“நம்ம தலைவர் வாக்களித்தபடி திரும்பப்பெறும் தீர்மானத்தை துவக்கி வைக்கும் விதமாக நமது தலைவர் இப்போது தனது சீர்வரிசை பொருட்களுக்கு ஈடாக ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலையினை தனது மாமனார் குடும்பத்திற்கு வழங்குவார்……” பிரச்சார பீரங்கி செங்குட்டுவன் முழங்க தினகரன் முகம் தவிர அனைவருடைய முகத்திலுமே மகிழ்ச்சி தாண்டவமாடியது.
“அது என்னங்க திரும்பப் பெறும் தீர்மானம்?”
“காக்கவே களமிளங்கியிருப்போர் கட்சியினை புதிததாகக் துவக்கியிருக்கும் தினகரன் மக்களுக்கு புதுமையைப் புகுத்தி, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று தீவிர திட்டம் வைத்திருந்தார். அதனால் கட்சியினை ஆரம்பிக்கும் பணியினை மூன்று வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கினார். அதாவது, தினமும் பத்திரிக்கையினை படித்து அல்லது டிவியில் வரும் செய்திகளை உடனுக்குடன் பார்த்து, அதில் மக்களிடம் எப்படி பேசினால் தன் பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதனை மிகவும் கவனமாக யோசித்து கூடவே அவர் என்ன சொன்னாலும் தட்டாமல் தலையாட்டும் நபர்களை மட்டும் வைத்து அவரே உருவாக்கிய ‘யோசித்து வழி சொல்வோர்’ சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுக்கொரு யோசனையினை சொல்வார்கள். அதில் அவருக்கு எது சரியென்று படுகிறதோ, அந்த யோசனையை உடனே பத்திரிக்கை, தொலைக்காட்சின்னு கூப்பிட்டு பேட்டி கொடுத்துவிடுவார். இவர் என்ன சொன்னாலும் எழுதுவதற்காக, ஒரு பத்திரிக்கையையும் தொடங்கினார், அதில் அவர் எழுத்துக்கென்று ஒரு பக்கம், அவர் அன்று என்னனென்ன செய்தார், எங்கு செல்லப் போகிறார் கிட்டத்தட்ட அவருடைய டைரி என்று வைத்துக்கொள்ளலாம் அதற்கென்று ஒரு பக்கம் இருக்கும், மத்தபடி முந்தைய நாள் இரவு நெட்டில் பிற ஊடகங்களில் இருந்து சுட்ட செய்திகள் இருக்கும் மத்தபடி எல்லாமே சினிமா விளம்பரங்கள் மற்றும் வர்த்தக விளம்பரமாகத்தான் இருக்கும்.
ஏப்போதுமே தன்னுடைய திட்டங்கள் வித்தியாசமானதாகவும் அதே சமயம் மக்களுக்குப் பயனள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார் அதில் தொழில்நுட்ப வீடு திட்டம், திங்கள் விடுமுறை திட்டம், வீட்டுக்குள்ளே விவசாயம் திட்டம், ஊர் கூடி தூர் வாரல் திட்டம், ஏர் பிடித்தல் திட்டம், விதவையை மணந்தவருக்கு ஸ்கூட்டர் தரும் திட்டம், அனைவருக்கும் சத்து உருண்டை திட்டம், அனைவரும் சமையல் கலை திட்டம், சாக்கடையில் மின்சார திட்டம், நெகிழி குறைத்து மகிழ்வை பெருக்கு திட்டம், குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம், பள்ளிகளை அரசு நிர்வகிக்கும் திட்டம், மருத்துவமனைகள் கட்டும் திட்டம், நீர் விவசாயம் திட்டம், விவசாயம் செய்தால் பென்ஸன் தரும் திட்டம், பண்ட மாற்று திட்டம்; திட்டம் … போன்ற பல்வேறு திட்டங்களை தான் ஆட்சிக்கு வந்தால் செய்வேன் என்று தன்னுடைய கட்சி உறுப்பினர்களை அழைத்துச் சென்று கோவிலுக்கு முன் சத்தியம் செய்தார்.
இது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்தது. அன்று அப்படித்தான் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து கேட்டார்.
