Monday, 20 May 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 19

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 19

திருக்குறள் சமுத்திரத்தில் தேர்ந்தெடுத்த முத்துக்கள்:
(பிடித்தவையும் அதிகம் கேட்டவையும்) 
1.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை – 12
2.நீர் இன் றமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான் இன் றமையா தொழுக்கு – 20
3.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் - 26
4.அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மை பூண்டொழுக லான் -30
5.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது – 45
6.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று -49
7.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - 50
8.தெய்வந் தொழஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை – 55
9.குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
முழலைச்சொல் கேளா தவர் -66
10.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - 67
11.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக் கேட்ட தாய் - 69
12.மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல் - 70
13.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும் -71
14.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு – 72
15.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று – 83
16.செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு – 86
17.இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று -100
18.செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது – 101
19.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது -102
20.தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் -104
21.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்ப துநன்று -108
22.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – 110
23.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் - 121
24.யாகாவாரார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு -127
25.தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்ட வடு -129
26.உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் -140
27.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – 148
28.அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை – 151
29.மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு- 204
30.கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்னாற்றும் கொல்லோ உலகு -211
31.தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தப் பொருட்டு – 212
32.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு – 215
33.பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் -216
34.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - 225
35.ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு -231
36.தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று -236
37.அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு – 247
38.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் - 280
39.வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் 
தீமை யிலாத சொலல் - 291
40.பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் -292
41.தன்னெஞ்சு சறிவது பொய்யற்க பொய்த்தப்பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் - 293
42.பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 
எல்லா அறமும் தரும் - 296
43.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று -297
44.புறத்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும் -298
45.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு – 299
46.தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் - 305
47.இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்- 314
48.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் - 319
49.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – 322
50.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு -350
51.எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு – 355
52.படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு -381
53.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு – 385
54.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும் -388
55.கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக – 391
56.எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்னென்ப வாழும் உயிர்க்கு – 392
57.கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - 393
58.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் - 394
59.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு-396
60.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து -398
61.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றவை யவை-400
62.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை – 411
63.செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் -412
64.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு – 423
65.அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் - 428
66.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் -429
67.அறிவுடையார் எல்லாம உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் - 430
68.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் -433
69.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும் - 435
70.மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் - 457
71.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்ப திழுக்கு -467
72.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் - 475
73.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் -479
74.பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது  - 481
75.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்  - 504
76.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
ஆதனை அவன்கண் விடல் - 517
77.காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள -527
78.வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி – 542
79.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு  - 595
80.உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்;த்து  -596
81.பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் - 599
82.முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் - 616
83.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும் -619
84.இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் - 621
85.இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் - 623
86.சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து  - 645
87.வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற  - 661
88.சொல்லுக யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல் -664
89.அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்  -706
90.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு – 737
91.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – 752
92.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்  - 754
93.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு-786
94.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு -788
95.மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று – 941
96.மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்  - 942
97.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - 948
98.உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்  - 949
99.நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – 960
100.மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்  - 969
101.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்  - 972
102.பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து  - 978
103.சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை  - 1031
104.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்  - 1033

இன்னும் பார்ப்போம்...

Monday, 13 May 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 18






திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 18:

திருக்குறள் பொன்மொழிகள்:

101. செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு – 752
102. செயற்கரிய யாவுள நட்பின் - 781
103. நகுதற் பொருட்டன்று நட்டல் -784
104. உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் - 785
105. முகநக நட்பது நட்பன்று – 786
106. நெஞ்சத்து அகநக நட்பது நட்பு -786
107. இடுக்கண் களைவதாம் நட்பு -788
108. உள்ளற்க உள்ளம் சிறுகுவ – 798
109. மருவுக மாசற்றார் கேண்மை -800
110. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை -802
111. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க -827
112. பெரிதினிது பேதையார் கேண்மை – 839
113. அறிவின்மை இன்மையுள் இன்மை – 841
114. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் - 858
115. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக – 861
116. கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை – 872
117. நோவற்ற நொந்தது அறியார்க்கு -877
118. இளைதாக முள்மரம் கொல்க – 879
119. நிழல்நீரும் இன்னாத இன்னா- 881
120. தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்-881
121. அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு – 882
122. உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் - 896
123. உண்ணற்க கள்ளை – 922
124. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் -926
125. நஞ்சுண்பார் கள்ளுண் பவர் -926
126. களித்தறியேன் என்பது கைவிடுக – 928
127. வேண்டற்க வென்றிடினும் சூதினை – 931
128. மிகினும் குறையினும் நோய்செய்யும் -941
129. அற்றால் அறவறிந்து உண்க – 943
130. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் -959
131. காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்-959
132. குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு -960
133. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் -960
134. பெருக்கத்து வேண்டும் பணிதல் -963
135. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா – 969
136. ஒளிஒருவருக்கு உள்ள வெறுக்கை -971
137. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - 972
138. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் -973
139. கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் -973
140. பணியுமாம் என்றும் பெருமை -978
141. அற்றம் மறைக்கும் பெருமை – 980
142. குணநலம் சான்றோர் நலனே -982
143. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் -985
144. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் - 1019
145. குடிசெய்வார்க் கில்லை பருவம் - 1028
146. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் -1031
147. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் -1033
148. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் - 1035
149. இன்பம் ஒருவற்கு இரத்தல் -1052
150. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் -1072

இன்னும் பார்ப்போம்...

Monday, 6 May 2024

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 17

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 17:

51. தன்நெஞ் சறிவது பொய்யற்க – 293
52. பொய்யாமை அன்ன புகழில்லை – 296
53. புறந்தூய்மை நீரான் அமையும் - 298
54. அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் -298
55. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு – 299
56. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் - 301 
57. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க – 305
58. அவர்நாண நன்னயஞ் செய்து விடல் - 314
59. அறவினை யாதெனின் கொல்லாமை – 321 
60. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - 322
61. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் - 349 
62. பற்றுக பற்றற்றான் பற்றினை – 350
63. மெய்ப்பொருள் காண்ப தறிவு – 355
64. தூஉய்மை என்பது அவாவின்மை – 364
65. அற்றவர் என்பார் அவாஅற்றார் - 365
66. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்-388
67. கற்க கசடற -391
68. கண்ணுடையர் என்பர் கற்றோர் - 393
69. தொட்டனைத் தூறும் மணற்கேணி – 396
70. கற்றனைத்து ஊறும் அறிவு – 396
71. கேடில் விழுச்செல்வம் கல்வி – 400
72. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - 411
73. எனைத்தானும் நல்லவை கேட்க – 416
74. அறிவுடையார் ஆவ தறிவார் - 427
75. அஞ்சுவது அஞ்சாமை பேதமை – 428
76. அறிவுடையார் எல்லாம் உடையார்  - 430
77. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை – 435
78. முதலிலார்க்கு ஊதியம் இல்லை – 449
79. நிலத்தியல்பால் நீர் திரிந் தற்றாகும் - 452
80. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் -457
81. எண்ணித் துணிக கருமம் - 467
82. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் - 470
83. ஆற்றின் அளவறிந்து ஈக -477
84. நெடும்புனலுள் வெல்லும் முதலை – 495






85. தேறற்க யாரையும் தேராது – 509
86. காக்கை கரவா கரைந்துண்ணும் -527
87. அச்சம் உடையார்க்கு கரண்இல்லை – 534
88. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் - 577
89. உடைய ரெனப்படுவது ஊக்கம் - 591
90. வெள்ளத் தனைய மலர்நீட்டம் - 595
91. மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு -595
92. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் - 596
93. முயற்சி திருவினை யாக்கும் - 616
94. முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் -619
95. இடுக்கண் வருங்கால் நகுக- 621
96. திறனறிந்து சொல்லுக சொல்லை – 644
97. சொல்லுதல் யார்க்கும் எளிய – 664
98. அடுத்தது காட்டும் பளிங்குபோல் - 706
99. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் -706
100. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - 752 

இன்னும் பார்ப்போம்...