14.09.2013 அன்று முகநூலில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில். கேள்வி என்ன என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
நண்பரே வணக்கம்!
உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் புத்தரால் பதில் தர முடியாது! ஏனெனில் அவர் வாழ்ந்தபோதே அவருடைய போதனையில் முக்கியமான ஒன்று வீடுபேறு என்பது பொய் என்பதே!
நீங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாறு மதவாதிகளோ அல்லது புத்தரை மதத்துடன் இணைத்த புத்தகத்தில் படித்திருக்க வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன்!
மேலும் நான் உங்களுக்கு பதில் அளிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. ஏனெனில் நானே நமது நண்பர்களுக்கு புத்தரை பற்றி எழுதல்லாம் என்று இருந்தேன்.
முதல் வாசகமான ' உலகுக்கே நீ கடவுள் அவதார போல தோன்றி இருக்கலாம் என்பது' புத்தராலேயே ஏற்று கொள்ள படாத ஒன்று ஏனெனில் அவர் தன்னை எப்போதும் அவதாரம் என்று கூறி கொண்டதே இல்லை.
அவர் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தை மனைவி மற்றும் தந்தை அனைவரிடமும் சொல்லியிருந்தார். (நானும் சிறு வயதில் படித்திருக்கிறேன் புத்தர் தன் மனைவி தூங்கி கொண்டிருக்கும் போது அவர்களை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது அது எவ்வளவு தவறான கதை என்பது). பிற்பாடு பல பெண்களை பிக்குணியாக இணைத்து அவருடைய மனைவியும் அவருடன் பிக்குணியாக இருந்து விட்டார் என்பது தான் வரலாறு. ( இதன் மூலம் இன்னொரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலான மதங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. புத்த மதத்தில் பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது!). புத்தர் வீட்டை விட்டு கிளம்பி வந்தபோது அவர் மகன் ராகுலன் அப்போதுதான் பிறந்த பச்சிளம் குழந்தையாக இருந்தான். அப்போதும் "காலம் நம்மை பிரிகிறது அதே சமயம் நல்ல வாழ்வை தரும் என் நம்புகிறேன்" என்று கூறி விட்டு தான் வந்தார். அவர் சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் அந்த பச்சிளம் அடையவில்லை. இருந்த போதிலும் குற்ற உணர்வு அவரையும் கொள்ளாமல் இல்லை அனால் என்ன செய்வது அவர் நாடு கடத்த பட வேண்டும் என்பது தானே அப்போது எழுந்த சூழல்?(ரோகினி நதி நீர் பிரச்னையில் அவர் சாக்கிய சங்க உறுப்பினர்களிடம் கோலியர்கலுடனான போரில் தான் ஈடுபட முடியாது பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று கூறியதற்கு அவரை நாடு கடத்த வேண்டிய சூழல் வந்தது. அப்போது உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம், நாட்டை விட்டு வெளியேற நீங்கள் தான் என்னை வற்புறுத்தினீர்கள் என்று தெரியாதவாறு நானே வெளியேறுகிறேன். அதற்கு ஓரே வழி, எல்லோரையும் இழந்து துறவியாக செல்லவிருக்கிறேன் என சங்கத்திடம் உறுதி அளித்துவிட்டு தான் இந்த நாட்டில் இருந்து வெளியேறுகிறேன் என்று அவர் வந்தார். ஆனாலும் பின்னொரு காலத்தில் ராகுலன் பெரியவனான பிறகு தனது தாய் இறக்கும் தருவாயில் வந்து புத்தரை சந்தித்து ஆசி பெற்று சென்றதாக வரலாறு! (தந்தை மகனாக அல்ல!)
அவருடைய பொறுப்பற்ற செயல் என்பது கொஞ்சம் கடினமான வார்த்தை. அவர் அப்போது உலகத்தில் உள்ள பரவலாக காணப்பட்ட மூட நம்பிகைகள், ஒருவர் மீது ஒருவர் பாசம் இல்லாத நிலை, மனிதர்களுக்குள் உள்ள ஏற்ற தாழ்வுகள்,நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள், நான் ஏன் முதுமை, நோய் போன்ற துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பன போன்ற விசயங்களுக்கு காரணம் அறிய முற்பட்டார்.
அதற்கு விடை காணமல் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று கல்லாத்தி மரத்தின் கீழ் உட்கார்ந்து விட்டார். அப்போது பத்து தளைகளை விடுத்து உண்மையை உணர்ந்து கொண்டவரானார். அவையாவன:
புத்தர் நிர்வாணமாக இருப்பதை வலியுறுத்தவில்லை (நிர்வான்-(இறப்பு) துன்பங்களில் இருந்து விடுதலை) என்னும் நிலையை தான் அவர் கூறினார். ஏனென்றால் அவர் உடல் சுத்தத்தையும் வலியுறுத்தினார். எப்போதும் அங்கி அணித்திருந்தார். மேலும் புத்த பிக்குகள் மூன்று ஆடைகள், ஒரு பிச்சை பாத்திரம், ஒரு ஊசி, ஒரு தண்ணீர் வடிப்பான், கேசம் மழிக்கும் கத்தி ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு.
நீங்கள் சொல்வது போன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களாலும் அவர்களை திருப்திபடுத்துபவர்களாலும் ஏற்பட்டது. ஏனென்றால் இப்போது ஓங்கி நிற்கும் மதங்கள் எல்லாமே ஆட்சியாளர்களின் இசைவுகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டது தான். (5 - 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் சமணமும் புத்தமும் கோலோச்சி இருந்தது (ஐம் பெரும் காப்பியங்கள் மற்றும் ஐய்ங்குரு காப்பியங்களை இயற்றியவர்களில் பெரும்பாலானோர் இந்த சமயங்களில் இருந்தவர்களே ஆவர்). அப்படிதான் புத்த மதமும்! மகாயானம் மற்றும் ஹீனயானம் என்று வந்தது. அப்புறம் ஒவோர்வரும் அவர் வசதிகேற்ப புத்தரின் கொள்கைகளை அமைத்து கொண்டனர். உண்மையில் புத்தர் எந்த மதத்தினுடைய சம்பிரதாயங்களை எதிர்த்து மக்களுக்கு பிரசாரம் செய்தாரோ! எந்த மதம் புத்த கொள்கைகளை இந்தியாவில் வேரூண்ட விடாமல் தடுக்க முயற்சி செய்ததோ அதே மதமே பிறகு தனது கொளகைகளை தளர்த்தி புத்த கொள்கை வழியை தனது மதத்திற்கான கொள்கையாக ஏற்று கொண்டது (உ-ம்: புலால் உண்ணாமை). அதிலும் ஒரு படி மேலே சென்று தனது கடவுளுடைய அவதாரத்தில் புத்தர் பிறப்பும் ஒன்று என்று மக்களை நம்ப வைத்தது!!! (புத்தர் பன்றி கறி தின்றதாக சொல்லியிருப்பது கூட கடவுளுடன் புத்தரை திரித்து விட்டவர்களின் கட்டு கதை தான்!).
புத்தரின் போதனைகள் பாலி மொழியில் தான் வந்தது. மேலும் புத்தர் சத்ரிய குலத்தில் பிறந்தவர்.
புத்தரை பின்பற்றியது அரசர்கள் மட்டும் இல்லை. திருடராக இருந்தவர் (அங்குலிமாலா), பிச்சைகாரர், தாழ்த்தப்பட்டவர்கள்(சோபாக, உபாலி, பிரக்ரதி (பெண்)), தொழு நோயாளி(சுப்ர புத்தா) என்று பல பிரிவினரும் புத்தர் இருந்த காலதிலேய அவருடன் பிக்குகளாக இருந்தனர். புத்த மதம் மட்டுமல்லாது எல்லா மதமும் பரவியதற்கு ஆட்சியாளர்கள் தான் முக்கிய காரணம்.
புத்தர் தனது இறுதியில் புத்த மதத்தை அடுத்து யார் வழி நடத்துவது என்ற கேள்விக்கு, "புத்த மதத்திற்கு தம்மமே (புத்தர் வடிவமைத்த கொள்கை) வாரிசு. எனக்கு வணக்கம் தெரிவியுங்கள். மாறாக என்னை வழிபடாதீர்கள்". என்று கூறிவிட்டு தான் மறைந்தார்.
நண்பரே வணக்கம்!
உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் புத்தரால் பதில் தர முடியாது! ஏனெனில் அவர் வாழ்ந்தபோதே அவருடைய போதனையில் முக்கியமான ஒன்று வீடுபேறு என்பது பொய் என்பதே!
நீங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாறு மதவாதிகளோ அல்லது புத்தரை மதத்துடன் இணைத்த புத்தகத்தில் படித்திருக்க வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன்!
மேலும் நான் உங்களுக்கு பதில் அளிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. ஏனெனில் நானே நமது நண்பர்களுக்கு புத்தரை பற்றி எழுதல்லாம் என்று இருந்தேன்.
முதல் வாசகமான ' உலகுக்கே நீ கடவுள் அவதார போல தோன்றி இருக்கலாம் என்பது' புத்தராலேயே ஏற்று கொள்ள படாத ஒன்று ஏனெனில் அவர் தன்னை எப்போதும் அவதாரம் என்று கூறி கொண்டதே இல்லை.
அவர் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தை மனைவி மற்றும் தந்தை அனைவரிடமும் சொல்லியிருந்தார். (நானும் சிறு வயதில் படித்திருக்கிறேன் புத்தர் தன் மனைவி தூங்கி கொண்டிருக்கும் போது அவர்களை அப்படியே விட்டு விட்டு வந்து விட்டார் என்பது பிறகுதான் தெரிந்தது அது எவ்வளவு தவறான கதை என்பது). பிற்பாடு பல பெண்களை பிக்குணியாக இணைத்து அவருடைய மனைவியும் அவருடன் பிக்குணியாக இருந்து விட்டார் என்பது தான் வரலாறு. ( இதன் மூலம் இன்னொரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலான மதங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. புத்த மதத்தில் பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது!). புத்தர் வீட்டை விட்டு கிளம்பி வந்தபோது அவர் மகன் ராகுலன் அப்போதுதான் பிறந்த பச்சிளம் குழந்தையாக இருந்தான். அப்போதும் "காலம் நம்மை பிரிகிறது அதே சமயம் நல்ல வாழ்வை தரும் என் நம்புகிறேன்" என்று கூறி விட்டு தான் வந்தார். அவர் சொல்வதை புரிந்து கொள்ளும் பக்குவம் அந்த பச்சிளம் அடையவில்லை. இருந்த போதிலும் குற்ற உணர்வு அவரையும் கொள்ளாமல் இல்லை அனால் என்ன செய்வது அவர் நாடு கடத்த பட வேண்டும் என்பது தானே அப்போது எழுந்த சூழல்?(ரோகினி நதி நீர் பிரச்னையில் அவர் சாக்கிய சங்க உறுப்பினர்களிடம் கோலியர்கலுடனான போரில் தான் ஈடுபட முடியாது பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று கூறியதற்கு அவரை நாடு கடத்த வேண்டிய சூழல் வந்தது. அப்போது உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம், நாட்டை விட்டு வெளியேற நீங்கள் தான் என்னை வற்புறுத்தினீர்கள் என்று தெரியாதவாறு நானே வெளியேறுகிறேன். அதற்கு ஓரே வழி, எல்லோரையும் இழந்து துறவியாக செல்லவிருக்கிறேன் என சங்கத்திடம் உறுதி அளித்துவிட்டு தான் இந்த நாட்டில் இருந்து வெளியேறுகிறேன் என்று அவர் வந்தார். ஆனாலும் பின்னொரு காலத்தில் ராகுலன் பெரியவனான பிறகு தனது தாய் இறக்கும் தருவாயில் வந்து புத்தரை சந்தித்து ஆசி பெற்று சென்றதாக வரலாறு! (தந்தை மகனாக அல்ல!)
அவருடைய பொறுப்பற்ற செயல் என்பது கொஞ்சம் கடினமான வார்த்தை. அவர் அப்போது உலகத்தில் உள்ள பரவலாக காணப்பட்ட மூட நம்பிகைகள், ஒருவர் மீது ஒருவர் பாசம் இல்லாத நிலை, மனிதர்களுக்குள் உள்ள ஏற்ற தாழ்வுகள்,நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள், நான் ஏன் முதுமை, நோய் போன்ற துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பன போன்ற விசயங்களுக்கு காரணம் அறிய முற்பட்டார்.
