காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லும்போது
நடுவில் ஒரு மரக்கிளையினை பிடித்து கொள்ள வாய்ப்பு கிடைப்பது போன்றுதான் அவ்வப்போது பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கிடைக்கும் சில தினங்கள்.... சோகத்தின் நடுவிலும் கிடைக்கும் இந்த நாளில் வாழ்த்துவதையும் வாழ்த்து பெறுவதையும் அவர்களுக்கு ஒரு சிறந்தது என கருதுகிறேன். இந்நாளை விட்டால் கிடைக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியையும் மாற்ற விரும்பவில்லை.
வருங்காலம் நல் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்
உடல் நலமும் மன நலமும் சிறந்து விளங்கட்டும்
மாற்றத்துக்கான வலிமையினை பெறுங்கள்......
என்னை பெற்றெடுத்த தாயே, வாழ்க்கை துணைவியே, எனதருமை மகளே, ஆருயிர் சகோதரிகளே, அருமை உற்றார்களே, பாச உறவினர்களே, மற்றும் நலம் விரும்பும் அனைத்து தோழிகளே
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment