Sunday, 30 December 2018

'சதி'

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உட்புறம்



படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அகர்வால் பவன் என்றே அந்த இடத்திற்கு வழிகாட்டினர்.

இராசாராம் மோகன்ராய் 'சதி' என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க காரணமாக இருந்தவர் என்று பாடப்புத்தகத்தில் படித்திருந்தேன். 'சதி' என்பது மதத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட சதிச்செயல் என்பதால் அது 'சதி ' என்று அழைக்கப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன செய்திகள் வித்தியாசமானதாக இருந்தது. என்னவென்றால் , தாங்கள் 'இராணி சதி' விழா சம்பந்தமாக தீவிர பணிகளில் இருப்பதாக தெரிவித்தார்.
'யாரிந்த இராணி சதி?' தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன்.
'சதி, உடன்கட்டை ஏறும் முறை தெரியுமா? முதன் முதலில் உடன்கட்டை ஏறியவர் பெயர்தான் 'சதி'..'இராணி சதி' அவர்தான் எங்கள் குலதெய்வம், அவருக்கான விழாதான் இது' என்று முடித்தார். (https://en.wikipedia.org/wiki/Rani_Sati)
எனக்கு அழைப்பும் விடுத்தார்.
உடன்கட்டை ஒழிப்பு நிறைவேறிவிட்டதே என்று இருந்தாலும்... தங்கள் மூதாதையரில் ஒருவரை வணங்கும் தன்மை மிகவும் கவர்ந்திருந்தது. எப்படியும் இந்த நிகழ்வை காண வேண்டும் என்று முடிவெடுத்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
புதுமையான கோயிலை காண போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்த நான்...
தோழருக்கு தொடர்பு கொண்டு 'கோயிலுக்கு எப்படி வரவேண்டும் என்று கேட்டேன்?'
கோயில் இல்லை, மண்டபத்தில் தான் நடக்கிறது, சேட் சத்திரம் என்று கேட்டு வாருங்கள் என்று 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

இறுதியாக அந்த இடத்திற்கு சென்ற எனக்கு இதுவரை நான் கண்டிராத புதுவித அனுபவமாக அலங்காரங்கள், விழாக்கோலங்கள், வழிபாட்டு முறைகள்,ஆண்கள் பெண்கள் என்று அனைவருடைய மகிழ்ச்சியான உற்சாகமான நடனங்கள், புதுவித உணவுகள் (கம்பு கிச்சடி போன்றவை ...), விளையாட்டுகள் என்று அமர்க்களமாக இருந்தது.
வழக்கம் போல் ஆரண்யா அவர்களுடன் ஐக்கியமாகி விட்டார்.
தோழரும் அவரது மகள்களும் நன்முறையில் உபசரித்து அனுப்பினர்.
#புதுமையான அனுபவம்.

No comments:

Post a Comment