அதற்கு விடை காணமல் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று கல்லாத்தி மரத்தின் கீழ் உட்கார்ந்து விட்டார். அப்போது பத்து தளைகளை விடுத்து உண்மையை உணர்ந்து கொண்டவரானார். அவையாவன:
- தான் என்பதில் நம்பிக்கை
- சடங்கு சம்பிரதாயங்களை நம்பி இருத்தல்
- பயம்
- புலன் இன்ப ஆசைகள்
- தீய நோக்கம்
- அரு உருவ வாழ்வில் ஆசை
- அருவ வாழ்வில் ஆசை
- தற்பெருமை
- பதட்டம்
- அறியாமை
அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றதால் அந்த மரம் அரச மரம் என்று பெயர் வந்தது. புத்தரை பின் தொடர்ந்தவர்கள் தான் அந்த மரத்தை போதி மரம் என்று கூறினார்களே ஒழிய புத்தர் அப்படி வலியுறுத்தவில்லை. ஏனெனில் அவருடைய பிரசாரங்களின் முக்கிய சாராம்சம் அப்போது நாட்டில் நிலவிய மூட பழக்கங்களை சாடுவதுதான்.
புத்தர் இறந்தவுடன் பிக்குகள் கூடிய முதல் கூட்டத்தில் புத்தரின் போதனைகள் தம்ம பதம் என்ற நூலக தொகுக்கப்பட்டது. இதோ நமது நண்பர்களுக்காக தம்ம பதத்தின் முக்கிய கொள்கைகள்:
- பகைமையை பகைமையால் அழிக்க முடியாது. அன்பால் மட்டுமே பகைமையை வெல்ல முடியும்
- செல்வங்கள் தரும் இன்பங்கள் மாயை. அது ஆசையை உண்டாக்கி வெறியூட்டும். ஆசைக்கு இணையான பெருந்துன்பம் இவ்வுலகில் வேறில்லை.
- தன்னடக்கம் உள்ளவன் அறிவுடன் சிந்தித்து எப்போதும் இன்பமுடன் இருப்பான்.
- இரை தேடும் மீன்கள் சிந்திக்காது, ஆசையில் தூண்டிலில் மாட்டி இரையாகின்றன. இவைபோல மனிதன் பொருளின் மீது ஆசை கொண்டு துன்பம் அடைகின்றான்.
- ஒன்றிக்கான எதிர்மறை இவ்வுலகில் கண்டிப்பாக உண்டு. இவ்வுலகில் அனைத்து பொருட்களும் செயல்களும் எதிர்மறையுடன் பிணைந்துள்ளன. இன்பம் அடையும் ஒரு மனிதன் அதன் எதிர்மறையான துன்பத்தை அடைந்தே தீருவான்.
- பெரும் செல்வ வளத்துடன் வாழ்ந்தாலும் பேராசையால் உந்தப்பட்டவன், ஒருபோதும் மகிழ்ச்சியோ அமைதியோ அடைய மாட்டான். அவற்றை என்றைக்குமே அனுபவிக்க மாட்டான்.
- வாழும் காலங்களில் மகிழ்வை வேண்டியும் இறந்த பின்னர் சொர்க்கத்திற்கு செல்ல விழைந்தும் பலர் விரதம் இருக்கின்றனர். நிகழ்கால வாழ்வில் நம்பிக்கை கொள்ளாமல் எதிர்கால இன்பத்துக்காக நிகழ்காலத்தில் விரதம் இருந்து உடலை வருத்தி துன்பமடைகின்றனர்.
- விரதம் இருக்கும் ஒருவன் பசியால் தளர்ந்து, களைப்பால் தன்னிலை மறக்கிறான். தன்னிலை மறந்து சிந்திக்க திராணியற்றவர் எப்படி ஞானம் எய்த முடியும்?
- உடலின் தேவைகள் தீர்க்கப்படுவதன் மூலமே மனம் அமைதி அடையும். அமைதியான மனதிலே சிந்தித்து செயலாற்ற முடியும். அளவான உணவு உண்டு ஆரோக்கியமாக இருப்பவனே சிந்தித்து வேண்டிய இலக்கை பெற முடியும்.
- "வேதங்கள் புனிதமானவை, குறைகளற்றவை. எனவே அவற்றை யாரும் ஆராய கூடாது" என்று சொல்வதை ஏற்க மாட்டேன். இவ்வுலகில் குறையற்ற எந்த பொருளும் இல்லவே இல்லை. யதார்த்த நிலைக்கு ஒரு பொருள் ஒத்துவரவில்லை எனில் தேவை ஏற்படின் அந்த பொருளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும். மறு பரிசீலிக்கக் கூடாத வேதங்கள், புனிதப் போர்வைக்குள் மறையுமேயானால் அவை யதார்த்த உலகிற்கு தகுதியற்றவை.
