சரித்திரத்தில் படித்ததுண்டு
வீரமங்கை சரிதங்கள்
கோவிலில் தான் உண்டு
தைரிய லெட்சுமி சிற்பங்கள் -நிஜத்தில்
உனை கண்டு வியந்திருந்தேன்!
பன்முகம் கண்டு மதிப்பும் நிறைத்திருந்தேன்!
எதிரியாக இருந்தாலும்-
எட்ட நின்றே
எக்காளம் இடுவர்!
துரோகம் செய்தோர்
துச்சமாக மாற்றப்படுவர்!
தடைகள் எல்லாம்
தடுமாறியே போகும்!
வறியவர் வறுமைக்கு
புது வாழ்வு பிறந்தது!
புதுத்திட்டங்கள் எல்லாம் - மக்களிடம்
விரைந்ததே சென்றது!
இத்தனை இருந்தும் ...
ஆளுமையின் அடையாளம்
அந்தோ சரிந்தது ....!
சகாப்தம் முடிந்தது
புது சரித்திரம் துவங்கியது.
உன்னால் இதுவரை ...
அண்ணா நாமம் வாழ்க!புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர். நாமம் வாழ்க!
இனி...
ஊர் உரைக்கும்
அம்மா நாமம் வாழ்க ....!
No comments:
Post a Comment