Monday, 12 September 2016

பாரதி நினைவு நாள்

பாரதி நினைவு நாள்!


எழுத வேண்டும் என்று நினைக்கையிலே -வீரம் 
எட்டி பார்க்க வைத்தனை!
எழுத்தில் மட்டும் எட்டி பார்க்கவில்லை புரட்சி!
வாழ்விலும் கூட்டி சென்றே  செய்தாய் மிரட்சி!
காந்தியையும் திகைக்க வைத்தனை! 
மாறுவேட போட்டியிலும் நீயே முந்தினை -பள்ளிப் 
பாட்டு போட்டியிலும் நீயே நிறைந்தனை 
சுதந்திரம் என்றால் உன் நினைவே சுழன்று வந்தனை 
பாடல் பல - அதில் அர்த்தம்  பல வைத்தனை! 
புது கவிக்கு இலக்கணம் வகுத்தனை
உன் வழியில் பல இலக்கம் மாந்தரை தொடர செய்தனை!விடுதலையாயினும்... சமூகமாயினும் ...சமத்துவமாயினும்....
தொண்டு பல செய்தனை!
உன் மேன்மை சொல்ல!உண்டு பல ஏகலைவர்கள் - உனை காணாமல் 
உன் கவி ருசித்து....புது கவி படைத்து....அடி  சுவடாய்...
ஆங்காங்கு முளைத்து வர செய்தனை!
உன் போல் கவி படைக்க வல்லமை இல்லை - எனினும் 
நீ மறைந்த இந்நாளில் - உன் திறம் வியந்து 
சிரம் பணிந்து நினைத்து பார்க்கிறேன் 
உன் புகழ் வாழியவே....

No comments:

Post a Comment