கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அகர்வால் பவன் என்றே அந்த இடத்திற்கு வழிகாட்டினர்.
இராசாராம் மோகன்ராய் 'சதி' என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க காரணமாக இருந்தவர் என்று பாடப்புத்தகத்தில் படித்திருந்தேன். 'சதி' என்பது மதத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட சதிச்செயல் என்பதால் அது 'சதி ' என்று அழைக்கப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால், சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன செய்திகள் வித்தியாசமானதாக இருந்தது. என்னவென்றால் , தாங்கள் 'இராணி சதி' விழா சம்பந்தமாக தீவிர பணிகளில் இருப்பதாக தெரிவித்தார்.
'யாரிந்த இராணி சதி?' தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன்.
'சதி, உடன்கட்டை ஏறும் முறை தெரியுமா? முதன் முதலில் உடன்கட்டை ஏறியவர் பெயர்தான் 'சதி'..'இராணி சதி' அவர்தான் எங்கள் குலதெய்வம், அவருக்கான விழாதான் இது' என்று முடித்தார். (https://en.wikipedia.org/wiki/Rani_Sati)
எனக்கு அழைப்பும் விடுத்தார்.
உடன்கட்டை ஒழிப்பு நிறைவேறிவிட்டதே என்று இருந்தாலும்... தங்கள் மூதாதையரில் ஒருவரை வணங்கும் தன்மை மிகவும் கவர்ந்திருந்தது. எப்படியும் இந்த நிகழ்வை காண வேண்டும் என்று முடிவெடுத்து மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
புதுமையான கோயிலை காண போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்த நான்...
தோழருக்கு தொடர்பு கொண்டு 'கோயிலுக்கு எப்படி வரவேண்டும் என்று கேட்டேன்?'
கோயில் இல்லை, மண்டபத்தில் தான் நடக்கிறது, சேட் சத்திரம் என்று கேட்டு வாருங்கள் என்று
இறுதியாக அந்த இடத்திற்கு சென்ற எனக்கு இதுவரை நான் கண்டிராத புதுவித அனுபவமாக அலங்காரங்கள், விழாக்கோலங்கள், வழிபாட்டு முறைகள்,ஆண்கள் பெண்கள் என்று அனைவருடைய மகிழ்ச்சியான உற்சாகமான நடனங்கள், புதுவித உணவுகள் (கம்பு கிச்சடி போன்றவை ...), விளையாட்டுகள் என்று அமர்க்களமாக இருந்தது.
வழக்கம் போல் ஆரண்யா அவர்களுடன் ஐக்கியமாகி விட்டார்.
தோழரும் அவரது மகள்களும் நன்முறையில் உபசரித்து அனுப்பினர்.
|
Sunday, 30 December 2018
'சதி'
Thursday, 6 December 2018
நெல் ஜெயராமன்
சத்துணவு குறித்து பேச திருத்துறைப்பூண்டி கிரியேட் நிறுவனத்தின் பயிற்சி இயக்குநர் திரு. ஜெயராமன் அவர்கள் வருவார்கள் என்று ஏகம் பவுண்டேஷனில் இருந்து எனக்கு தகவல் அளித்தார்கள். 2013 சனவரி மாதம் 29 ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கிராம அளவிலான சுகாதாரம் பேண நியமிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சியினை ஏகம் பவுண்டேஷனுடன் இணைந்து நடத்தினோம். அப்போது அவரை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அவர் தலைப்பு வருவதற்கு முன்னதாவே வந்து கலந்து கொண்டார் மிகவும் எளிமையாக. பயிற்சி முழுவதும் கவனித்தார். சோதனையாக அவருடைய வகுப்பு மதிய உணவு இடைவேளைக்கு பிறகே இருந்தது. ஆனால், சத்தான உணவு இயற்கை விவசாயம் மூலம் எவ்வாறு செய்வது, நெல் மகசூல் இயற்கை உரம் மூலம் எவ்வாறு பெறுவது , நம் அன்றாட உணவில் உள்ள விஷத்தின் வகைகளையும், உணவு பொருட்களில் எடை கூட்டுவதற்கு பயன்படுத்தும் மருந்துகளும் அதன் விளைவுகளும் பற்றியும் விளக்கினார். அனைவரும் ஆர்வமுடன் தகவல்களை கேட்டு கேள்விக்கணைகளால் தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொண்டனர். எல்லாவற்றிக்கும் பொறுமையாக பதில் அளித்துவிட்டு பிறகு என் அருகில் அமர்ந்த அவர் 'நெல்லின் நேசர்' என்ற தலைப்பிடப்பட்டு நெற்கதிர்களை தூக்கி காட்டியபடி வரப்பில் உட்கார்ந்து பார்க்கும் படம் இன்றும். ஞாபகத்தில் வந்து செல்கிறது. அப்போதுதான் அவர்க்கும் நெல்லுக்கும் உள்ள தொடர்பை அறிந்தேன். அரிசி கடையில் இருக்கும் நெல் வகைகளோடு அவ்வப்போது காதில் விழும் நெல் வகைகள் தான் இருக்கிறது என்று நினைத்திருந்தேன்.
அனால் மற்றுமொருமுறை ஒரு கண்காட்சியில் மறுபடியும் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சேகரித்து வைத்திருந்த நெல்மணி வகைகளை காட்டி மகிழ்ந்தார்.
நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பயிற்சியில் பயிற்றுநராக மட்டுமல்லாது பங்கேற்பாளாராகவும் மாறி அனைவருக்கும் உற்சாகம் அளித்தவர்.... இயற்கை வழியினை உரக்க எடுத்துரைத்தவர் ... நெல்லில் புது வகைகளை கண்டறிந்தவர்...பலருக்கும் வழிகாட்டியாக இருந்தவர்... இப்போது நம்மிடம் இருந்து விடை பெற்றாலும், அவர் வகுத்த பாதைகள் நிச்சயம் நிறைய சாதிக்கும் என்று நம்புகிறேன்.
அய்யாவின் மறைவிற்கு அவருடைய குடும்பத்தினருக்கும் அவர் வழி பின்பற்றுவோருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
Subscribe to:
Posts (Atom)