மனிதன் என்பவன் தெய்வமாகலாம் !
கண்ணதாசன் வரிகளை கண் முன்னே பார்க்கிறேன்
கண்டுதான் விசுவாசிக்கிறேன் -நீ
மனிதருள் மாணிக்கம் என்று!
எச்சிலையும் துச்சமாகத் தள்ளி
மிச்சங்களை பெற்று...
பணிய வைத்தாய் பரிகசித்தவரையும்!
அருட் பணியே ஆழம் என்றாலும்
சமூக பணியின் மாதிரியாக நின்றாய்!
அமைதியின் இலக்கணம் ஆனாய்!
புனிதர் பட்டம் கொடுத்து
திருச்சபை பெருமை பெற்றது.
மனிதரில் ஒருவனாக மகிழ்ந்து வணங்குகிறேன்!
- இ. ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment