கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அகர்வால் பவன் என்றே அந்த இடத்திற்கு வழிகாட்டினர்.
இராசாராம் மோகன்ராய் 'சதி' என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க காரணமாக இருந்தவர் என்று பாடப்புத்தகத்தில் படித்திருந்தேன். 'சதி' என்பது மதத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட சதிச்செயல் என்பதால் அது 'சதி ' என்று அழைக்கப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன செய்திகள் வித்தியாசமானதாக இருந்தது. என்னவென்றால் , தாங்கள் 'இராணி சதி' விழா சம்பந்தமாக தீவிர பணிகளில் இருப்பதாக தெரிவித்தார்.
'யாரிந்த இராணி சதி?' தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன்.
'சதி, உடன்கட்டை ஏறும் முறை தெரியுமா? முதன் முதலில் உடன்கட்டை ஏறியவர் பெயர்தான் 'சதி'..'இராணி சதி' அவர்தான் எங்கள் குலதெய்வம், அவருக்கான விழாதான் இது' என்று முடித்தார். (https://en.wikipedia.org/wiki/Rani_Sati)
எனக்கு அழைப்பும் விடுத்தார்.
உடன்கட்டை ஒழிப்பு நிறைவேறிவிட்டதே என்று இருந்தாலும்... தங்கள் மூதாதையரில் ஒருவரை வணங்கும் தன்மை மிகவும் கவர்ந்திருந்தது. எப்படியும் இந்த நிகழ்வை காண வேண்டும் என்று முடிவெடுத்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
புதுமையான கோயிலை காண போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்த நான்...
தோழருக்கு தொடர்பு கொண்டு 'கோயிலுக்கு எப்படி வரவேண்டும் என்று கேட்டேன்?'
கோயில் இல்லை, மண்டபத்தில் தான் நடக்கிறது, சேட் சத்திரம் என்று கேட்டு வாருங்கள் என்று
இறுதியாக அந்த இடத்திற்கு சென்ற எனக்கு இதுவரை நான் கண்டிராத புதுவித அனுபவமாக அலங்காரங்கள், விழாக்கோலங்கள், வழிபாட்டு முறைகள்,ஆண்கள் பெண்கள் என்று அனைவருடைய மகிழ்ச்சியான உற்சாகமான நடனங்கள், புதுவித உணவுகள் (கம்பு கிச்சடி போன்றவை ...), விளையாட்டுகள் என்று அமர்க்களமாக இருந்தது.
வழக்கம் போல் ஆரண்யா அவர்களுடன் ஐக்கியமாகி விட்டார்.
தோழரும் அவரது மகள்களும் நன்முறையில் உபசரித்து அனுப்பினர்.
|
Sunday, 30 December 2018
'சதி'
Thursday, 6 December 2018
நெல் ஜெயராமன்
சத்துணவு குறித்து பேச திருத்துறைப்பூண்டி கிரியேட் நிறுவனத்தின் பயிற்சி இயக்குநர் திரு. ஜெயராமன் அவர்கள் வருவார்கள் என்று ஏகம் பவுண்டேஷனில் இருந்து எனக்கு தகவல் அளித்தார்கள். 2013 சனவரி மாதம் 29 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கிராம அளவிலான சுகாதாரம் பேண நியமிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சியினை ஏகம் பவுண்டேஷனுடன் இணைந்து நடத்தினோம். அப்போது அவரை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அவர் தலைப்பு வருவதற்கு முன்னதாவே வந்து கலந்து கொண்டார் மிகவும் எளிமையாக. பயிற்சி முழுவதும் கவனித்தார். சோதனையாக அவருடைய வகுப்பு மதிய உணவு இடைவேளைக்கு பிறகே இருந்தது. ஆனால், சத்தான உணவு இயற்கை விவசாயம் மூலம் எவ்வாறு செய்வது, நெல் மகசூல் இயற்கை உரம் மூலம் எவ்வாறு பெறுவது , நம் அன்றாட உணவில் உள்ள விஷத்தின் வகைகளையும், உணவு பொருட்களில் எடை கூட்டுவதற்கு பயன்படுத்தும் மருந்துகளும் அதன் விளைவுகளும் பற்றியும் விளக்கினார். அனைவரும் ஆர்வமுடன் தகவல்களை கேட்டு கேள்விக்கணைகளால் தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொண்டனர். எல்லாவற்றிக்கும் பொறுமையாக பதில் அளித்துவிட்டு பிறகு என் அருகில் அமர்ந்த அவர் 'நெல்லின் நேசர்' என்ற தலைப்பிடப்பட்டு நெற்கதிர்களை தூக்கி காட்டியபடி வரப்பில் உட்கார்ந்து பார்க்கும் படம் இன்றும். ஞாபகத்தில் வந்து செல்கிறது. அப்போதுதான் அவர்க்கும் நெல்லுக்கும் உள்ள தொடர்பை அறிந்தேன். அரிசி கடையில் இருக்கும் நெல் வகைகளோடு அவ்வப்போது காதில் விழும் நெல் வகைகள் தான் இருக்கிறது என்று நினைத்திருந்தேன்.
அனால் மற்றுமொருமுறை ஒரு கண்காட்சியில் மறுபடியும் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சேகரித்து வைத்திருந்த நெல்மணி வகைகளை காட்டி மகிழ்ந்தார்.
நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பயிற்சியில் பயிற்றுநராக மட்டுமல்லாது பங்கேற்பாளாராகவும் மாறி அனைவருக்கும் உற்சாகம் அளித்தவர்.... இயற்கை வழியினை உரக்க எடுத்துரைத்தவர் ... நெல்லில் புது வகைகளை கண்டறிந்தவர்...பலருக்கும் வழிகாட்டியாக இருந்தவர்... இப்போது நம்மிடம் இருந்து விடை பெற்றாலும், அவர் வகுத்த பாதைகள் நிச்சயம் நிறைய சாதிக்கும் என்று நம்புகிறேன்.
அய்யாவின் மறைவிற்கு அவருடைய குடும்பத்தினருக்கும் அவர் வழி பின்பற்றுவோருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
Tuesday, 20 November 2018
லியோ டால்ஸ்டாய்
இன்று உலகின் மிகச்சிறந்த புதினங்களில் ஒன்றான 'போரும் அமைதியும்' (War and Peace) புதினத்தின் நாயகன் உருசியா (Russia) நாட்டை சார்ந்த 'லியோ டால்ஸ்டாய்' அவர்களின் நினைவு நாள். நான் இளங்கலை பிரிவில் படித்தபோது இவருடைய சிறுகதையான 'The Three Hermits' படித்து ரசித்திருக்கிறேன். தூய வளனார் கல்லூரியின் நூலகத்தில் இவருடைய புத்தகங்களையும் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா புத்தகங்களையும் தேடி படித்தது ஞாபகத்தில் வந்து செல்கிறது. இவரை பற்றி இங்கு நான் குறிப்பிட முக்கிய காரணம். இவரை அகிம்சை வாதியாகவும், உயிர்களுக்கு அன்பு செலுத்துதல் போன்ற குணங்களை இவர் எழுத்துக்கள் பிரதிபளித்ததற்கு காரணம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை இவர் படித்ததுதான். இந்த திருக்குறள் இவரை மாற்றியதுடன் இவர் எழுத்துக்கள் மூலம் காந்தியடிகளையும் அகிம்சாவாதியாகவும் மாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. திருக்குறளுக்கு பெருமை சேர்த்தவர் பட்டியலில் இவரும் ஒருவர். நீங்களும் படித்து மகிழ அவருடைய சிறு கதையான ' The Three Hermits' இதோ ...
A bishop and several pilgrims are travelling on a fishing boat from Archangel to the Solovétsk Monastery. During the voyage, the bishop overhears a discussion about a remote island, nearby their course, where three old hermits live a spartan existence focused on seeking "salvation for their souls." Inquiring about the hermits, the bishop finds that several of the fishermen claim to have seen the hermits once.
The bishop then informs the captain that he wishes to visit the island. The captain seeks to dissuade him by saying, "the old men are not worth your pains. I have heard say that they are foolish old fellows, who understand nothing, and never speak a word." The bishop insists and the captain steers the ship toward the island. The bishop subsequently sets off in a rowboat to visit. He is met ashore by the three hermits.
The bishop informs the hermits that he has heard of them and of their search for salvation. He inquires how they are seeking salvation and serving God, but the hermits say they do not know how, only that they pray, simply: "Three are ye, three are we, have mercy upon us." Subsequently, the bishop acknowledges that they have a little knowledge but are ignorant of the true meaning of the doctrine and how to pray properly. He tells them that he will teach them "not a way of my own, but the way in which God in the Holy Scriptures has commanded all men to pray to Him" and proceeds to explain the doctrines of the incarnation and the Trinity. He attempts to teach them the Lord's Prayer, the "Our Father", but the simple hermits blunder and cannot remember the words. This compels the bishop to repeat the lesson late into the night. After he is satisfied that they have memorized the prayer, the Bishop departs from the island leaving the hermits with a firm instruction to pray as he has taught them. The bishop then returns to the fisherman's vessel anchored offshore in the rowboat and continues his voyage.
While on board, the bishop notices that their vessel is being followed. At first he thinks a boat is behind them but he soon realizes that the three hermits are running across the surface of the water "as though it were dry land." The hermits catch up to the vessel as the captain stops the boat, and inform the bishop, "We have forgotten your teaching, servant of God. As long as we kept repeating it we remembered, but when we stopped saying it for a time, a word dropped out, and now it has all gone to pieces. We can remember nothing of it. Teach us again." The bishop is humbled and replies to the hermits, "Your own prayer will reach the Lord, men of God. It is not for me to teach you. Pray for us sinners." After this the hermits turn around and walked back to their island.
(Thanks & Source :https://en.wikipedia.org/wiki/The_Three_Hermits)
Monday, 19 November 2018
உலக கழிப்பறை தினம்:
அன்றொரு நாள் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து சென்னையின் கடைசி சுங்க கட்டண வாயிலை கடந்து சென்று கொண்டிருந்தது. திடீரென்று பேருந்துக்குள் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்தனர். சிலர் எதற்கும் நாம் எதாவது அசிங்கத்தை மிதித்து விட்டோமா என தங்கள் பாதணிகளை ஒருமுறை நைசாக பார்த்துக்கொண்டனர். ஓட்டுநர் கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டார். துர்நாற்றம் மிக நெருக்கத்திலும் மிக அதிகமாகவும் வீச ஆரம்பித்தது. சிலர் துர்நாற்றம் தாங்க இயலாமல் மூக்கை இருக்க பற்றி கொண்டு தலையையும் பிடித்துக்கொண்டு தலையையும் குனிந்துகொண்டனர். சில குமட்டல் சத்தமும் கேட்டது. அப்போது ஓட்டுநர் பேருந்திற்கு முன்னே சென்ற வாகனத்தை நோக்கி கையை காட்டினார். அப்போதுதான் அனைவரும் அந்த வாகனத்தை கவனித்தனர். அந்த வாகனம் மல க்கழிவுகளை எங்கேயோ கொட்டிவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதன் கதவுகள் மூடப்படவில்லை. ஓட்டுநர் பேருந்தை மிக மிக வேகமாக இயக்கி அந்த வாகனத்தை கடந்தார். இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னரே அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இதனை சொல்வதற்கு காரணம், தற்போது அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் கூட கழிப்பறைககளை பயன்படுத்தினார் என்று அகழ்வாராய்ச்சிகள் மூலம் நாம் காண முடிகிறது. அதனை நினைத்து ஒரு வகையில் பெருமை கொண்டாலும் இன்னொரு வகையில், கழிவுகள் முறையாக அகற்றப்படாத சூழல் இன்னும் நிகழ்கிறது என்கிற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும்.
- குப்பைகள் கழிவுகள் நன் முறையில் அகற்றப்படுவது வீட்டில் இருந்தே துவங்கவேண்டியது அவசியமாக இருக்கிறது.
- வாய்ப்பிருப்பவர்கள், சுற்று சூழலை பாதிக்காத (ECO-SAN) போன்ற கழிவறைகளை கட்டமைக்கலாம்.
- செரிமான தொட்டிகள் (septic tank ) கட்டப்படும்போது முறையாக கட்டப்படுகிறதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நிலத்தடி நீரின் பாதுகாப்பும் முக்கியம்.
அரசு கீழே உள்ளவைகளை கவனத்தில் கொண்டால்...
- செரிமான தொட்டிகளில் கழிவுகளை உறிஞ்சு செல்பவர்கள் அவைகளை எவ்விதம் அகற்றுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். பொது வெளிகளில் கொட்டப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொது இடங்களில் மக்கள் அசுத்தம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் (பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்களும், தன்னார்வலர்களும், மக்கள் அசுத்தம் செய்வதை தவிர்க்க சுவரில் தெய்வங்களின் படங்களை வரைந்து வைத்து தடுக்கின்றனர்)
- பொது கழிப்பறைகள் நன்முறையில் பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் (மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்)
- முக்கியமாக சாக்கடைகள் வழியாகவோ அல்லது பிற வழிகளில் வெளியேற்றப்படும் திட மற்றும் திரவ கழிவுகள் எங்கு செல்கின்றன. அவைகள் முறையாக சுத்திகரிக்கப்படுகின்றனவா என்பதை கவனிக்க வேண்டியது அரசின் முக்கிய பணியாகும்.
- திட திரவ கழிவுகள் பொது நீர் நிலைகளில் கலக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (தேம்ஸ் நதி மீட்டெடுக்கப்பட்டது போல் கழிவு ஆறாக செல்லும் நீர்நிலைகள் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப் பட வேண்டும்)
- கழிவுகளை சுத்திகரித்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் ஊக்குப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாக நகரங்களில் கழிவு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள் அதிகமாக ஊக்குவிக்கப்படவேண்டும்.
- பல்வேறு வகையான கழிவு மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டமைக்கப்பட்ட வேண்டும். (முடிந்தவரை இயற்கை சார்ந்த அல்லது நுண்ணுயிர் ஊக்கிகள் மூலம் இருப்பது சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்)
- கழிவு மேலாண்மைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு மக்கள் நேரிடையாக கழிவுகளை கையாளுவதை தவிர்க்கப்பட வேண்டும்.
....புதிது புதிதாக உருவெடுக்கும் நோய் தொற்றுகளில் இருந்து மக்களையும் எதிர்கால சந்ததியையும் காப்பாற்ற இயலும், மேலும், நாம் கண்ட இயற்கை வளங்களையும் கொஞ்சமாவது அவர்களும் கண்டு அதன் பயனை முழுமையாக அனுபவிக்க இயலும் என்றே
நம்புகிறேன்.நன்றி!
Friday, 2 November 2018
மனிதருள் மாணிக்கம்
எங்கள் மன்றல் நாளில் காலையிலேயே பெற்றோரிடம் ஆசி வாங்கியாயிற்று. பொது வாழ்க்கையில் அவ்வப்போது ஈடுபடும் எங்களுக்கு, ஊக்கம் கிடைக்க பொது வாழ்விலேயே தன்னை அர்ப்பணித்து மனிதருள் மாணிக்கமாக விளங்கும் ஒருவரை சந்திப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தோம்.
பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை மற்றும் எளிமை என்ற சிறந்த பண்புகளுடன் வாழ்ந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஐயா திரு. ஆர். நல்லக்கண்ணு அவர்களை வெகுநாட்களாகவே எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற வேட்கை இருந்தது. இன்று அவரை எளிதில் சந்திக்க இயலுமா?, வீட்டில் கூட்டமாக ஆட்கள் இருப்பரா?, ஆசி மட்டும் வாங்கிவிட்டு உடனே திரும்பிவிடுவோ ?என்று யோசனையிலேயே சென்றோம்.
நாங்கள் எதிர்பாராதவிதமாகவும், ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் அவ்வளவு பெரிய மனுஷர், 16 வயதில் இருந்தே பொதுவாழ்வில் இருந்து வருபவர், மணல் கொள்ளை, சாதீய அநீதி, நதிநீர் பிரச்சினை, சமூக நீதி, என்று பல வழிகளிலும் தொண்டாற்றியவர், 90வது வயதிற்கு மேலும் போராடிக்கொண்டிருக்கும் போராளி, எழுத்தாளர் என்று பல்முகத் தன்மை கொண்டவர், பேச வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்தோம் ஆனால் மிகவும் எளிமையாகவும் உற்சாகத்துடனும் இரண்டு மணி நேரம் எங்களுடன் உரையாற்றினார்.
அவருடைய பொதுவாழ்க்கைத் துவக்கம், கலைஞர் மு. கருணாநிதி, தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், நம்மாழ்வார், சகாயம் இ.ஆ.ப., சிறுவாணி, தாமிரபரணி நதிநீர் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு, கௌரவக் கொலைகள், பரியேறும் பெருமாள் சினிமா, எங்களுடைய பிண்ணனி போன்றவற்றைக் குறித்து ஆர்வமுடன் பேசினார். எங்களையும் வாழ்த்தி வழியனுப்பினார்.
அவரிடம் பேசியவற்றில் முக்கியமான விடயங்களாக நாங்கள் உணர்ந்தவை:
• நாம் நல்லகாரியம் செய்வதற்கு பொதுவெளியில் தான் வர வேண்டும் என்று அவசியமில்லை. நாம் பணிபுரியும் இடத்திலேயே செய்யலாம்.
