Thursday, 6 December 2018

நெல் ஜெயராமன்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், Vijaya Kumar உட்பட, பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்சத்துணவு குறித்து பேச திருத்துறைப்பூண்டி கிரியேட் நிறுவனத்தின் பயிற்சி இயக்குநர் திரு. ஜெயராமன் அவர்கள் வருவார்கள் என்று ஏகம் பவுண்டேஷனில் இருந்து எனக்கு தகவல் அளித்தார்கள். 2013 சனவரி மாதம் 29 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கிராம அளவிலான சுகாதாரம் பேண நியமிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சியினை ஏகம் பவுண்டேஷனுடன் இணைந்து நடத்தினோம். அப்போது அவரை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அவர் தலைப்பு வருவதற்கு முன்னதாவே வந்து கலந்து கொண்டார் மிகவும் எளிமையாக. பயிற்சி முழுவதும் கவனித்தார். சோதனையாக அவருடைய வகுப்பு மதிய உணவு இடைவேளைக்கு பிறகே இருந்தது. ஆனால், சத்தான உணவு இயற்கை விவசாயம் மூலம் எவ்வாறு செய்வது, நெல் மகசூல் இயற்கை உரம் மூலம் எவ்வாறு பெறுவது , நம் அன்றாட உணவில் உள்ள விஷத்தின் வகைகளையும், உணவு பொருட்களில் எடை கூட்டுவதற்கு பயன்படுத்தும் மருந்துகளும் அதன் விளைவுகளும் பற்றியும் விளக்கினார். அனைவரும் ஆர்வமுடன் தகவல்களை கேட்டு கேள்விக்கணைகளால் தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொண்டனர். எல்லாவற்றிக்கும் பொறுமையாக பதில் அளித்துவிட்டு பிறகு என் அருகில் அமர்ந்த அவர் 'நெல்லின் நேசர்' என்ற தலைப்பிடப்பட்டு நெற்கதிர்களை தூக்கி காட்டியபடி வரப்பில் உட்கார்ந்து பார்க்கும் படம் இன்றும். ஞாபகத்தில் வந்து செல்கிறது. அப்போதுதான் அவர்க்கும் நெல்லுக்கும் உள்ள தொடர்பை அறிந்தேன். அரிசி கடையில் இருக்கும் நெல் வகைகளோடு அவ்வப்போது காதில் விழும் நெல் வகைகள் தான் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். 
அனால் மற்றுமொருமுறை ஒரு கண்காட்சியில் மறுபடியும் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சேகரித்து வைத்திருந்த நெல்மணி வகைகளை காட்டி மகிழ்ந்தார். 
நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பயிற்சியில் பயிற்றுநராக மட்டுமல்லாது பங்கேற்பாளாராகவும் மாறி அனைவருக்கும் உற்சாகம் அளித்தவர்.... இயற்கை வழியினை உரக்க எடுத்துரைத்தவர் ... நெல்லில் புது வகைகளை கண்டறிந்தவர்...பலருக்கும் வழிகாட்டியாக இருந்தவர்... இப்போது நம்மிடம் இருந்து விடை பெற்றாலும், அவர் வகுத்த பாதைகள் நிச்சயம் நிறைய சாதிக்கும் என்று நம்புகிறேன். 
அய்யாவின் மறைவிற்கு அவருடைய குடும்பத்தினருக்கும் அவர் வழி பின்பற்றுவோருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

No comments:

Post a Comment