தரங்கம்பாடியில் தோப்பு குழுவினர் செயல்பாடுகள்
நாள்: 06.05.2017
இடம்: குடும்பம், சமுதாய பல்நோக்கு மையம், சாத்தங்குடி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம்.
நிகழ்வில் கலந்து கொண்வடு சிறப்பித்தவர்கள்:
திரு.முத்துகிருஷ்ணன்-காரைக்கால்
திரு.கலைமணி மற்றும் குடும்பத்தினர், திருவாரூர்
திரு.ஆரோன்-சென்னை
திரு.மதி-அரியலூர்
திரு.அன்பு _திருவிளையாட்டம்
திருமதி.கெஜலட்சுமி மற்றும் குடும்பத்தினர் மன்னார்குடி
திரு. நடராஜன் அவர்களின் குடும்பத்தினர் ,உறவினர்கள் மற்றும் சுற்று வட்டார மாணவ மாணவிகள்
மற்றும்
தரங்கை நண்பர்கள்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்: திரு. பொன். நடராஜன்
முன்னுரை:
இயற்கை வளங்களை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் வளப்படுத்தல் என்ற நோக்கோடு தோப்பு என்ற வாட்ஸாப்ப் குழு உருவாக்கப்பட்டது. இதில் இயற்கை வளங்கள் மேம்பாடு குறித்த சிந்தனை அடிப்படையாக கொண்டு ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியில் குழுவில் இணைத்து. இதில் விதை பந்து தயாரித்தலை தெரிந்து கொள்ளவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் முறையினை கற்பிக்கவும், நீர் சேமிப்பு, மறுசுழற்சி, ஆர்வலர்களை ஒருங்கிணைக்கவும் குடும்பம், சமுதாய பல்நோக்கு மையம், சாத்தங்குடி, தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்:
பங்கேற்பாளர்களுக்கு விதை பந்து தயாரித்தல், மரக்கன்று நாற்றங்கால் அமைத்தல்,வீடு தோட்டம் அமைத்தல், தண்ணீர் சிக்கனம் மற்றும் மறுசுழற்சி, மாடி தோட்டம் அமைத்தல், நெகிழி பயன்பாடு தவிர்த்தல் ஆகியன குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சிகளை தோழர். கலைமணி, தோழர். நடராஜ் மற்றும் ஆரோன் ஆகியோர் வழங்கினர்.
தோழர். கலைமணி விதை பந்து மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் போன்றவை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். பங்கேற்பாளர்கள் அனைவரும் விதை பந்துகள் தயாரித்தனர்.
ஓசோன் காற்று அதிகம் வீசக்கூடிய கடற்கரையினையும் பங்கேற்பாளர்கள் கண்டுகளித்தனர். காலம் கடந்தால் தரங்கம்பாடி கோட்டையினை கண்டு களிக்க இயலவில்லை.
மரக்கன்றுகளை பராமரிக்கும்ஆ ர்வமுள்ள குழந்தைகளுக்கு தோழர். கலைமணி அவர்கள் எடுத்து வந்திருந்த யானைகுண்டுமணி, புங்கன், வேம்பு போன்ற 12 வகை மரக்கன்றுகள் வழங்கினார். வளாகத்திலும் ஒரு மரக்கன்று நடப்பட்டது.
மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விதை பந்துகளை உருட்டுவதிலும், கேள்விகள் கேட்பதிலும், பங்கேற்பிலும், உணவு இடைவேளைக்கு பிறகு புத்துணர்வு ஊட்டுவதற்காக அவர்களே விளையாட்டுகளை நடத்தியது என்று அனைத்தும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் 'நமது உலகம் இயற்கை விவசாய நடுவம்' சார்பாக நடத்தப்படும் வாழ்வியல் முகாமிற்கு அழைப்பு விடுத்தார்.
இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முக்கிய கலந்தாய்வுகள்:
- தோப்பு குழு அமைப்பாக செயல்பட விரைந்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டது.
- ஆர்வமுள்ளவர்களையும் தகுதியானவர்களையும் அடையாளம் கண்டு பணிகளை செய்வதென்று கலந்தாலோசிக்கப்பட்டது.
- புவி வெப்பமயமாதலை அடிப்படையாக கொண்டு புவி வெப்பம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
- ஓராண்டு திட்டம் கொண்டு செயல்பாடுகள் அமைக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
- மே 22 - பல்லுயிர் பெருக்க நாள் மற்றும் ஜூன் 5 - சுற்று சூழல் நாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகள் திட்டமிடல்
- தோப்பு குழுவிற்கு நேரிடையாக செயற்களத்தில் இயங்குபவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் புரவலர்கள் அனைவரையும் இணைத்து செல்லுதல்.
- ஒவ்வொரு செயல்பாட்டிலும் விரிவான கண்ணோட்டத்தில் செயல்படுதல்
- சுற்றுசூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், சூழல் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை மாவட்டந்தோறும் முழு ஆர்வத்துடன் பங்கேற்கவும், செயல்படவும், ஆதரவளிக்கவும், வழிகாட்டவும், பொருளுதவி செய்யவும் வாய்ப்புள்ள நபர்களையும் அவர்களின் விபரங்களையும் கண்டறிதல்.
- உள்ளூர் அமைப்புகளை கொண்டுமழைநீர் சேகரிப்பு வாய்ப்புகள், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல் தொடர்பாக கிணறு, குட்டை, குளம், ஏரி போன்றவற்றை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுப்பது.
- ஒவ்வொரு பொருட்கள் உற்பத்தியிலும் நீர் பயன்பாடு-மறைநீர் குறித்த விழிப்புணர்வு அளிப்பது.
- அமைப்பினை வலுவாக்கி செயல்படுத்த முன்னின்று செயல்படக்கூடியவர்களை வைத்து திட்டமிடல் கூட்டம் நடத்துதல்
முடிவுரை:
இந்த செயல்பாட்டில் குழந்தைகளை ஈடுபடுத்தியது மகிழ்ச்சியான அனுபவம். வரும் நிகழ்வுகளில் குழந்தைகளுடன் இளைஞர்களை இணைத்தல், அமைப்பினை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள், அடுத்தகட்ட பணிகள், மக்கள் ஈடுபாடு ஆகியவற்றை முன்னிறுத்திய செயல்பாடுகள் திட்டமிடுவதனை தோப்பு எதிர்பார்த்து நிற்கின்றது.
நன்றி!
அறிக்கை தயாரிப்பு:
க. இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment