நம்மில் பலரும் பாரம்பரியத்தை கைவிடக்கூடாது என்ற கொள்கையில் தீவிரமாக இருப்பதுண்டு. பாரம்பரியம் என்பது நீண்ட மரபு என்று கொண்டாலும் அது தொன்மை என்ற அர்த்தத்தினையும் குறிக்கிறது. இதனை நான் எதற்கு இங்கு எடுத்துரைக்கிறேன்? நாம் பாரம்பரியமாக மரபுகளை மட்டும் தாங்கிவரவில்லை சில நோய்களையும் தான்!.
அவற்றில் முக்கியமானது.
எலும்புருக்கி என்றும் அழைக்கப்படும் காசநோய். 18000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக்கூடிய எருமையின் எச்சங்களில் இருந்து காச நோயை உண்டாக்கும் கிருமியான மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குளோஸிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எகிப்தில் பாடம் செய்யப்பட்டிருந்த 'மம்மி' யின் உடலில் இந்த நோய்த்தொற்று இருந்துள்ளது. இவ்வளவு காலம் கடந்து இன்னும் அழிக்கப்படாத நிலையில் மிக பெரிய வலிமையுடன் உலகில் வளம் வந்து கொண்டிருக்கிறது. நெடுங்காலமாக இருந்தாலும் என்ன பெரியதாக பாதிப்பு வந்து விட போகிறது என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது!
காசநோய் இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார பிரச்சினை
ஒரு வருடத்திற்கு 3 இலட்சம் இந்தியர்கள் இறக்கின்றனர்.
ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் இந்நோயால் ஒருவர் இறக்கிறார்.
இந்த வியாதியால் ஒரு வருடத்திற்கு சுமார் 2,80,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
நாம் வீட்டில் கொசுவை விரட்ட ஆரம்பத்தில் வேப்பிலை மற்றும் சில மூலிகைகளை எரித்து புகைமூட்டி விரட்டினார்கள், நவீனமயமாக்கலின் விளைவாய் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தினோம், பிறகு கொசுவிரட்ட அட்டையினை (Pad) பயன்படுத்தினோம், பிறகு எண்ணெய் (ஆயில்), பசை (cream ) மட்டை (Bat) , திரவம் (liquid) திரவத்திலும் 6 மணி நேரம் 8 மணி நேரம், குறைந்த வீரியம் அதிக வீரியம் என்று வித விதமாக நாம் கொசுக்களை விரட்டவும் அழிக்கவும் பலவிதங்களை கையாண்டோம். ஆனால் விளைவு, உருவத்தில் சிறியதாக இருந்த கொசுக்கள் இப்போது பெரிய அளவில் வந்து நிற்கின்றன. நாம் ஒவ்வொரு முறையும் முந்தைய வீரியத்தை விட அடுத்த வீரியத்திற்க்கு செல்லும் போது அந்த கொசுக்கள் அந்த வீரியத்தினை எதிர்கொள்ள முடியாமல் முழுமையாக விரட்டியடிக்காமல் நமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதன் விளைவு. கொசுவானது ஒவ்வொரு வீரியத்தினையும் எதிர் கொள்ள தன்னை தயார்படுத்துகிறது. அதன் விளைவு நாம் முந்தையதை விட அதிக வீரியத்தினை வழங்கும் திரவத்தை தேடுகிறோம். அதே போன்றே காச நோயிலும் மருந்தினை முறையாக எடுக்காமல் விட்டு விட்டு எடுப்பது, அல்லது சில அறிகுறிகள் மறைய ஆரம்பித்தவுடன் மருந்து எடுத்து கொள்வதை நிறுத்தி கொள்வது (இது பொதுவாகவே அனைத்து வியாதிகளுக்கும் பொருந்தும் ) போன்ற பல காரணங்களால் Totally Drug-Resistant Tuberculosis என்ற நிலை ஏற்படுகிறது. இது Multi-drug-resistant tuberculosis (MDR-T என்ற நிலையில் இருந்து Extensively drug-resistant tuberculosis (XDR-TB) என்ற நிலை வரை விரிவடைகிறது. ஒரு நிலையில் இருந்து அடுத்த வீரியம் அதிகம் உள்ள மருந்துகளை எடுத்து கொள்ள நேர்கையில் அதற்கான பக்க விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
காய்ச்சல்
இரவில் வியர்த்தல்
பசியின்மை
எடை குறைதல்
உடல் சோர்வு
நெஞ்சு வலி
இருமலுடன் இரத்தம் கலந்து வருதல்
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல்
போன்ற இல்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியினால் செயல் படாமல் இருக்கலாம். ஆனால் எப்போது எதிர்ப்பு சக்தி குறைய நேரிடுகிறதோ அப்போது தீவிர காசநோயாக மாற வாய்ப்புள்ளது.
காச நோயினை தடுப்பதற்க்கு மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து கொள்வதும், பரிந்துரை செய்வதும் நலம். பொது இடத்தில் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ வாயினை கைகளாலோ அல்லது கைக்குட்டையால் மூடிக்கொண்டு தும்மலாம் அல்லது இருமலாம், வேறு எவரேனும் இருமுவாரெனில் நாம் நமது வாய், மூக்கு வழியாக செல்லாமல் பொத்திக்கொள்ள வேண்டும். பொது சுத்தம் சுகாதார விஷயங்களை கையாள வேண்டும். உடல் நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை (உடற்பயிற்சி, சத்தான ஆகாரம்.. ) எடுக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
https://tbcindia.gov.in/
https://en.wikipedia.org/wiki/Tuberculosis
https://www.youtube.com/watch?v=n5Q_a_yIQqU
http://www.tuberculosisjaffna.com/
நன்றி
இ . ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment