Thursday, 11 May 2017

போச்சியா (Boccia) என்றொரு விளையாட்டு










இந்த விளையாட்டு முதலில் மூளை முடக்குவாதத்துடன் (Cerebral Palsy) வாழ்பவர்களுக்காக துவங்கப்பட்டது. பிறகு இடுப்பிற்கு கீழ் தீவிரமாக பாதிப்படைந்த (உ-ம் - தண்டுவட பாதிப்பினால் இடுப்பிற்கு கீழே செயல்பட இயலாதவர்கள்) மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட அனுமதிக்கப்பட்டனர். சுருக்கமாக சொன்னால் தவழும் மாற்றுத்திறனாளிகள் என கொள்ளலாம்.
இந்த வகை விளையாட்டு இந்தியாவிற்கு அறிமுகமானது 2014இல் தான். YWTC (Yes We Too Can) Charitable Trust (Chennai) மற்றும் Choice International (UK) நிறுவனங்கள் இணைந்து கூட்டாக சென்னையில் பயிற்சி நடத்தினர். அதிர்ஷ்டவசமாக முதல் பயிற்சி முகாமில் எமது நிறுவனத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளை அனுப்பி வைத்ததால் மாதிரிக்காக நானும் விளையாண்டு பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
Choice International நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பயிற்சியினை வழங்கினார். அவரே ஏக்தா என்ற அமைப்பிற்கும் இப்பயிற்சியினை வழங்கி இந்த விளையாட்டினை மேம்படுத்த வழிவகுத்துள்ளார். ஏக்தா அமைப்பினை சேர்ந்த திரு. ராஜீவ் மற்றும் அவரது குழுவினர் இந்த மேம்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர். எமது நிறுவனம் சார்பாக தற்போது முதல் கட்டமாக 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. முதல் பயிற்சி 6.5.17 அன்று வேலூரில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று விழுப்புரத்திலும் நாளை கடலூர் மாவட்டத்திலும் அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டாகும். பாரா ஒலிம்பிக்கிலும் இந்த போட்டிகள் உள்ளது. தங்க மாரியப்பனின் வெற்றிக்கு பிறகுதான் பாரா ஒலிம்பிக்கே இந்தியாவில் பார்க்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த பார ஒலிம்பிக்கிற்கு ஏற்கனவே உள்ள விளையாட்டுகளுடன் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டம் களமிறங்க தயாராக உள்ளது. அடுத்தபடியாக போச்சியா விளையாட்டினையும் களமிறக்க ஆயத்தமாகி வருகின்றனர் ஏக்தா அணியினர். தொடரட்டும் அவர்கள் சேவை, புகழ் பெறட்டும் இந்திய அணியின் பெயர்.
உங்கள் மாவட்டத்திலும் இந்த பயிற்சி தேவைப்படுகிறது எனில் ஏக்தா அமைப்பினை தொடர்பு கொள்ளலாம்.
திரு. ராஜுவ் ~9840630268
திரு. சதீஷ் ~9710903660
நன்றி!

ஆரோன் ~ 9952467424

No comments:

Post a Comment