- கருத்து சுதந்திரத்தின் மூலமே உண்மையை கண்டறிய முடியும். கருத்து சுதந்திரத்தோடு பரிசீலிக்கக் கூடாத வேதங்கள் உண்மையானவை அல்ல. கருத்து சுதந்திரம் தராத பொருள் தவறானது.
- ஆசை என்னும் தீயை அணைக்காத வரையிலும் ஒருவன் உணர்ச்சிக்கு அடிமையாகி கெடுவான்.
- என் கோட்பாடான தம்மம், பின்பற்றுபவர்களை சொர்கத்திற்கு அழைத்து சொல்வதில்லை. காரணம், சொர்க்கம் என்ற ஒன்று இல்லவே இல்லை. இந்த உலகில் துன்பம் இருந்து வருவதை உணர்த்துவதும், துன்பத்தை போக்க வழிகாட்டுவதும் தம்மத்தின் அடிப்படை ஆகும்.
- ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் தூய்மை, நேர்மை, நல்லொழுக்கம் ஆகிய மூன்றையும் பின்பற்றி நடப்பான் ஆயின் உலகில் உள்ள அனைத்து துன்பங்களுக்கும் ஒரு முடிவு வரும்.
- மனிதன் நல்லவனாக இருக்க விரும்புவதே தூய்மை பாதை ஆகும். தூய்மை பாதையில் வாழ பின்வருவனவற்றை உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
- உயிர்களை துன்புறுத்தவோ கொள்ளவோ கூடாது
- பிறர் பொருளை திருடக் கூடாது
- ஒருவனை போதைக்கு ஆட்படுத்தி அவனின் பொருளை தானமாக அபகரிக்கக் கூடாது.
- போதை உண்டாக்கும் பொருட்களை ஏற்கக்கூடாது.
- பொய் உரைப்பதை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும்.
16 . ஒரு மனிதன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய இரண்டாவது பாதை நேர்மை. அப்பாதையில் செல்ல 7 செயல்களை மனதில் நிறுத்த வேண்டும்.
- சமமா தித்தி (நற்காட்சி)
- சம்மா சங்கப்போ (நல்லெண்ணம்)
- சம்மா வாச்சா (நற்பேச்சு)
- சம்மா மந்தோ (நற்செயல்)
- சம்மா கமந்தோ
- சம்மா அஜிவோ
- சம்மா வ்யாயாமோ (நன்முயற்சி)
- சீலம் (தீமை செய்ய அஞ்சுவது)
- நெக்கமம் (உலகியல் இன்பங்களை துறத்தல்)
- தானம் (சமூக நலனுக்கு தன்னை அர்பணித்தல்)
- வீரியம் (செய்வதாக ஒத்துகொண்ட செயல் முழு ஆற்றலோடு செய்து முடிக்க வேண்டும் )
- காந்தி(பகமை கொண்டவனை சாந்தத்தால் திருத்துதல்)
- அத்தானம் (இலக்கினை அடைவதற்கான தீர்மானம்)
- கருணை (இரக்கம்)
- மைத்ரி (அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்)
- உபேக்கம் (பற்றற்ற தன்மை)
என்னை பொறுத்தவரை மனிதர்கள் துன்பத்தில் இருப்பதும் இன்பத்தில் இருப்பதும் கடவுளால் இல்லை. அப்படி ஒன்று இல்லவே இல்லை. ஒருவனின் செயல்களே அவனுக்கு நன்மையோ அல்லது தீமையோ தருகிறது. தம்மத்தின் கொள்கைகளை கடைபிடித்தால் அவன் செய்யும் செயல்களால் நன்மைகளே விளையும்.
19 . எவர் ஒருவர் மனிதத்தன்மையுடன் உள்ளாரோ, அவர் பிறரை துன்பப் படுத்த மாட்டார். அடக்கமாக இருத்தல், எவரையும் துன்புறுத்தாமல் இருத்தல், பொருட்கள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல் ஆகிய குணங்களை ஒருவர் கடைபிடித்தால் அவர் சான்றோராக உயர்ந்து இருப்பார்.
20 . மிக உயர்ந்த நிலை எய்தியவர்கள் சொன்ன கருத்துக்களை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கருத்துக்களில் எவை அறிவுக்கு ஒத்து போகக்கூடியவை என்பதை ஆராய்ந்து ஏற்று கொள்ளுதலும் புறக்கணிப்பதும் அறிவுடையோரின் பொறுப்பு.
21 . உண்மைக்காகவும், நீதிக்காகவும் எத்தகைய தண்டனையாக இருந்தாலும் ஏற்று கொள்ளுங்கள். நீதி வெல்லும்போது இறுதியில் நீங்களே வெற்றி பெறுவீர்கள்.
22 . "யாகங்கள் கடவுளுக்கும் மக்களுக்கும் தரகர் மாதிரி" என்று சொல்லி யாகங்கள் செய்கிறீர்கள். உயிர் பலி கொடுத்து யாகம் செய்து அனுபவிக்கும் பலன் எப்படி நல்லதாக இருக்க முடியும்?
விலங்குகளை பலிகொடுத்து யாகம் செய்தால், செய்பவரின் ஆன்மா முக்தி அடையும் என்கிறீர்கள். இது உண்மை எனில் உங்கள் தந்தையையோ, பிற உறவுகளையோ பலி கொடுத்தால் விரைவாக சொர்கத்துக்கு செல்லலாமே?
23 . சதுர்வர்க்க கோட்பாட்டை இந்த சமூகம் என்றைக்கு நிராகரித்து ஒதுக்குகிறதோ, அப்போது இந்த உலகம் நல்லதாக இருக்கும். அதுவரை தூய்மை பாதையை, நேர்மை பாதையை, நல்லொழுக்கப் பாதையை மனிதர்கள் ஏற்று நடக்க மாட்டார்கள். காரணம், பிறப்பால் அதிகாரம் செய்யும் கூட்டம் சமூகத்தை நற்பாதைக்கு இட்டு செல்லாது.
24 . "பிரபஞ்சத்தை கடவுள் தான் படைத்தார்" என்று யாராலும் நிரூபிக்க முடியாது. விதையிலிருந்து மரம் உருவானது போலவே இப்பிரபஞ்சம் பரிணமித்தது எனலாம். கடவுளால் படைக்கப்பட்டது என்பது மதங்களின் யூகங்களே ஆகும். வரிசையாக நிற்பவர்களுள் முதலாமவர் சொன்னதையே பின்னுள்ளவர்கள் சொல்லிகொண்டே இருக்கிறார்கள். அவை வீணான சொற்கள்.
25 . கடவுளை வழிபடுபவர்கள் ஒன்றை திரும்பத் திரும்பிச் சொல்கிறார்கள். அதாவது தீசெயல் புரிபவர் பாவங்களால் கறைபட்டவர். பாவத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். அப்படி என்றால், கடவுளால் படைக்கப்பட்ட ஒருவர் துன்பப்படுகிறார் எனில், துன்பப்படுபவரை படைத்த செயலால் கடவுள் பாவச் செயல் செய்தவர் தானே? அவர் தண்டிக்க பட வேண்டியவர் தானே?
26 . கடவுள் உண்டு என்று நம்பும் ஒருவர்தான் அறியாமை, மூட நம்பிக்கை, அச்சம், பொருளியல் விருப்பம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவராவார்.
27 . புகழ்ச்சிக்குரிய 10 செயல்களாக புத்தர் கூறுவது.
- ஈகை
- நல்லொழுக்கம்
- தியானம்
- மரியாதை
- தொண்டு
- பகிர்ந்துகொள்ளல்
- பிறரின் நற்செயல்களில் மகிழ்தல்
- தம்மத்தை செவிமடுத்தல்
- தம்மத்தை விவரித்தல்
- கருத்துக்களை சீர்படுத்துதல்
- கொலை
- களவு
- விபச்சாரம்
- பொய்யுரைத்தல்
- கடும் சொற்களுரைதல்
- புறம் பேசுதல்
- வீணான உரையை பேசுதல்
- அவா
- பகைமை
- தவறான கருத்துகளை பேசுதல்.
- நான் நிச்சயம் முதுமை அடைவேன். அதை யாராலும் தடுக்க முடியாது.
- நான் நிச்சயம் பிணியுறுவேன்.
- விருப்பத்திற்கு உரியனவும் பாசத்திற்கு உரியனவும் மாறுதலுக்கு உட்பட்டதே.
