீடியா

No comments:

Post a Comment