மாது என்று அழைக்கப்படும் மாதவன் ஒரு வேலையில்லா பட்டதாரி, அவன் தன் அம்மா மற்றும் மனைவி ஜெயந்தியுடன் வாழ்ந்து வருகிறான். அத்துடன் இல்லாமல் அவன் ஞாபக மறதிக்கு ஒரு முன்னுதாரணம். ஆனால் அதிர்ஷ்டவசமாக தனக்கு ஞாபகமறதி என்பதை அவன் மறப்பதில்லை. அல்லது தனக்கு ஞாபகமறதி என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான் என சொல்லலாம். அவன் அன்று அவனுடைய நண்பனுடைய திருமணத்திற்கு செல்ல வேண்டும்.
மாதுவிற்கு ஞாபகமறதி பிரச்சனை பிறவியில் இருந்து இல்லை. இடையில ஒரு ஆக்சிடண்ட் பார்த்தான.; அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இந்த பிரச்சனையை சந்தித்துவருகிறான். மாதுவை நான் கற்பனை பண்ணனும்னா எதிர்நீச்சல் படத்துல நாகேஷ் சார் எப்படி இருப்பாரோ அப்படி கற்பனை பண்ணிக்கலாம்.
மாது திருமணத்திற்காக நன்கு டிப்டாப்பாக உடை அணிந்து விட்டான். உடையணிந்த உடன் அவனுக்கு எங்கு செல்ல வேண்டும் என்று ஞாபகத்திற்கு வரவில்லை. அன்று முகூர்த்த நாள். அதனால் வேறொரு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்த அவனுடைய அண்ணி, மாதுவின் மனைவி ஜெயந்தியை அழைத்தாள்.
“என்னக்கா?” குறுக்கே நின்று கொண்டிருந்த மாதுவை நகர்த்திவிட்டு வீட்டு வாசலுக்கு வந்தாள்.
“நான் பக்கத்துல புளியம்பட்டி ஊருக்கு மேரேஜிக்கு போறேன், கொஞ்சம் வீட்டப் பார்த்துக்கமா, மாமா 1 மணிக்கு வந்துடுவாறு. வந்தார்னா இந்த சாவியை அவர்கிட்ட கொடுத்துடுறியா?”
“சரிக்கா”
அப்போதுதான் மாதுவிற்கு தான் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஞாபகம் வந்தது. மாது எப்போதும் தன்னுடைய திட்டங்களை ஒரு பாக்கெட் நோட்டில் எழுதி வைத்து வைத்துதான் செயல்படுவான். கடைக்குப் போய் மளிகை சாமான் வாங்குவதாக இருந்தாலும், காய்கறி வாங்குவதாக இருந்தாலும், வெளியே செல்ல வேண்டி இருந்தாலும், பல் துலக்க வேண்டி இருந்தாலும், இன்று போண்டா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், ஷ{ போட்டு போக வேண்டும் என்று இருந்தாலும், மூக்குக்கண்ணாடி மாட்ட வேண்டும் என்றாலும் இன்னும் பட்டியல் எவ்வளவோ இருக்கிறது…! எல்லாமே அந்த நோட்டில் தான் இருக்கும் அதனால் அவன் வாரத்திற்கு ஒருமுறையாவது பாக்கெட் நோட் வாங்க வேண்டி இருக்கும். பாக்கெட் நோட் வாங்க வேண்டும் என்பதையும் கூட அதில் எழுதி இருப்பான்.
அன்றும் அவன் திருமணத்திற்கு போக வேண்டும் என்று எழுதியிருந்தான். மேலும், மாதுவிற்கு இன்னுமொரு நல்ல பழக்கமும் இருந்தது. அதாவது தான் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்று ஜெயந்தியிடமும் சொல்வது வழக்கம். அதனால் ஜெயந்தியும் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பாள். மாதுவினுடைய ரிங் டோனிலும் “மாது உனக்குத்தான் போன், உன் மனைவி ஜெயந்தி தான் கூப்பிடுறேன்”னு அவ வாய்ஸ ரெக்கார்டிங் பண்ணி ஜெயந்தி கூப்பிட்டா அந்த ரிங் டோன் வரும். மத்தவங்களுக்கு “மாது உனக்குத்தான் கால் தயவு செஞ்சு அட்டெண் பண்ணுன்னு” ரெக்கார்டிங் செஞ்சி ரிங் டோனா போட்டு;விட்டாள். ஏன்னா மாது பல தடவை கால் வர்றப்ப ஏதோ சத்தம் வருதேன்னு சுத்தி சுத்தி பார்த்து மொபைல்ல கால் வந்தா பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட “சார், உங்க மொபைல்ல கால் வருது பாருங்கன்னு” அவன் மொபைலையே எடுத்துக் கொடுப்பான். அதனால ஜெயந்தி இந்த மாதிரி வாய்ஸ ரெக்கார்டிங் பண்ணி வச்சிருந்தாள், அப்படியும் ஒரு தடவை நம்ம மாது என்ன பண்ணிட்டான், கால் வந்தோன பக்கத்தில நின்னுக்கிட்டு இருந்த பொண்ணுகிட்ட போனக் கொடுத்து, “இந்தாம்மா பொண்ணு, உன் பேரும் மாதுவா? என் பொண்டாட்டி என்ன கூப்பிடுற மாதிரியே உன் மொபைல்லேர்ந்து சத்தம் வருது பாரேன்னு” தன் மொபைலையே காட்டி சிரித்தான்.
இது ஏதோ ஜொள்ளு பார்ட்டி போல இருக்கென்று நினைத்து அந்தப் பெண் தலையில் அடித்துக் கொண்டே நகர்ந்தாள். மாதுவிற்கு புரியவில்லை, இவள் எதற்கு அவள் மொபைலக் கூட வாங்காமப் போறாள் என்று அந்தப் பெண்ணின் பின்னாடியே அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுக் கொண்டே சென்றான். அதற்குள் மறுபடியும் ஜெயந்தியிடம் இருந்து கால் வந்தது. கையில் இருந்த மொபைலைப் பார்த்தவன். ‘ஆஹா, என் பொண்டாட்டி கூப்பிடுகிறாள்’ என்று குஷியில் காலை அட்டெண்ட் செய்தான். அதற்குள் அவள் பின் தொடர்ந்து போன அந்தப் பெண் திரும்பி சத்தம் போடலாம் என்று திரும்புவதற்கும், மாது போனை அட்டெண்ட் செய்து கொண்டே திரும்பி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. அந்தப் பெண் இவன் ஏதோ லூசு என்று நினைத்துக் கொண்டே அவள் மறுபடியும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து, மாதுவைக் கடந்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்றாள். அந்தப் பெண் பஸ் ஸ்டாண்டை நோக்கி மாதுவைக் கடந்த போது, மாதுவுக்குத் திடீரென்று தான் ஏன் இந்த பக்கம் நடந்து போனோம் எதையாவது மறந்தார் போல விட்டு விட்டோமா என்று மறுபடியும் அப்படியே எதிர்புறமாகத் திரும்பி நடந்தான். அதனைப் பார்த்தப் பெண் இவன் கன்ஃபார்மாக லூசுதான் என்று முடிவு செய்து தலையில் அடித்துக் கொண்டாள். நல்ல வேளை போனில் ஜெயந்தி போனில் பஸ் ஏறிட்டீங்களான்னு ஒரு வார்த்தைக் கேட்டாள்! அதனால் அவன் மறுபடியும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து அந்தப் பெண் ஏறிய அதே பஸ்ஸிலேயே ஏறி வந்தான். அந்தப் பெண் அவனை திரும்பி திரும்பி முறைத்துக் கொண்டே வந்தாள். ஆனால், மாது அந்தப் பெண்ணை அப்போதுதான் முதன் முதலாகப் பார்ப்பது போல் பார்த்தான். அவள் முறைத்ததைக் கண்டுகொள்ளவில்லை. பாவம் அவளுக்கு ஏதோ பிரச்சனை போல என்று பரிதாபப்பட்டான்.
மாது, தன் அண்ணி கல்யாணத்திற்கு போகணும்னு சொன்னவுடன் இவனுக்கும் ஞாபகம் வந்தது. இவனும் உடனே தன்னுடைய பாக்கெட் நோட்டை எடுத்து தான் செல்ல வேண்டிய நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு பஸ்;ஸ்டாண்டை நோக்கி நடந்தான் மாது.
வெகுநேரம் ஆகியும் பஸ் வரவில்லை. மாதுவிற்கு திடீரென்று ஒரு சந்தேகம் தான் எதற்கு பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம் நின்று, உடனே சுய நினைவு வ்ந்தனவாய் தன்னுடைய நோட்டை எடுத்துப் பார்த்து கன்ஃபார்ம் செய்து கொண்டான். அடுத்த கொஞ்ச நேரத்தில் எதிர் திசையில் பஸ் வந்தது. இவன் ஓடிப் போய் ஏற முற்பட்டான். அந்த பஸ் ரொம்பக் கும்பலாக இருந்ததனால் அனைவரையும் ஏறவிட்டு இவன் ஏற முற்படுவதற்குள் பஸ் கிளம்பி விட்டது. பஸ் ஸ்டாண்ட் முடிவு வரை ஓடினான். ஆனால் பஸ் நிற்கவில்லை. மறுபடியும் அவன் ஏற்கனவே நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து நின்றான். மறுபடியும் அவனுடைய நோட்டைத்திறந்து தான் என்ன பணி செய்ய வேண்டும். ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்று பார்த்தான். அப்போதுதான் ஜெயந்தி பஸ் ஏறும் முன் பொங்கல் வடை கடையிலேயே சாப்பிட்டு விட்டு கிளம்பச் சொன்னது தெரிந்தது. அவர் படித்து முடிப்பதற்கும் மாது போக வேண்டிய பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. உடனே பஸ்ஸில் ஏறினார். அன்று முகூர்த்த தினம் ஆகையால் அனைத்து பஸ்ஸ{ம் கூட்டமாகவே இருந்தது. கண்டக்டர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் கேட்டு கொடுத்துக் கொண்டிருந்தாh.; அவர் ஏற்கனவே கோபத்தில் இருந்தார். மக்கள் பஸ்ஸில் ஏறியவர்களில் பெரும்பாலோனோர் படிக்கட்டிலும் அதனைத் சுற்றியுமே நின்று கொண்டிருந்தனர். எல்லோரையும் திட்டிக்கொண்டே மக்களை பஸ்ஸின் உள்ளே தள்ளிக் கொண்டே டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மாதுவின் முறை வந்தது.
“சார்” என்றார் கண்டக்டர்
“ஒரு பொங்கல், ஒரு வடை, சாம்பார் நல்லா சூடா வேணும்” சடாரென்று மாது அப்படிச் சொல்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பஸ் கூட்டமாக இருந்ததால் மாதுவால் அவன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு பாக்கெட் நோட்டை எடுக்க முடியவில்லை. அதனால் அவனுக்கு தான் எங்கே செல்ல வேண்டும் என்று மறந்து விட்டது.
“என்ன சார் கிண்டல் பண்றீங்களா, பஸ்ஸ{ல வந்து நின்னுக்கிட்டு பொங்கலு வடைனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, என்ன பார்த்தா சர்வர் மாதிரி இருக்கா இல்லை இந்த பஸ்ஸப் பார்த்தா ஓட்டல் மாதிரி இருக்கா, எங்கசார் போவணும்?”
“கண்டக்டர் சார், ஒரு நிமிசம் டைம் கொடுங்க, பாக்கெட்ல நோட் இருக்கு, பார்த்து சொல்றேன். சரியா?”
“சீக்கிரம் சார், காலைலே வந்து எலவு கொட்டுறாங்க பாரு” என்று கண்டக்டர் புலம்பினார். எலவு என்ற வார்த்தையைக் கேட்டதும் தான் திருமணத்திற்கு செல்ல வேண்டியவன் என்பதை உணர்ந்து, உடனே ஞாபகம் வந்தவனாய் சொன்னான், “புளியம்பட்டி, ஒண்ணு கொடுங்க”
பஸ் புளியம்பட்டி வந்து நின்றது. மாது அவசர அவசரமாக இறங்கி புளியம்பட்டியில் இருந்த ஒரே ஒரு திருமண மண்டபத்திற்குள் நுழைந்தான்.
“என்ன மாது, நீயுமா இந்த கல்யாணத்திற்கு வந்த, என்னோடே வந்திருக்கலாமே”
குரல் கேட்டு திரும்பிப் பார்த்த மாது, தன் அண்ணியும் அந்தக் கல்யாணத்திற்கு தான் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டான்.
“ஆமா, அண்ணி, மாப்ள என் பிரணெ;ட் தான்”
“அப்படியா, அதோ மாப்பிள்ளை பொண்ணை அழைச்சிக்கிட்டு உங்க பின்னாடி உட்கார்ந்திருக்கிற அவங்க தாத்தாகிட்ட ஆசிர்வாதம் வாங்க வர்றாங்க. மாப்பி;ள்ளைகிட்ட பேசிட வேண்டியதுதானே”
அண்ணி சொன்னதும் பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்தவன். “அண்ணி இவன் யாருன்னே தெரியலையன்னி எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
“என்ன மாது மறுபடியும் வேலைய காட்டிட்டியா? உன் நோட்டப் பாரு எந்த ஊரு கல்யாணத்துக்கு நீ போகணும்”
“மாதுவும் நோட்டைப் பார்த்து புளியந்தோப்பு என்றான்”
“புளியந்தோப்பு இங்கேயிருந்து 2 கிலோ மீட்டர் தான் இருக்கு, நீங்க மறுபடியும் பஸ்ல போக வேண்டாம் நானே டிராப் பண்ண சொல்றேன்”னு சொல்லி ஒரு பையனையும் அனுப்பி வைச்சி அவங்க அண்ணி டிராப் பண்ண சொன்னாங்க, அதன்படியே மாது போக வேண்டிய இடத்திற்கு ஒரு பையன் டிராப் செய்தான். மாது அங்கு சென்று சேருவதற்குள் திருமணம் முடிந்து ரிசப்சனும் முடியும் நிலையில் இருந்தது. மாது செல்வதற்கும் மாப்பிள்ளை சாப்பிட செல்வதற்கும் சரியாக இருந்தது. மேடையில் மணமக்கள் இல்லாததைக் கண்ட மாதுவின் கால்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் நேரமாகிவிட்டது என்று திரும்பியது. அப்போது அங்கு வந்த ஒருவர் ‘சாப்டீங்களா’ என்று கேட்டார். அப்படீன்னா கீழே போய் சாப்பிடுங்க, பொண்ணு மாப்பிள்ளையும் சாப்பிடத்தான் போயிருக்காங்க என்ற வார்த்தையைக் கேட்டவுடன். மொய் வைக்கப் போகிறோமே சாப்பிட்டால் என்ன, பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது என்று பந்திக்குச் சென்றவன். எங்கே இடம் இருக்கிறது என்று தேடி தேடிப் பார்த்தான் அனைவரும் பிசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்புறம் மற்றவர்கள் போல ஏற்கனவே சாப்பிடுவதற்கு சாப்பிட்டு கொண்டிருப்பவர்களின் சேர்களின் பின்னே நின்று கொண்டு இவர்கள் சாப்பிடுவதை ‘சீக்கிரம் சாப்பிட்டு எழுமையா’ என்பது போல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் தானும் ஒருவனாக மாது நின்று கொண்டான். ஒருவாழியாக அவன் சாப்பிடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. வயிறு முட்ட பந்தியில் அமர்ந்து சாப்பிட்டான். சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே ஜெயந்தியின் அழைப்பு சத்தம் செல்போனில் சிணுங்கியது. காலை அட்டெண்ட் செய்தான் மாது.
“என்னங்க கல்யாண மண்டபம் போய் சேந்துட்டீங்களா இல்லையா?”
“என்னடி இப்படி கேட்கிற, இப்ப கல்யாண மண்டபத்துல தான் சாப்பிட்டுக்கிட்டே இருக்கிறேன்.”
“ஓ… சாப்பாட்டுக்கே வந்தாச்சா, அது சரி, அப்ப எல்லாம் முடிஞ்சிருச்சி, பார்த்து கவனமா வீட்டுக்கு வாங்க, இன்னைக்கு உங்களுக்கு வேற எதுவும் பிளான் இல்லை”
“சரி, சரி வந்துடறேன்… நீ போனை வையி”
மாதுவுக்கு தன் மனைவி தன் மீது வைத்திருக்கும்அக்கறையை ரொம்பவே ரசிப்பான். அதனால் தன் மனைவியின் வார்த்தையை தட்டிக் கழிக்கவும் மாட்டான். இப்பவும் அப்படித்தான், சாப்பிட்டுக் கைகழுவியவன் அப்படியே கிளம்பி வீடு வந்து சேர்ந்தான்.
“என்னங்க…என்ன இது உங்க மொய் கவரு அப்படியே பாக்கெட்ல இருக்கு, கல்யாணத்துக்குப் போனிங்களா இல்லையா?”
“என்னடி அப்படி கேட்கிற, நான் மண்டபத்துல தானே சாப்பிட்டுகிட்டு இருந்தேன். அப்பத்தானே நீ கால் பண்ண, நீ சொன்னதுனால தானே நான் உடனே கிளம்பி வந்தேன்”
“நீங்க பொண்ணு மாப்பிள்ளைய பார்த்திருப்பீங்கன்னு நினைச்சேன். நான்தான் சொன்னேன்னா உங்க பாக்கெட்ல இருக்கிறத தொட்டுப் பார்க்க மாட்டீங்களா?”
“தொட்டுப்பார்த்தேன் கவர் இருந்தது. எதுக்கு இருந்ததுன்னு தெரியலை, உன்கிட்ட இருந்தா பத்திரமா இருக்குமேனனு எடுத்து வந்துட்டேன்., தப்பா என்ன?”
“எல்லாத்தையும் செஞ்சுட்டு கேள்வி வேற. எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாதுவின் அண்ணி வந்து சேர்ந்தார்.
“ஏம்மா ஜெயந்தி, மாது வீடு வந்துட்டானா, வழி மாறி நான் போன கல்யாணத்துக்கு வந்துட்டாப்புல?”
“என்னக்கா சொல்றீங்க, நீங்க போன கல்யாணத்துக்கா, அங்க எப்படி?”
“காலைல போகும்போது ஊர் பேரு சொன்னேன்ல, அதான் மாது அந்த பேர ஞாபகம் வைச்சிக்கிட்டு அந்த ஊரு மண்டபத்துக்கு வந்திருக்கு. நல்லவேளை உன் கல்யாணத்துக்கு நாங்கல்லாம் இருந்ததால மண்டபம் மாறாம பார்த்துக்கிட்டோம். பார்த்துக்கம்மா, சாவியைக் கொடுமா, மாமா இனிமேல் கிளம்பி வர்றாராம்” சாவியை வாங்கிக்கொண்டு சென்றாள் மாதுவின் அண்ணி.
“இந்தக் கொடுமை வேறயா…? என்னங்க….என்னங்க….”
“என்னம்மா?”
“இன்னைக்கு எந்த ஊருக்கு கல்யாணத்துக்குப் போனீங்க…?”
“புளியம்பட்டி…. ஆங்… புளியந்தோப்பு…ம்ம்ம்…ஞாபகத்துக்கு வரலமா”
“நான் சொல்லுட்டா… புளியம்பட்டி போய்ட்டு அப்படியே புளியந்தோப்புக்குப் போயிருக்கீங்க, சரியா?”
“ஆங்.. இருக்கலாம், அதுக்கென்ன இப்போ”
“அதுக்கென்ன இப்போவா, நான் படுற அவஸ்தை எனக்கு மட்டும்தானே தெரியும். சொன்னா புரியவா போகுது….ஹ{ம்..”
விம்மிக்கொண்டே சென்றாள் ஜெயந்தி.
காரணம் புரியாமல் தூங்குவதற்குச் சென்றான் மாது.
அன்று பிரதோஷம் என்பதால் கோவிலுக்குச் சென்று மாதுவும் ஜெயந்தியும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சாலையின் எதிர்புறம் நுங்கு விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஜெயந்தி, நுங்கு சாப்பிட வேண்டும் விரும்பினாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற, சாலையைக் கடந்தான் மாது. நுங்கு வாங்கிக் கொண்டு திரும்பும் வேலையில், ஒரு நுங்கு பனை மட்டையி;ல் இருந்து தவறி விழுந்தது. அதைத் தடுப்பதற்காக குனிந்த மாது மற்ற நுங்குகளையும் தவறவிட்டான். எரிச்சலான ஜெயந்தி வேகவேகமாக மாதுவை நோக்கி திட்டுவதற்காக வந்தாள். வந்தவள் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த காரைக் கவனிக்கவில்லை. கார் ஓட்டிவந்தவன் என்ன செய்வதென்று தெரியாமல், காரின் ஸ்டியரிங்கை முடிந்த வரை பிரேக்கை அழுத்திக் கொண்டே ஒடித்தான். ஏதோ தவறு நடக்கப் போகிறதென்று உணர்ந்து சடாரென ரோட்டின் எதிர்பக்கமாக உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினாள். ஓடிய வேகத்தில் அங்கு எதிர்திசையில் மெதுவாக வந்து கொண்டிருந்து பைக்கில் வேகமாக போய் விழுந்தாள். வண்டி ஓட்டியவன் சுதாரித்து தள்ளி விழுந்தான். ஜெயந்தி நிலைகுலைந்து அருகில் இருந்த மரத்தில் போய் தலையை இடித்துக் கொண்டாள். இதையெல்லாம் சற்றும் எதிர்பாராத மாது அங்கேயே மயங்கி விழுந்தான்.
…
மாது கண்விழித்தான் அவன் கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவன் அம்மா அங்கே அழுது கொண்டு நின்றிருந்தார்கள்.
“ஜெயந்தி எங்கம்மா?”
“ஜெயந்திய பக்கத்து ரூம்ல அட்மிட் பண்ணிருக்காங்கடா… அது இருக்கட்டும் உனக்கு என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?”
“ஆமாம்மா…எனக்கு ஞாபகம் இருக்கு”
“இனிமே மாதுவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கு ஞாபகமறதி பிரச்சனை சரியாயிடுச்சி” டாக்டர் நந்தகுமார் கூறினார். சமீப காலமாக மாதுவுக்கு அவர்தான் சிகிச்சை அளித்து வருகிறார். சிகிச்சைன்னா பெரிதாக நினைத்து விட வேண்டாம். காய்ச்சல் தலைவலி போன்ற பிரச்சனைதான். அனைவரும் அடுத்த அறைக்குச் சென்றனர்.
அங்கே ஜெயந்தியின் கண்கள் மெல்ல மெல்ல திறந்தது. அனைவருடைய கண்களும் அவளுடைய கண்களையே நோக்கின. மெல்ல கண்விழித்த ஜெயந்தியின் கண்கள் அவளின் எதிரே கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த மாதுவை நோக்கின. ஜெயந்தி அனைவரையும் சுற்றி முற்றி பார்த்தாள். ஆனால், தன் எதிரே கண்ணீருடன் நிற்கும் மாதுவை பார்த்துக் கொண்டே எழுந்தாளமாதுவை நோக்கி கையசைத்து அவனை அருகே அழைத்தாள். அவள் வாய் தட்டுத்தடுமாறி பேச ஆரம்பி;த்தது.
“நீ…. யாரு…. தம்பி?”
அந்தக் கேள்வியில் அங்கிருந்த அனைவருமே உறைந்து நின்றனர். மாது ஓ…வென்று சத்தம் போட்டு அழுதான். ஜெயந்தி அங்கே என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன கொடுமைங்க இது?”
“இன்னும் கேளு, இந்த நேரத்துல நடக்குற சம்பவத்தையெல்லாம் அமைதியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டாக்டரின் கையை நர்ஸ் லைட்டாக தட்டினாள். உடனே சுதாரித்த டாக்டர், ஜெயந்தியிடம் ஒரு நிமிடம் அமைதியாக இருக்கும்படி கையை காட்டி விட்டு அனைவரையும் அந்த அறையின் மூலைக்கு வருமாறு கூறினார். அனைவரும் அங்கு சென்றவுடன், டாக்டர் ஜெயந்தியை நோக்கினார், ஜெயந்தி அவர்கள் செல்வதையே கவனித்த டாக்டர் அனைவரையும் அறைக்கு வெளியே வரும்படி கூறினார்”
“வெளியே வந்த டாக்டர், அனைவரையும் அதிர்ச்சியடைய வேண்டாம் என்று கூறினார். அவர் சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் அனைவரின் மனதையும் பயம் தொற்றிக் கொண்டது”
“என்ன டாக்டர் சொல்லப் போறீங்க… சீக்கிரம் சொல்லுங்க டாக்டர்… எங்களுக்கு ஏற்கனவே பயமாயிருக்குது”
“நடந்த விபத்துல ஜெயந்திக்கு மூளைல அதிர்வு ஏற்பட்டு அதனால அவங்க தன்னுடைய ஞாபக சக்தியை இழந்துட்டாங்க”
“ஐயையோ… டாக்டர் எனக்கே இப்பத்தான் சரியாச்சு…இப்ப என் மனைவிக்கின்னா என்னால தாங்க முடியாது டாக்டர்”
“என்னப்பா பண்றது… எல்லாம் நம்ம கைல இல்லையே… என் அனுபவத்தில் சொல்றேன். எனக்குத் தெரிஞ்சி இந்தியாவுல இதக் குணப்படுத்துறதுக்கு எந்த மருத்துவமனையிலேயும் வசதி இல்லை”
“நீங்க எவ்வளவு வருசமாக டாக்டரா இருக்கீங்க டாக்டர்” மாதுவின் அம்மா அழுதுகொண்டே கேட்டார்.