- என் செயல்களுக்கு நானே பொறுப்பானவன்
நீங்கள் சொல்வது போன்ற விஷயங்கள் ஆட்சியாளர்களாலும் அவர்களை திருப்திபடுத்துபவர்களாலும் ஏற்பட்டது. ஏனென்றால் இப்போது ஓங்கி நிற்கும் மதங்கள் எல்லாமே ஆட்சியாளர்களின் இசைவுகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டது தான். (5 - 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் சமணமும் புத்தமும் கோலோச்சி இருந்தது (ஐம் பெரும் காப்பியங்கள் மற்றும் ஐய்ங்குரு காப்பியங்களை இயற்றியவர்களில் பெரும்பாலானோர் இந்த சமயங்களில் இருந்தவர்களே ஆவர்). அப்படிதான் புத்த மதமும்! மகாயானம் மற்றும் ஹீனயானம் என்று வந்தது. அப்புறம் ஒவோர்வரும் அவர் வசதிகேற்ப புத்தரின் கொள்கைகளை அமைத்து கொண்டனர். உண்மையில் புத்தர் எந்த மதத்தினுடைய சம்பிரதாயங்களை எதிர்த்து மக்களுக்கு பிரசாரம் செய்தாரோ! எந்த மதம் புத்த கொள்கைகளை இந்தியாவில் வேரூண்ட விடாமல் தடுக்க முயற்சி செய்ததோ அதே மதமே பிறகு தனது கொளகைகளை தளர்த்தி புத்த கொள்கை வழியை தனது மதத்திற்கான கொள்கையாக ஏற்று கொண்டது (உ-ம்: புலால் உண்ணாமை). அதிலும் ஒரு படி மேலே சென்று தனது கடவுளுடைய அவதாரத்தில் புத்தர் பிறப்பும் ஒன்று என்று மக்களை நம்ப வைத்தது!!! (புத்தர் பன்றி கறி தின்றதாக சொல்லியிருப்பது கூட கடவுளுடன் புத்தரை திரித்து விட்டவர்களின் கட்டு கதை தான்!).
புத்தரின் போதனைகள் பாலி மொழியில் தான் வந்தது. மேலும் புத்தர் சத்ரிய குலத்தில் பிறந்தவர்.
புத்தரை பின்பற்றியது அரசர்கள் மட்டும் இல்லை. திருடராக இருந்தவர் (அங்குலிமாலா), பிச்சைகாரர், தாழ்த்தப்பட்டவர்கள்(சோபாக, உபாலி, பிரக்ரதி (பெண்)), தொழு நோயாளி(சுப்ர புத்தா) என்று பல பிரிவினரும் புத்தர் இருந்த காலதிலேய அவருடன் பிக்குகளாக இருந்தனர். புத்த மதம் மட்டுமல்லாது எல்லா மதமும் பரவியதற்கு ஆட்சியாளர்கள் தான் முக்கிய காரணம்.
புத்தர் தனது இறுதியில் புத்த மதத்தை அடுத்து யார் வழி நடத்துவது என்ற கேள்விக்கு, "புத்த மதத்திற்கு தம்மமே (புத்தர் வடிவமைத்த கொள்கை) வாரிசு. எனக்கு வணக்கம் தெரிவியுங்கள். மாறாக என்னை வழிபடாதீர்கள்". என்று கூறிவிட்டு தான் மறைந்தார்.
நான் மேற்கூறிய வார்த்தைகள் உங்களின் கூற்றில் (முதல் இடுகையில் நேரடியாக புத்தரை சாடியிருந்ததால் மட்டுமே நான் இதை எழுத வேண்டிய சூழல் எழுந்தது. பிற்பகுதில் எழுதியுள்ள இடுகையில் சில மாற்றங்களை செய்துள்ளீர். அதில் உங்கள் கோபம் இப்போது வழிபாடு முறையில் இருப்பது நன்கு தெரிகிறது. அனைத்து மதத்திலும் அதன் கொள்கை மாறுபாடு காலபோக்கில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அக்கிரமத்தை பொறுக்க முடியாதுதான்! ). ஏனெனில் நமது நாட்டில் அனைத்து மூட நம்பிக்கையும் தகர்த்தெறிய பாடுபட்ட அனைவரின் முன்னோடியாக புத்தர் தான் இருந்தார். அவரை நான் மிக சிறந்த ஹீரோவாக பார்கிறேன். அதனால் தான் அவர் பற்றிய விஷயம் தவறாக வெளிப்படும் போது நான் இதை எழுத வேண்டி எழுந்தது.
தங்களை மேற்கண்ட கூற்றில் ஏதேனும் காயபடுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி!
தங்களை மேற்கண்ட கூற்றில் ஏதேனும் காயபடுத்துவதாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி!
No comments:
Post a Comment