“நிறைய திட்டங்களை சொல்றீங்களே, இதெல்லாம் நீங்க செய்வீங்கன்னு நாங்க எப்படி நம்புறது? ஏற்கனவே நாங்க நம்பி நம்பி ஓட்டு போட்டவங்க எல்லாம் எங்க நம்பிக்கையில சாணி அடிச்சிட்டாங்க! இப்ப நீ வேறயா? போய் வேற வேலை இருந்தா பாருய்யா, வந்துட்டாங்க மைக்க தூக்கிக்கிட்டு..” ஆவேசமாகப் பேச ஆரம்பித்தவரை தொண்டர்கள் தாக்க விரைந்தார்கள் அவர்களை அமைதிப்படுத்தினார். தினகரன்.
“சரி, நான் சொன்ன பல விஷயங்கள் எல்லாமே ஆட்சிக்கு வந்தபிறகு தான் செய்ய முடியும், ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நானும் எனது தொண்டர்களும் என்னுடைய சீர்pய திட்டமான திரும்பப் பெறும் தீர்மானம் திட்டத்தினை செயல்படுத்துவோம் என்று உங்களுக்கு இதன் மூலம் உறுதிகூறுகிறேன்.”
அன்று இரவே கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தினகரன் பேச ஆரம்பித்தார்.
“தோழர்களே, இன்று முதல் நாம் மக்களுக்கு நம்முடைய திறமையை நன்முறையில் வெளிக்காட்ட நமக்கு அற்புதமான வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. மக்கள் நம்மிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டியது நமது கடமை. நம்முடைய திரும்பப் பெறும் தீர்;மானத்தை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் அதற்கு தயாரா தோழர்களே…?”
“தலைவரே, இந்தத் திரும்பப் பெறும் தீர்;மானம் என்றால் என்ன தலைவரே முதல்ல எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்க…”
“திரும்பப் பெறும் தீர்மானம் என்றால் ஒவ்வொரு திருமணமான ஆண்மகனும் எடுத்துக் கொள்ள வேண்டிய தீர்;மானம். அதாவது, நம்முடைய கட்சியின் கொள்கைப்படி பெண்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்;களையும் நம்மைப் போலவே கருத வேண்டும்.”
சரி என்பது போல பிரதிநிதிகள் தலையாட்டினர்.
“ஒவ்வொரு பெண்ணும் ஒரு உயிர் தானே… அப்படி இருக்கையில் நாம் நமது திருமணத்தின் போது வரதட்சணையாக பணமாகவும் பொருளாகவும் வாங்குவது அவர்களை விலைக்கு வாங்குவது போல் அல்லவா இருக்கிறது….?” தினகரன் நிறுத்திவிட்டு அனைவருடைய முகங்களையும் நோக்கினார் ஒவ்வொருவர் முகத்திலும் ஆச்சரியக்குறியும் கேள்விக்குறியும் நிரம்பி வழிந்தது.
“ஆகவே… நாம் இனிவரும் நம்முடைய தலைமுறைகள் திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்கக் கூடாது…!”
புpரதிநிதிகளின் முகத்தில் குழப்பமும் கோபமும் அதிகரிக்க ஆரம்பித்தது.
“தலைவரே, ஒரு தந்தை தன் மகளுக்கு ஆசையாகப் போட்டுவிடும் நகைகளையும், பாத்திரங்களையும் எப்படி வரதட்சணை என்று எடுத்துக் கொள்வது?”
“தாய் வழி சமூகம் என்று இருக்கிறது. அதாவது அந்தச் சமூகங்களில் பெண்கள் தான் பிரதிநிதிகளாக இருப்பர். அதில் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஆண்கள் தான் திருமணம் செய்யப் போகும் பெண்களுக்கு பரிசுகளும் சீர் வரிசைகளும் தந்து திருமணம் செய்வர்”
“அப்படியென்றால், இனிமேல் மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து தான் சீர் செய்யணுமா?”
“அப்படியில்லை, யாரும் யாருக்கும் சீர் செய்யத் தேவையில்லை”
“பிறகு?”
என்ன சொல்லப் போகிறாரோ என்ற ஆர்வமிகுதியில் தொண்டர்கள் கேட்டனர்.
“திருமணம் என்று வந்தவுடன், யாரேனும் ஒருவர் செலவு செய்வதற்கு பதில்;, இரு வீட்டாருமே இணைந்து திருமணத்தை நடத்த வேண்டும். திருமணம் முடிந்தவுடன் செலவினங்களைக் கணக்குப் பார்த்து இரு வீட்டாரும் சரிசமமாக செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். திருமணத்திற்கு வரும் மொய்ப் பணத்தினை திருமண செலவுகளை சரிசெய்வதற்காக சரிசமமாகப் பிரித்துக் கொள்ளலாம் அல்லது புதுமணத் தம்பதிகளிடம் ஒப்படைத்து விடலாம்”
“கேட்பதற்கு நாகரீகமாகத் தெரியவில்லையே தலைவரே?”
“இது நாகரீகம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல, சமத்துவம் சம்மந்தப்பட்ட விஷயம், ஒருவேளை அவர்கள் சரிசமமாக செலவுகளை பங்கிட்டுக் கொள்ள விருப்பம் இல்லையென்றால், பணிகளைப் பிரித்து செலவு செய்யலாம், அதாவது, ஒருவர் சாப்பாடு, பந்தல் அமைப்பு, வாத்தியம் என்று கவனித்துக் கொண்டால் மற்றொருவர் மண்டப வாடகை, வாகன ஏற்பாடுகள், தங்கும் அறைகள் போன்றவற்றைக் கவனித்துக் கொள்ளலாம், நீங்கள் சொல்லும் நாகர்Pகமும் இதில் அடங்கி விடும்”
“கல்யாணத்துக்கு வரும் பொருட்களை என்னா செய்றது?”
“அதனை புதுமணத் தம்பதிகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர்கள்தானே புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறார்கள். அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்றுத்hனே இத்தனை ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். அப்படின்னா அவங்களுக்குக் கொடுக்கறதுதானே நியாயம்?”
“உங்க நியாயம்லாம் சரிதான் தலைவரே, ஆனா, நடைமுறைக்கு ஒத்துவருமா?”
“ஒத்துவராததையும் ஒத்துவரவைக்கும் திறமை மதத்திற்கும் அரசியலுக்கும் மட்டுமே உண்டு. ஆதலால், நடக்கும். அப்புறம் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது?”
“இன்னுமா?”
“ஆமாம், இப்போது சொல்லப் போவதுதான் உண்மையிலேயே திரும்பப் பெறும் தீர்;மானம், அதாவது நமது கட்சியினர் மனதிலும் எழுத்துப் பூர்வமாகவும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் அதன்படி, ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாங்கள் வரதட்சனையாகப் பெற்ற தொகையினை திரும்ப தன்னுடைய மாமனார் வீட்டிலேயே ஒப்படைக்க வேண்டும்….”
“தலைவரேரரரரரரர…………….” ஒருவன் எழுந்துவிட்டான்!
“உட்காருப்பா இன்னும் முடிக்கலை, வரதட்சணைத் தொகை மட்டுமல்ல, பொருட்களையும் ஒப்படைக்க வேண்டும். பொருட்கள் ஒருவேளை பயன்படுத்திவிட்டால், அந்தப் பொருளின் மதிப்பு என்னவோ அதனை தொகையாக செலுத்தலாம்”
“இதனால் என்ன இலாபம்?”
“மக்களின் நம்பிக்கை”
“ஆனால், நட்டம் நமது தொண்டர்களுக்குத் தானே?”
“பதவிக்கு வந்தால் உனக்கு இலாபம் தானே”
“நாங்கள் இன்னும் சம்பாதிக்கவில்லை, அரசியல் தான் முழுப் பணியாக செய்து கொண்டிருக்கிறோம். உங்களைப் போன்று எங்களுக்கென்று தனி தொழில் எதுவும் கிடையாது,”
“நீங்கள் பேசுவது தவறு அரசியல் என்பது பொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கையில் சம்பாதிப்பதை நினைப்பது கூடாது. ஆனால், பர்சனல் லைஃபில் நம்மை நம்பியிருக்கும் குடும்பத்திற்கு நாம் ஏதேனும் வருமானத்தை உருவாக்கி;த்தரத்தான் வேண்டும். என்னால் முடிந்த வரை உங்களுக்கு வங்கிக் கடனுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறேன். உங்களுக்கென்று ஒரு தொழில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அரசியல் வாழ்க்கை மதில் மேல் சுவர்தான் அதில் நீங்கள் நல்லப் பக்கம் தான் குதிக்க முடியும் என்று அர்த்தம் கிடையாது, மோசமான பகுதிக்குக் கூட தள்ளப்படலாம். ஆகவே, தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்வாதாரம் பற்றிய சிந்தனை அவசியம்”
“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை”
“சாத்தியமே”
“எங்கப்பா வயசு 70 ஆகுது. அவரோ மாமனார் மாமியார் உயிரோடு இல்லை, எங்க போயி கொடுக்கறது?”
“நல்ல கேள்வி, இது திருமணம் ஆகி 10 வருடம் மட்டுமே ஆனவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். மற்றவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் பத்து வருடங்களைத் தாண்டி நன்முறையில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். மனைவியை நன்முறையில் கவனித்துக் கொள்கிறார் என்ற அர்த்தத்தில் இந்த முறை பின்பற்றப்பட வேண்டும். ஒரு வேளை மாமனார், மாமியார் இல்லை என்றால் மனைவியின் தம்பியோ, தங்கையோ திருமணம் ஆகாமல் இருந்தால், அவர்களிடம் கொடுக்கலாம் இல்லையெனில் அந்தத் தொகையினை மனைவியின் பெயரிலேயே டொபசிட் செய்யலாம்”.
“மாமானார் வீட்டில தொகையை திரும்பி வாங்கிக்க விருப்பம் இல்லைன்னா என்ன செய்றது?”
“மனைவி பேர்ல டெபாசிட் செய்யலாம்னு ஆஃசன் இருக்கே”
“எங்க இப்பல்லெல்லாம் பேங்க்ல காச போட்டாலே வருமான வரித்துறை ரெய்டு வந்திருது. ரொக்கமாக் குடுத்தடலாம்னு பார்த்தா, அவனவன் பணத்தை வச்சி பாத்ரூம் கட்டறான், பேங்க்ல எங்க காசு இருக்கு?”
“நீ இந்த மாதிரி கேள்வி கேட்பன்னு தெரியும், அதுக்கும் மாற்றுவழி இருக்கு, முதலில் திரும்பப் பெரும் தீர்மானம் மற்றும் திருமணத்திற்காக போடப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும். உரிய ஆவணம் செலுத்தப்படுகையில் பிரச்சனை ஏதும் இருக்காது”
“சரி இப்பொழுது சொல்லுங்கள், யாரெல்லாம் திரும்பப் பெறும் தீர்;மானத்தை முதலில் நிறைவேற்றப் போகிறீர்கள்?”
“இந்தத் திட்டத்தை நீங்கள் தான் முன் வைத்தீர்;கள், நீங்கள் துவக்கி வைத்தால்தான் நன்றாக இருக்கும்”
“சரி, வரும் 15 ஆம் தேதி என்னுடைய பிறந்த நாள் வருகின்றது. அன்றே இந்த நிகழ்வை வைத்துக் கொள்வோம்”
“நம்ம தலைவர் வாக்களித்தபடி திரும்பப்பெறும் தீர்மானத்தை துவக்கி வைக்கும் விதமாக நமது தலைவர் இப்போது தனது சீர்வரிசை பொருட்களுக்கு ஈடாக ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலையினை தனது மாமனார் குடும்பத்திற்கு வழங்குவார்……” என்று பிரச்சார பீரங்கி செங்குட்டுவன் முழங்க தினகரன் முகம் தவிர அனைவருடைய முகத்திலுமே மகிழ்ச்சி தாண்டவமாடியது.. மாமனார் சந்தோஷமாகப் பெற்றுக் கொள்ள தினகரன் எந்த சலனமுமில்லாமல் வழங்கினார்.
“இனி வரும் காலங்களில், நமது தொண்டர்களும் திரும்பப் பெறும் தீர்;மானத்தை நிறைவேற்றுவர்” என்று அறிவித்தார். தொண்டர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அடுத்த நாளே அவருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில் இடம்பெற்றிருந்த செய்திகள் இதுதான்.
“தலைவரே, நமது கட்சிக்காக நாங்கள் அல்லும்பகலும் அயராது அழைத்து வருகிறோம். மக்கள் நலம் முக்கியம் தான், அதற்காக எங்கள் சொத்தை இழந்து எங்களால் சேவை செய்ய இயலாது. திரும்பப்பெறும் தீர்மானத்தை நீங்கள் திரும்பப் பெறாவிடில் நாங்கள் மாற்றுக் கட்சி துவக்க நேரிடும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுக்கு செய்யும் தொண்டே மகசேனுக்கு செய்யும் தொண்டு ஆனால் எங்கள் வாழ்க்கையில் விழக்கூடாது துண்டு. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறோம். என்றும் உங்கள் தலைமையை எதிர்நோக்கி நிற்கும். உண்மை தொண்டர்கள்”
தினகரனுக்கு தூக்கி வாரிப் போட்டது. உடனே பிரதிநிதிகளுக்கு பதில் அளித்தார்.
“திரும்பப் பெறும் தீர்மானம்…. திரும்பப் பெறப்படுகிறது”
No comments:
Post a Comment