Saturday, 20 June 2020

ஆள் காட்டி பறவை:

ஆள்காட்டி பறவையே
இங்கு யாரிடம் என்னை
காட்டி கொடுக்கிறாய்?
இங்கு மான்களும் இல்லை...!
ஆற்றில் இறங்கி பார்கிறேன் மீன்களும்
கழிவு நீர் செல்வதால் இல்லை...!
உன் செயல் நற்செயலா? - ஏனெனில்
இயேசுவையும் காட்டி கொடுத்த உலகமிது?
ஒவ்வொரு மனிதனும்
எவ்வளவு முறை காட்டி கொடுதிருப்பான்?
கொடுக்கப் பட்டிருப்பான்..?
மனிதர்களிடம் இதில் போட்டியிட்டால் நீ
ஒரு போதும் வெற்றி கனி பறிக்க இயலாது...
அங்கத்திலேயே ஆள்காட்டி விரலை
வைத்திருப்பவர்கள் நாங்கள்...
காட்டிக் கொடுப்பதில்
உனக்குள்ளது காக்கும் இன்பம்...
ஆனால்,
அதனை பொருந்தும் இடத்தில் காட்டுவாயாக
எல்லா இடத்திலும் உன்
திறன் காட்ட நினைத்தால்
மதிப்பில்லா இடத்தில்...
மதிப்பு உணரா இடத்தில்
காட்டப்படும்
திறன் வீண்...
சென்று விடு...
காடுகளில் கத்து..
புள்ளினங்களை காப்பாற்று...
திறன் காட்டு...
(இன்று காலை காவிரி கரையில் ஆள்காட்டி பறவையினை கண்டவுடன் விளைந்த கவிதை)
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment