Tuesday, 5 June 2018

உலக சுற்று சூழல் தினம்

உலக சுற்று சூழல் தினம் என்றதும், உடனே இந்த நாளில் மரம் நட்டால் இந்த நாள் சிறப்பாக அமையும் என்ற எண்ணம் தான் முதலில் வந்து நிற்கிறது. ஆனால், இந்த நாளுக்கென்று இல்லாமல், நம் கண்ணுக்கு முன்பாகவோ, கண்ணுக்கு புலப்படாமலோ, விஷமில்லா விவசாயம் செய்தும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரங்கள் நட்டும், தெரிந்தோ தெரியாமலோ விதையினை பரவசெய்வோர், இயற்கை நீர் நிலைகளை பாதுகாக்க முனைவோர், நெகிழி பயன்பாட்டை குறைத்து கொள்வோர் என்று பல வழிகளிலும் இயற்கையின் அழகினை சிதையாமல் பார்த்துகொள்வோரை நினைத்து பார்ப்பதும் அவர்களை பாராட்டுவதும் தான் இந்நாளினை சிறப்பிக்கும் என்று கருதுகிறேன். நெடுவாசல், தூத்துக்குடி, கூடங்குளம், நியூட்ரினோ போன்று பல வகைகளில் இயற்கையை பாதுகாக்க போராடி வரும், போராட்டத்தில் தன் உயிரை கூட மாய்த்திருக்கும் தோழர்களுக்கு என்னுடைய மரியாதைக்குரிய வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
 எதிர்கால சந்ததி சுவாசத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்கட்டும்.

No comments:

Post a Comment