தூரி விளையாட்டுகள்:
தூரி என்றால் ஊஞ்சல் என்று பொருள்படும். தூளி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
ஊஞ்சல் விளையாட்டை சங்க இலக்கியங்களில் ஊசல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தண்த்தாழை வீழீழ் ஊசல்”
– கலித்தொகை -131-15
( உன் ஊஞ்சலை நான் பிடித்து ஆட்டுகிறேன்)
;
“ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற”
– கலித்தொகை -37-14
(ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தேன், அவன் வந்தான், ‘ஐயா, சிறிது ஆட்டிவிடு என்றேன்)
என்று கலித்தொகையிலும்,
“பூங்குழை யூசற் பொறைசால் காதின் காதின்”
- பொருநராற்றுப்படை -30
(குழைமயிர் வெட்டும் கத்திரிக்கோல் போலக் காதில் ஆடியது)
என்று பொருநராற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரி, இனி தூரியின் வகைகளைக் காண்போம்.
கால் தூரி:
இது பெரியவர்கள் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஆடப்படும் விளையாட்டு. பெரியவர்கள் உயரமாக திண்ணைகளிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்வர். அமர்ந்து கொண்டு தங்கள் கால்களை சமமாக வைத்து நீட்டி கீழே வைப்பர். இப்போது இருகால்களின் மேலும் குழந்தை அமர்ந்து கொள்ளும். அவர் குழந்தை உட்கார்ந்திருக்கும் போது தனது காலை மேலே தூக்கியும் இறக்கியும் மாற்றி மாற்றி செய்வார். இது குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவதைப் போல் இருக்கும். இதுவே கால் தூரி ஆகும். இப்படிக் காலை மேலே தூக்கியும் இறக்கும் போது, குழந்தைகளை மேலும் மகிழ்விக்க
“ஏத்தரறச்சான் ஒன்னான்டி...
இறக்கி வைச்சான் ஒன்னான்டி..”
(ஏற்றம் இறைத்தான் என்று அர்த்தம் அதாவது மாடுகட்டி வயலுக்கு நீர் பாய்ச்சும் முறையில் ஏற்றம் என்று பெயர். இந்த முறைபோல் இவ்விளையாட்டு இருப்பதால் இப்படி பாடல் இருக்கலாம்)
என்று பாடிக்கொண்டே காலை ஆட்டுவர்.
தொட்டில் தூரி:
இந்த வகையில் வீட்டில் வேட்டி, சேலை போன்றவற்றையோ தொட்டில் கட்டி ஊஞ்சல் ஆடுவர். இதில் குழந்தைகள் தானாக தொட்டியில் உட்கார்ந்து ஆடலாம் அல்லது யாராவது ஆட்டி விடலாம். தானாக ஆடும்போது தரையில் தன் காலால் குழந்தைத் தானாகவே உந்தித் தள்ள வேண்டும். இப்படி ஆடுவதன் மூலம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. ஏனெனில் கவனமாகப் பிடிக்கவில்லையெனில் குழந்தைக் கீழே விழும் வாய்ப்பும் உள்ளது.
மரதூரி அல்லது மர ஊஞ்சல்:
மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடப்படும் விளையாட்டு. வலுவான கிளைகள் உள்ள மரத்தில் தூரி கட்டுவர். மரக்கிளை வளைவு இல்லாமல் பக்கவாட்டில் நேராக இருக்க வேண்டும். அப்படிப் பட்ட மரத்தில் வலுவான கயிற்றினைக் கொண்டு கட்டப்படும். கயிற்றின் ஒரு நுனியை முதலில் கிளையில் கட்டி இரண்டாவது நுனியினை பலகையிலோ, கோணிப்பையோ அல்லது இரப்பர் டயரோ கொண்டு கட்டிவர். இரண்டடி இடைவெளியில் மற்றொரு கயிற்றினை அதேபோல் கட்டி ஊஞ்சல் அமைப்பர். பிறகு, மாற்றி மாற்றி ஊஞ்சல் விளையாடுவர். இதில் குழந்தைகள் தானாக உந்தியோ அல்லது மற்றவர்கள் தள்ளியோ ஆடுவர். இப்போது குழந்தைகள் பூங்காக்களில் ஊஞ்சலும் ஒரு விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது. சிலர் வீடுகளிலும் ஊஞ்சல் அமைத்துள்ளனர்.
தென்னைமட்டை தூரி:
தென்னை மரத்தில் கீழாக இருக்கும் தென்னை மட்டையை பிடித்துத் தொங்கிக் கொண்டு தூரி ஆடுவதால் இது தென்னை மட்டை தூரி எனப்படுகிறது. எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். தென்னை மட்டையை பிடித்துத் தொங்கிக் கொண்டே குழந்தைகள் தூரி ஆடுவர். ஒரே மட்டையைப் பிடித்து இரண்டு மூன்று குழந்தைகள் கூட சேர்ந்து ஆடுவர். ஆலமரத்தின் விழுதுகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டு தூரி ஆடுவர். புளியமரம், அல்லது மற்ற உறுதியாக இருக்கும் மரங்களின் கிளைகள் கீழாக இருந்தாலும் அவற்றை பிடித்துத் தொங்கிக் கொண்டு தூரி ஆடுவர்.
இதுபோல் மட்டையைப் பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் போது குழந்தை மீது மட்டை விழுந்தால் அந்த குழந்தை இறந்துவிட்டது என்று உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி இறந்தவருக்குச் செய்யும் சில சடங்குகள் செய்த பிறகுதான் அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் உண்டு.
நன்றி:
1. ப.சசிரேகா, திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள்
படங்கள்:
https://www.vikatan.com/sitemap/sitemap-daily-2016-02-17.xml
https://blog.davey.com/2015/07/best-trees-for-hanging-a-tree-swing-tire-wooden-and-seat/
https://gramho.com/media/2096476566214091813

No comments:
Post a Comment