இவருக்கு முன்பு 23 தீர்த்தரங்கர்கள் இருந்தாலும், சமண மதத்தினை அதிகம் பரவ செய்த பெருமை இவரையே சாரும். மகாவீரர் வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்குப் பிறந்தார். இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம் வெறுத்து, துறவறம் பூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். ரிஜிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்கள் இவரை ஜெயனா என்று அழைத்தனர். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்கள் ஜெயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்.
புத்தமதம் போன்றே சமயத்திலும் 8 கொள்கைகள் உண்டு. அவற்றில் 3 கருத்துமயமானவை 5 நெறிவழியானவை.
சந்திரகுப்த மௌரியரின் அரசகுரு மூலம் பத்திரபாகு மூலம் தென்னிந்தியாவில் சமண மதம் பரவ ஆரம்பித்தது. இவர் 12000 சமண முனிவர்களை தென்னகம் அழைத்து வந்தார். இவருடைய சீடரான விசாக முனிவர் மூலம் சோழ பாண்டிய நாடுகளில் சமணம் பரவ செய்தார்.
சமண மதம் தமிழகத்துக்கு வந்து ஏறத்தாழ 2300 ஆண்டுகள் ஆகிறது.
இவருடைய பிறந்தநாளில் இவரை பற்றி எழுத்துவதற்க்கு காரணம் இவரால் பரப்பப்பட்ட தமிழகத்தில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது அவற்றில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மத மாற்றம் நோக்கமில்லை.
- களப்பிரர் ஆட்சி காலத்தில் கி . பி. 470 இல் வச்சிரநந்தி என்பவர் திராவிட சங்கம் எனும் ஜைனர்களின் சங்கத்தை மதுரையில் நிறுவினார். இதனை 4ஆம் தமிழ் சங்கம் என்று கூறுவார். இந்தச் சங்கம் இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவிய தமிழ் ஆராய்ச்சி சங்கம் போன்றதல்ல. (காலேடுவெல்லிற்குமுன்பே திராவிடம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது புரிந்துகொள்ளப்படுகிறது)
- சமண சமயத்தின் பிரிவுகள்:
- குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள்:
- ஐம்பெருங்காப்பியங்கள்:
- சீவக சிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- வளையாபதி
- ஐஞ்சிறுகாப்பியங்கள் :
- பெருங்கதை - சுருக்கநூல்-உதயணகுமார காவியம்
- நாக குமார காவியம் யசோதர காவியம்
- சூளாமணி
- நீலகேசி
- நரிவிருத்தம்
- நாலடி நானூறு
- திருக்கலம்பகம்
- தமிழ் சமணப் புலவர்கள்:
- இளங்கோ அடிகள், நூலாசிரியர், சிலப்பதிகாரம்.
- திருத்தக்கதேவர், நூலாசிரியர், சீவக சிந்தாமணி
- கந்தியார்
- குணாட்டியர்
- தோலாமொழித்தேவர், ஆசிரியர், சூளாமணி
- கொங்குவேளிர், ஆசிரியர், பெருங்கதை
- பவணந்தி, ஆசிரியர், நன்னூல்
- மண்டல புருடர், ஆசிரியர், சூடாமணி நிகண்டு & திருப்புகழ்ப் புராணம்
- அமுதசாகரர், ஆசிரியர், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் & அமுதசாகரம்
- அவிரோதி நாதர் , நூலாசிரியர், திருநூற்றந்தாதி
- வாமன முனிவர், மேரு மந்தர புராணம், நூலாசிரியர், சாந்தி புராணம், திருக்கலம்பகம் & சமய திவாகர விருத்தி
- குணபத்திரர், நூலாசிரியர், ஸ்ரீபுராணம்
- சக்கரவர்த்தி நயினார்
- காரியாசான், நூலாசிரியர், சிறுபஞ்சமூலம்
- கணிமேதாவியார், நூலாசிரியர், ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது
- முனைப்பாடியார், நூலாசிரியர், அறநெறிச்சாரம்
- பள்ளிக்கூடம்:
- இன்று நாம் பள்ளிக்கூடம் என்னும் வழக்கு, முந்தைய காலத்தில் சமணர்கள் மலைப்பாறைகளை குடைந்து கற்படுக்கைகளை ஏற்படுத்தியிருந்தனர். படுக்கையறை பள்ளியறை என்று சொல்வது வழக்கம் மாணவர்கள் தங்கள் குருக்களிடம் அவர்கள் தங்கியிருக்கும் பள்ளியறைக்கே சென்றதால் அதற்க்கு பள்ளிக்கூடம் என்று பெயர் பெறலாயிற்று. இந்த பெயர் பௌத்தத்திருக்கும் பொருந்தும். பள்ளி என்றால் சமண பள்ளி அல்லது பௌத்த பள்ளி என்று பொருள்.
- பௌத்தர்களை போலவே சமணர்களும் தாங்கள் எந்த பிராந்தியத்தில் இருக்கிறார்களோ அங்கு வழக்கில் இருக்கும் மொழியிலே இவர்களுடைய பிரச்சாரங்களும் கற்பித்தல்களும் இருக்கும். மக்கள் அறியாத மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது பாவம் என்று சமணர் கருதினர். வசதி படைத்தவர்கள் தங்களுடைய இல்லத்தில் நடைபெறும் திருமணம், இறப்பு போன்ற சடங்குகளில் தம் சமய நூல்களை பிரதி எடுத்து (பனை ஓலையில் ) தானமாக வழங்கி வந்தனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் அத்திமுப்பே எனும் கன்னட அம்மையார் தனது சொந்த செலவில் சாந்தி புராணத்தினை 1000 பிரதிகள் எடுத்து தானமாக வழங்கினார்.
- சமண முனிவர்கள் ஊர் ஊரக சென்று தங்கள் மத கொள்கைகளை விளக்கினர் . அவர்கள் கூடும் கூட்டத்திற்க்கு சங்கம் எனப்பட்டது.
- மீன் பிடித்தல், வேட்டைத்தொழில் போன்ற உயிர் கொலை செய்யும் ஏனைய தொழில்களை இச்சமயம் போற்றி வளர்த்தது.குறிப்பாக பயிர் தொழில் மற்றும் வணிகம். இவ்விரு பிரிவில் அதிகமானோர் இம்மதத்தை பின்பற்றினர்.
- இப்போது சைவராக உள்ளோரில் பெரும்பாலானோர் முன்பு சமணராக இருந்தவர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
- இந்து சமயத்தில் சமண கொள்கை:
- ஊன் உண்ணாமை:
- சமணர்கள் வருவதற்கு முன்பு தமிழகத்திலும், இந்து மதத்திலும் ஊன் உண்ணும் பழக்கம் மத ரீதியாகவே இருந்தது (ஆடு, மாடு, கோழி, உடும்பு, முயல், மான்). இவர்களுடைய உணவு பழக்கத்திற்கு பிறகே காய்கறி உணவு வகையான சைவம் அதிகம் பரவிற்று.
- தீபாவலி
- மகாவீரர், பாவபுரியில் இருந்து மக்களுக்கு விடிய விடிய பிரசங்கம் செய்தார். மக்கள் விடிய விடிய கேட்டு அந்த இடத்திலேயே வீட்டிற்கு செல்லாமல் தூங்கி விட்டனர். பிரசங்கத்தின் முடிவில் தான் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே இறந்துவிட்டார். விழித்து பார்த்த மக்கள் அவர் இறந்திருந்தை கண்டு அரசனுக்கு தெரிவித்தனர். அரசனும் பல அரசர்களை அழைத்து ஆலோசனை செய்து உலகிற்கே ஞானவொளியாகி திகழ்ந்த மகாவீரரை நினைவு கூறும் பொருட்டு அவர் இறந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து விழாக்கோலம் பூணச்செய்தனர் இந்த விழா தீபாவலி எனப்பட்டது (தீபம் -விளக்கு, ஆவலி -வரிசை). மகாவீரர் விடியற்காலையில் இறந்துவிட்டதால், விடியற்காலையில் தீபாவளியன்று விளக்கேற்றும் பழக்கம் இருந்தது. சமணர்கள் பலர் இந்துக்களாக மாறியிருந்தாலும் தங்கள் பழக்கத்தை கைவிட முடியாததால் வேறுவழியில்லாததால் இந்து மதத்தில் தீபாவளி வேறு கதையுடன் கொண்டாடப்படுகிறது.
- அய்யனார்:
- பௌத்த சமயத்தில் இருந்தும் சமண சமயத்தில் இருந்தும் அய்யனார் (சாஸ்தா) இந்து சமயத்தில் ஏற்றுக்கொண்டனர். பௌத்த அய்யனாருக்கு வாகனம் குதிரை,சமண வாகனம் யானை ( இன்றும் அய்யனார் கோவிலில் யானையோ குதிரையோ அல்லது இரண்டையுமோ காணலாம் )
- வடக்கிருத்தல்:
- வடகிருத்தல் என்பது இவர்கள் சமண கொள்கை. உண்ணா நோன்பிருந்து இறத்தல் என்பது பொருள். பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. சல்லேகனை செய்வோர் தருப்பைப் புல்லின் மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவு கொள்ளாமல் இருக்க வேண்டும். வேண்டுமானால் நீர் மட்டும் அருந்தலாம். சல்லேகனை இருக்கும்போது எதையும் மனதில் நினைக்காமலும் விரும்பாமலும் தூய மனதோடு தீர்த்தங்கரர் அல்லது அருகரை தியானிக்க வேண்டும். சமணர் சல்லேகனை இருக்கும் பொது வடக்கு நோக்கி அமர்வது வழக்கம். வடக்கு புண்ணிய திசை என்பது அவர்கள் கொள்கை. சங்க புலவர் கபிலர் தனது நண்பர் பாரி வள்ளல் இறந்த பிறகும், கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து இறந்தபிறகு பிசிராந்தையார் அவர் உடலருகே வடக்கிருந்து உயிர்விட்டார். சோழனின் மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் அவ்வாறே உயிர் விட்டார். முதுமக்கள் தாழி கழுகுமலை, சித்தன்னவாசல் போன்ற சமண துறவிகள் வாழ்ந்த முக்கிய பகுதிகளில் காணப்படுவதாலும் வடகிருத்தலில் மூப்படைந்தவர்கள் வடகிருத்தல் முறை இருந்ததாலும், மூப்படைந்தவர்களை, நோயுற்றவர்களை இந்த முறையில் வடக்கிருக்க வைத்திருக்கலாம் என்று கருதுகிறேன். , இந்த முறை சமணத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
- வாய்ப்பு கிடைத்தால் அருகில் உள்ள சமண தலங்களை பார்த்து வருதல் அவர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டினை மேலும் அறிந்து கொள்ள உதவும்.
புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம்:
- பில்லர், மதுரை,
- சித்தன்னவாசல், புதுக்கோட்டை
- அன்னவாசல், புதுக்கோட்டை
1. தமிழும் சமணமும் , மயிலை சீனி வேங்கடசாமி,
No comments:
Post a Comment