Sunday, 5 April 2020

நமது விளையாட்டுக்கள் - 7:

நான்கு கட்டம் விளையாட்டு:

இதுவரை பலகை விளையாட்டுகளாக பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், நட்சத்திர விளையாட்டு போன்றவை பார்த்தோம். இந்த ஆட்டமும் அதுபோன்று பலகை விளையாட்டு (டீழயசன புயஅந) வீட்டிலேயே நான்கு கட்டம் வரைந்து விளையாடலாம் இது எளிய ஆட்டம்.
இரண்டு நபர்கள் ஆடும் ஆட்டமாகும்.
ஆடுகளம்: வீட்டிலேயே வரைந்து விளையாடலாம்

காய்கள்: சிறு கற்கள்/சோழி/பெரிய அளவிலான விதைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு ஆட்டக்காரரும் வேறு வடிவிலான அல்லது நிறத்திலான காய்களை வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆட்டம் மொத்தம் இரண்டு வகையில் உள்ளது.
வகை 1 இல் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று காய்கள் என மொத்தம் ஆறு காய்கள்.
வகை 2 இல் ஒருவருக்கு 5 காய்கள் மற்றவருக்கு 4 காய்கள்.

ஆட்டமுறை:

வகை 1:

ஒவ்வொருவரும் 3 காய்கள் வைத்திருப்பர். இருவரும் மாறி மாறி தங்கள் காய்களை வைப்பர். எவருடைய 3 காய்கள் நேர்க் கோட்டில் அமைகின்றதோ அவரே வெற்றி பெற்றவராவார். சிலர் முதல் நகர்த்தலிலேயே வெற்றி பெறுவர்.
இந்த விளையாட்டு புத்திக் கூர்மைக்கு உதவக் கூடிய விளையாட்டாக இருக்கிறது. தங்களுடைய செயலில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

வகை 2:
இந்த வகையில் ஒரு ஆட்டக்காரர் 5 காய்களையும் மற்றவர் 4 காய்களையும் வைத்திருப்பர். இந்த ஆட்டத்திலும் முந்தைய வகை போலவே நேர்கோட்டில் எவருடைய 3 காய்கள் இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவராவார். ஆனால், முந்தைய வகையில் குறுக்கே நேர்கோட்டில் 3 காய்கள் இருப்பது ஏற்கப்படாது. ஆனால், இந்த வகையில் குறுக்கு வாட்டில் நேராக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.
இவ்வாட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பைக் காணலாம்.


நன்றி



No comments:

Post a Comment