திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 18:
திருக்குறள் பொன்மொழிகள்:
101. செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு – 752
102. செயற்கரிய யாவுள நட்பின் - 781
103. நகுதற் பொருட்டன்று நட்டல் -784
104. உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் - 785
105. முகநக நட்பது நட்பன்று – 786
106. நெஞ்சத்து அகநக நட்பது நட்பு -786
107. இடுக்கண் களைவதாம் நட்பு -788
108. உள்ளற்க உள்ளம் சிறுகுவ – 798
109. மருவுக மாசற்றார் கேண்மை -800
110. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை -802
111. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க -827
112. பெரிதினிது பேதையார் கேண்மை – 839
113. அறிவின்மை இன்மையுள் இன்மை – 841
114. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் - 858
115. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக – 861
116. கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை – 872
117. நோவற்ற நொந்தது அறியார்க்கு -877
118. இளைதாக முள்மரம் கொல்க – 879
119. நிழல்நீரும் இன்னாத இன்னா- 881
120. தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்-881
121. அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு – 882
122. உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் - 896
123. உண்ணற்க கள்ளை – 922
124. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் -926
125. நஞ்சுண்பார் கள்ளுண் பவர் -926
126. களித்தறியேன் என்பது கைவிடுக – 928
127. வேண்டற்க வென்றிடினும் சூதினை – 931
128. மிகினும் குறையினும் நோய்செய்யும் -941
129. அற்றால் அறவறிந்து உண்க – 943
130. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் -959
131. காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்-959
132. குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு -960
133. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் -960
134. பெருக்கத்து வேண்டும் பணிதல் -963
135. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா – 969
136. ஒளிஒருவருக்கு உள்ள வெறுக்கை -971
137. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - 972
138. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் -973
139. கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் -973
140. பணியுமாம் என்றும் பெருமை -978
141. அற்றம் மறைக்கும் பெருமை – 980
142. குணநலம் சான்றோர் நலனே -982
143. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் -985
144. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் - 1019
145. குடிசெய்வார்க் கில்லை பருவம் - 1028
146. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் -1031
147. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் -1033
148. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் - 1035
149. இன்பம் ஒருவற்கு இரத்தல் -1052
150. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் -1072
இன்னும் பார்ப்போம்...
No comments:
Post a Comment