ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் உலகத்தின்
பாரம்பரிய இடங்களாக சில இடங்களை தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.
அதில் முதலாவதாக உலகமே வியந்து பார்க்க
ஒரு விஷயமாக இருக்க ஆயிரம் வருஷத்துக்கு மேல இருக்கிற தஞ்சாவூர் பெரிய கோயிலை தேர்வு செய்துள்ளார்கள்.
இரண்டாவதாக சொல்ல வேண்டுமானால், இராஜராஜசோழன் போலவே எல்லா
விதங்களிலும் திறமைவாய்ந்த அவருடைய மகன் இராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தை கட்டிய பெரிய கோயில் போலவே ஒரு பெரிய கோயிலை அரியலூர்
மாவட்டத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரதில் காட்டினார். தன் தந்தையின் புகழ் கெட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பெரிய கோயில் கோபுரத்தின் அளவை இந்த கோயில் தாண்டாதவாறு பார்த்து கொண்டார்.
அடுத்ததாக, புகழ்பெற்ற கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஐராவதேசுவரர் கோயில், இங்கு இசை படிக்கட்டுகளும், குதிரைகள் யானைகள் இழுத்து செல்வது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜகம்பிரான் மண்டபமும், 1000 வருடத்திற்க்கு முன்னரே இறைவிக்கென்று தனி கோவிலும் உள்ள பெருமை உடையது.
கல்லிலே கலை வண்ணம்
கண்டான் என்று சொல்ல சொல்லும் அளவிற்கு மகேந்திர பல்லவனால் துவக்கப்பட்ட மாமல்லபுர மரபு கடற்கரை கோவில் மற்றும் சிற்பங்கள், ,5 இரத கோயில்கள், கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, குகைகள் என்று பல சிறப்பங்சங்களை கொண்டது. கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்கள் இதனை பார்க்காமல் விட மாட்டார்கள்.
இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் ஒன்றான நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று.
இவை எல்லாவற்றையும் விட இமயமலையை விட வயதில் மூத்த நம்முடைய
தென்மாநிலங்களில் முக்கியமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா சேர்த்து நீர் வளத்திற்கு முக்கிய
ஜீவாதாரமாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. இது வந்து உலகின் மிகச் சிறந்த ஒரு
பல்லுயிர்ப்பெருக்க ஹாட்ஸ்பாட் என்று யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்துள்ளனர்.
தமிழ்நாட்டுல் இது போன்ற பாரம்பரிய இடங்கள் உண்டு என்று எங்கிருந்தோ ஒருவர் வந்து நமது பகுதியை அங்கீகரிக்கிறார்.
ஆனால் நமது பகுதியிலேயே நாம் பெருமைப்படக் கூடிய பல இடங்கள் உதாரணமாக:
பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் குடியம் குகைகள் -திருவள்ளூர் மாவட்டம்
சித்தன்னவாசல் போன்ற சித்திரபுகழ் தலங்கள்
குடுமியான் மலை போன்ற குடைவரை கோயில் தலங்கள்
திருவரங்கம் போன்ற பெரிய கோபுர தலங்கள்
வேலூர் கோட்டை, செஞ்சி, திருமயம் போன்ற கோட்டை கொத்தளங்கள்
மகாபலிபுரம், கொடும்பாளூர் போன்ற பழங்கால கட்டிடக்கலை கோயில்கள்
கல்லணை, மணிமுத்தாறு, பாபநாசம், மேட்டூர் போன்ற அணைகள்
மாத்தூர் தொட்டிப்பாலம்
போன்று எண்ணற்ற கட்டிடங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.
அதுபோன்றே மணப்பாறை முறுக்கு, காஞ்சிபுரம் கோபுரம் இட்லி, திருநெல்வேலி அல்வா போன்ற உணவுப் பாரம்பரியம்.
ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, பச்சைமலை போன்ற மலைப்பகுதிகளும்
கரகாட்டம், சிலம்பாட்டம், போன்ற நாட்டுப்புற கலைகள்.
பாட்டி வைத்தியம் மற்றும் சுடுமண் பொருட்கள், பழைய பொருட்கள் என்று நல்ல பாரம்பரியங்கள் பல உள்ளன அதனை இப்போது கோடை காலத்தில் கண்டு மகிழ்வது நமது பாரம்பரியத்தை கண்டு ரசிக்கவும், உணர்ந்து மகிழ்ந்து வியக்கவும் வாய்ப்பாக அமையும்.
நன்றி!
க.இ .ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
நன்றி:
No comments:
Post a Comment