• இயற்கை வளத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய பொறுப்பாக உணர வேண்டும்.
• நீர்நிலைகள், மணல் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்.
• நிறையப் படிக்க வேண்டும்
கூடவே எனது மகள் ஆரண்யா, அவரிடம் சென்று கடலை மிட்டாய் கேட்டது (ஐயாவும் உடனே சென்று தன் வீட்டில் இருந்து, வாழைப்பழம், வேர்கடலை, முறுக்கு ஆகியவற்றை எடுத்துவந்து கொடுத்தார்), காரல் மார்க்ஸ் சிலையைப் பார்த்து ‘பெரியார் தாத்தா’ என்று அழைத்தது, அவர் வீட்டில் சுற்றித்திரிந்த ஓணானை விரட்டிச் சென்றது(நகரத்தில் ஓணானைப் பார்ப்பது அபூர்வம்!), அவரிடம் வேர்கடலையை பெற்று சாப்பிட்டது. அவருடன் சேர்ந்து புத்தகம் தேடியது. அவர் வீட்டில் உள்ள செடிகள், பூக்கள் என்று சுற்றி சுற்றி விளையாடியது என்று எங்களையும் ஐயாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள்.
அவர் தொகுத்த 'அணிந்துரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள் புத்தகத்தினையும்', மற்றும் ஜென்னி மார்க்ஸ் அவர்கள் எழுதிய 'எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை புத்தகத்தினையும்' கையொப்பமிட்டு எங்களுக்கு பரிசளித்தார்.
# நிறைவாக இருந்தது எங்கள் நாள்.
Wednesday, 5 September 2018
ஆசிரியர் தினம்
வகுப்பறையில் மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையிலும் பல்வேறு பாடங்களை நமக்கு கற்று கொடுத்த அனைத்து ஆசான்களுக்கும் நன்றிகள்!
Tuesday, 7 August 2018
கலைஞருக்கு இரங்கல்
நான் பிறந்த கல்லக்குடிக்கு
பெருமை சேர்த்த பெரியவர்
என் திருமண நிகழ்விற்க்கு
வாழ்த்து செய்தி அனுப்பி நெகிழ வைத்தவர் - கூடுதலாக
சட்ட மன்ற உறுப்பினரையும்
அனுப்பி வைத்தவர்
பள்ளி பருவத்திலும் சரி
கல்லூரி பருவத்திலும் சரி - உன்
பேச்சு கேட்பதென்றால் என்னை
அழையாமல் வரவழைத்தாய்
எந்தையை உன் தீவிர தொண்டனாக
தொண்டாற்ற செய்தாய்...!
பகுத்தறிவு பகலவனின் பாசறையில் மலர்ந்தவரே !
அண்ணாவின் அன்பு தம்பியாய் காய்த்தவரே !
கோடி தொண்டர்களின் தலைவராய் கனிந்தவரே!
தொய்வில்லா கொள்கை கொண்டவரே!
தொலைநோக்கு திட்டங்கள் வகுத்தவரே!
தொன்மை மொழி தமிழுக்கு மதிப்பு சேர்த்தவரே!
பல்திறன் ஆளுமை கொண்டவரே!
நாகரீக நாவண்மை கொண்டவரே
எல்லோருக்கும் எளிமையாய் நின்றவரே!
நீண்ட பொதுவாழ்வு வாழ்ந்தவரே!
உன் பூத உடல் அஸ்தமனம் ஆனாலும்
நீர் புகுத்தி சென்ற எண்ணங்கள் என்றுமே உதய சூரியனாகவே வலுசேர்க்கும் !
ஓய்வெடுங்கள் ஐயா!
பெருமை சேர்த்த பெரியவர்
என் திருமண நிகழ்விற்க்கு
வாழ்த்து செய்தி அனுப்பி நெகிழ வைத்தவர் - கூடுதலாக
சட்ட மன்ற உறுப்பினரையும்
அனுப்பி வைத்தவர்
பள்ளி பருவத்திலும் சரி
கல்லூரி பருவத்திலும் சரி - உன்
பேச்சு கேட்பதென்றால் என்னை
அழையாமல் வரவழைத்தாய்
எந்தையை உன் தீவிர தொண்டனாக
தொண்டாற்ற செய்தாய்...!
பகுத்தறிவு பகலவனின் பாசறையில் மலர்ந்தவரே !
அண்ணாவின் அன்பு தம்பியாய் காய்த்தவரே !
கோடி தொண்டர்களின் தலைவராய் கனிந்தவரே!
தொய்வில்லா கொள்கை கொண்டவரே!
தொலைநோக்கு திட்டங்கள் வகுத்தவரே!
தொன்மை மொழி தமிழுக்கு மதிப்பு சேர்த்தவரே!
பல்திறன் ஆளுமை கொண்டவரே!
நாகரீக நாவண்மை கொண்டவரே
எல்லோருக்கும் எளிமையாய் நின்றவரே!
நீண்ட பொதுவாழ்வு வாழ்ந்தவரே!
உன் பூத உடல் அஸ்தமனம் ஆனாலும்
நீர் புகுத்தி சென்ற எண்ணங்கள் என்றுமே உதய சூரியனாகவே வலுசேர்க்கும் !
ஓய்வெடுங்கள் ஐயா!
Sunday, 24 June 2018
Pride March
வண்ணங்கள் ஒவ்வொன்றும் அழகானவை...ஒரு சிலருக்கு நீலம், சிலருக்கு கருப்பு, சிலருக்கு வெண்மை என்று சிலருக்கு 2 வண்ணம் சிலருக்கு 3 வண்ணம் சிலருக்கு பல வண்ணங்கள் என்று பிடிக்கும்.அவை அனைத்தும் ஒரே இடத்தில் பார்ப்பது கொள்ளை அழகு. அது போன்ற மக்களிலும் பல வண்ணங்களில் (வகைகளில்~பாலியல் தேர்வின் அடிப்படையில்) இருக்கின்றனர். அவரவர் தேர்வு அவரவர் அழகு. தேர்வுகள் பிறவாக இருந்தாலும் மனிதர்கள் தான் என்று ஒரினமாக திரண்ட பெருமைக்குரிய பேரணி(Pride March) இன்று 10 வது ஆண்டாக எழும்பூரில்(Egmore) நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு பூரிப்படைவது போன்று ஒருவர்க்கொருவர் நட்பு பாராட்டி மகிழ்ந்து களித்தனர்.
வழக்கம் போல் நான் மதிப்புக்குரியவர்களாக பார்க்கும் மக்களின் உரிமைக்காக செயல்படும் முனைவர்.சியாமளா நடராஜ் மற்றும் ராம்கி என்று அழைக்கப்படும் முனைவர். ராமகிருஷ்ணன் அவர்களை அழைத்து சிறப்பளித்தது மேலும் அழகு.
இந்த முறை மனித உரிமைகளின் மற்ற பரிணாமங்களாக இருக்கும் அம்பேத்கர், பெரியார் உருவங்கள் தாங்கிய பதாகைகள், மொழி உணர்வு... போன்றவைகளையும் காண முடிந்தது...
#
சிறப்பு
வழக்கம் போல் நான் மதிப்புக்குரியவர்களாக பார்க்கும் மக்களின் உரிமைக்காக செயல்படும் முனைவர்.சியாமளா நடராஜ் மற்றும் ராம்கி என்று அழைக்கப்படும் முனைவர். ராமகிருஷ்ணன் அவர்களை அழைத்து சிறப்பளித்தது மேலும் அழகு.
இந்த முறை மனித உரிமைகளின் மற்ற பரிணாமங்களாக இருக்கும் அம்பேத்கர், பெரியார் உருவங்கள் தாங்கிய பதாகைகள், மொழி உணர்வு... போன்றவைகளையும் காண முடிந்தது...
#
சிறப்பு
Tuesday, 5 June 2018
உலக சுற்று சூழல் தினம்
உலக சுற்று சூழல் தினம் என்றதும், உடனே இந்த நாளில் மரம் நட்டால் இந்த நாள் சிறப்பாக அமையும் என்ற எண்ணம் தான் முதலில் வந்து நிற்கிறது. ஆனால், இந்த நாளுக்கென்று இல்லாமல், நம் கண்ணுக்கு முன்பாகவோ, கண்ணுக்கு புலப்படாமலோ, விஷமில்லா விவசாயம் செய்தும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரங்கள் நட்டும், தெரிந்தோ தெரியாமலோ விதையினை பரவசெய்வோர், இயற்கை நீர் நிலைகளை பாதுகாக்க முனைவோர், நெகிழி பயன்பாட்டை குறைத்து கொள்வோர் என்று பல வழிகளிலும் இயற்கையின் அழகினை சிதையாமல் பார்த்துகொள்வோரை நினைத்து பார்ப்பதும் அவர்களை பாராட்டுவதும் தான் இந்நாளினை சிறப்பிக்கும் என்று கருதுகிறேன். நெடுவாசல், தூத்துக்குடி, கூடங்குளம், நியூட்ரினோ போன்று பல வகைகளில் இயற்கையை பாதுகாக்க போராடி வரும், போராட்டத்தில் தன் உயிரை கூட மாய்த்திருக்கும் தோழர்களுக்கு என்னுடைய மரியாதைக்குரிய வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
# எதிர்கால சந்ததி சுவாசத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்கட்டும்.
# எதிர்கால சந்ததி சுவாசத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்கட்டும்.
Saturday, 19 May 2018
தமிழ் தேசிய தந்தை - அயோத்திதாசர் - சில குறிப்புகள்:
காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட அயோத்திதாசர் 1845 வருடம் மே-20 ல் சென்னையில் பிறந்தார்.தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் மற்றும் வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடம் கல்வி பயின்றார். தனது குருவின் மீது கொண்ட பக்தியினால் தனது பெயரை அயோத்தி தாசர் என்று மாற்றி கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாருக்கு முன்னதாகவே பகுத்தறிவு கருத்துக்களையும், சாதிய மறுப்பு கருத்துக்களையும் முன்னெடுத்தவர்.
ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியறிவு பெற்றவர்.
திருக்குறள்:
உலக பொதுமறை நாம் பெருமையோடு பார்க்கும் திருக்குறள் நூற்றாண்டு காலங்களாக வழக்கில் இல்லாமல் இருந்தது. பெரும் கல்வி பின்புலத்தில் இருந்த குடும்பத்தில் பிறந்த இவர் தனது குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து திருக்குறளை தொகுத்து மீட்டு எல்லீஸ் துரையிடம் சமர்ப்பித்தார். அதன் பிறகுதான் இன்றைய திருக்குறள் அச்சு வடிவில் வந்தது.
தன்னுடைய 25 ஆவது வயதில், நீலகிரியில் தேயிலை தோட்ட பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்து "அத்வைதானந்த" சபையை நடத்தினார். இதன் மூலம் சாதி பேத உணர்வை ஒழிக்க முற்பட்டார்.
தமிழன்:
19.06.1907 ஆம் ஆண்டு "ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வார இதழ் வெளியிட்டார். ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அச்சுக்கூடமும் பத்திரிக்கை பெயரும் மாறுதல் அடைந்தது. 26.08.1908 இல் "ஒரு பைசா" நீக்கப்பெற்று "தமிழன்" என்ற பெயரில் பத்திரிக்கை வெளியிட்டார்.
தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக கோலார் தங்க வயல், பர்மா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது.
இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் 'தமிழன்' இதழில் இருந்தே துவங்க பெற்றன என உறுதியாக கூறலாம்.
ஞான போதினி, பிரம்மா ஞான போதினி , சுகிர்த வர்த்தமானி, நீலலோசினி, விகடத்தூதன், சுதேசமித்திரன், பிரபஞ்ச மித்ரன், புதுவை மித்திரன், நாஞ்சில் நேசன், தென்னிந்திய டைம்சு என வடமொழியிலும் ஆங்கிலத்திலும் வெளி வந்த காலத்தில் இன உணர்வோடு இனிய தமிழில் தமிழன் என பெயர் சூட்டி வார இதழை நடத்திய தமிழ் தேச உணர்வின் முன்னோடி.
பௌத்தம்
பூர்வ தமிழ் மரபு சாதியில்லா சமூக அடிப்படையில் அமைந்திருந்தது என்ற பண்டிதரின் நிலைப்பாடு தமிழ் வரலாறு குறித்த அடிப்படியான் விவாதத்தை தொடங்கி வைத்தது.
தமிழை அடித்தள மக்களின் நிலைப்பாடுகளில் இருந்து வாசித்தார்.
கால அடிப்படையில் சைவத்தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை என தமிழ் இலக்கிய சான்றுகளின் வழியில் நிரூபித்தார். பூர்வ தமிழின் அறம். காப்பிய மரபுகள், இலக்கணம், இலக்கிய மரபுகள் ஆகியவற்றை சமண பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின என பண்டிதரால் எடுத்துக்காட்ட முடிந்தது
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக எழுப்பிய பண்பாட்டு , மதத் தடைகளை நீக்குவது மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையை கொண்டுவரும். அதற்கான மரபுகளைத் தேடிக்கண்டுபிடிதார். அது "பௌத்தம்" என்ற சாதி ,வருண எதிர்ப்பு மதம்தான் பண்டிதருக்கு புகலிடமாகபட்டது. ஆல்காட்டின் உதவியோடு 1898 இல் பௌத்தம் தழுவினார்.
சென்னை இராயப்பேட்டையில் 'சாக்கிய பௌத்த சங்கம் ' நிறுவினார். சாதியற்ற திராவிடர்களுக்கு முன்னோர் வரலாறுகளையும் பௌத்த தன்மத்தையும் விளக்குதல் மற்றும் நற்பண்பிலும் சமய ஒழுக்கத்திலும் தலித்துகளை முன்னேற்றுதல் போன்ற நோக்கங்களாக இருந்தது.
இந்தியா:
இந்திரன் என்னும் சொல் ஐந்திரன் என்னும் சொல்லின் திரிபு. அதாவது மகத சக்கரவர்த்தித் திருமகன் சித்தார்த்தன் (புத்தர்) கல்லாத்தி (அரச மரம்) மரத்தினடியில் ஐம்பொறிகளை வென்றதால் ஐந்திரன் என்ற பெயர் பெற்றார். அதுவே இந்திரன் என்று திரிந்தது. புத்தரை வணங்கிய சங்கத்தார் இந்திரவிழா நாள் கொண்டாடினர். அந்த விழா எடுக்கும் காலமெல்லாம் மழை பெய்ததால் அந்த அனுபவத்தின் அடிப்படையில் மழைக்கு முன் காட்சியாகும் வானவில்லை இந்திரதனுசென்றும் அவரை எப்போதும் நினைத்து கொண்டாடும் மக்களுக்கு இந்தியர்களென்றும் பெயர். இந்தியர்கள் வாசம் செய்யும் தேசம் இந்தியவென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தனர். "தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வகுடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும். 'மேலும்' கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும், முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால் நாடு பாழாகி சீர் கெட்டுவிடும்' என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்தார். (தமிழன் -30-10-1912)
திராவிட பாண்டியன்
கல்வியால் மட்டுமே தலித் மக்களை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தலித்துகளுக்காக ஒரு பெரிய பள்ளியை சென்னையில் நடத்திய அருட் திரு.டி. ஜான் ரத்தினம் அவர்களோடு நட்புகொண்டார், அவரோடு "திராவிட பாண்டியன்" இதழ் நடத்தினார்.
ஆதி தமிழன் :
பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்ருருவாக்கம் செய்த காலம். ப்ரம்மசமாஜம், ஆரியசமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் இந்துக்கள் வலிய திணித்த காலம். 1861-1891 வரை 'யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்து என பதிவு செய்த காலம். இந்து சமூகத்தின் தீண்டாமை, காணாமை, சாதீய கொடுமையை அதிகமாக அனுபவிக்கும் தலித்துகள் ஒருபோதும் 'இந்து' அடையாளத்தை ஏற்கக்கூடாது என்று அதற்கு மாற்றாக ஒரு அடையாளத்தை தேடினார். இதற்கிடையில் 1881 களில் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்கிறார். "ஆதி தமிழன்" (Original Tamils ) என பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார். அப்போதெல்லாம் சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தது. சாதியின் பெயரால் சாதியற்ற தமிழர்களாக பதிவு செய்தார். இழிவான பெயர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழி என்றார்.
அயோத்தி தாசர் நூல்கள்
- அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
- அம்பிகையம்மன் சரித்திரம்
- அரிச்சந்திரன் பொய்கள்
- ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
- இந்திரர் தேச சரித்திரம்
- இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
- கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
- சாக்கிய முனிவரலாறு
- திருக்குறள் கடவுள் வாழ்த்து
- திருவள்ளுவர் வரலாறு
- நந்தன் சரித்திர தந்திரம்
- நூதன சாதிகளின் உள்வே பீடிகை
- புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
- புத்த மார்க்க வினா விடை
- மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
- முருக கடவுள் வரலாறு
- மோசோயவர்களின் மார்க்கம்
- யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
- விபூதி ஆராய்ச்சி
- விவாஹ விளக்கம்
- வேஷ பிராமண வேதாந்த விவரம்
- பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
- வேஷபிராமண வேதாந்த விவரம்
நன்றி
http://www.tamilvu.org/library/nationalized/pdf/01-ayothithasar/ayothidasappanditharsinthanaikalv-4.pdf
Tuesday, 13 March 2018
Subscribe to:
Posts (Atom)