“10 மாசமா இருக்கேன், அதுக்கு முன்னாடி 5 வருசம் படிச்சிட்டுத்தான் வர்றேன்”
“சரிங்க டாக்டர்” பவ்யமாக பதிலளித்தார்.
“அப்படின்னா இதுக்கு என்ன வழி டாக்டர்?” மாது கேட்டான்.
“கவலைப்படாதீங்க, இதுக்கு ஃபாரின்ல நிறைய மருத்துவ முன்னேற்றங்கள் இருக்கு, ஒண்ணு நாம இங்கேர்ந்து அவங்கல ஃபாரின்;கு அழைச்சிட்டுப் போயி சிகிச்சைப் பண்ண முடியும்னா பண்ணுங்க…இல்லைன்னா?
“சொல்லுங்க டாக்டர்:
“அங்க இருக்குற பெஸ்ட் டாக்டர வரவழைச்சோம்னா, உங்க மனைவி சரியாகுவதற்கான வாய்ப்பிருக்கு, நீதான் முடிவு சொல்லணும்”
“சரி, நான் கலந்தாலோசிச்சிட்டு முடிவு சொல்றேன் . டாக்டர்”
“ஓ.கே” டாக்டர் தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டார்.
மாதுவுக்கு பளிச்சென்று ஒரு ஐடியா தோன்றியது அதை செயல்படுத்தினால் என்ன என்று யோசித்தவன், நேராக ஜெயந்தியின் அருகே நின்றான். ஜெயந்தியும் மாதுவை இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்கிற நினைப்பில் பார்த்துக் கொண்டிருந்தாள். மாது கண் அசைக்க நர்ஸ் ஜெயந்தியின் செல்போனில் இருந்து மாதுவுக்கு கால் செய்தாள். அந்த ரிங்டோன் ஒலித்தது ‘மாது உனக்குத்தான் போன், உன் மனைவி ஜெயந்தி தான் கூப்பிடுறேன்’
“மாது….என் புருஷா” கண்களில் நீர் தழும்ப ஜெயந்தி அழைத்தாள். அனைவருடைய முகத்திலும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது. மாதுவின் அம்மா உணர்ச்சிவசப்பட்டு கைத்தட்டினார். அந்த சத்தத்தில் அறைக்குள் சென்ற டாக்டர் திரும்பி வந்துவிட்டார்.
“டாக்டர், இனி வெளிலேர்ந்து டாக்டர்அழைக்கிறது தேவைப்படாது, என் பொண்டாட்டிக்கு நினைவு திரும்பிடு;ச்சி டாக்டர்”
“இது எப்படி நடக்கும், சாத்தியமில்லையே?” குழப்பத்துடன் பார்த்தார் டாக்டர்.
அவருடைய குழப்பத்திற்கும் உடனே விடை கிடைத்தது.
“நான் எப்படி இங்கே வந்தேன், எனக்கு என்ன ஆச்சு?” ஜெயந்தி கேட்டாள். அனைவரும் டாக்டரையும் ஜெயந்தியையும் பார்த்தனர்.
“பேஷண்டுக்கு நினைவாற்றல் முற்றிலுமாகப் போகவில்லை, அவ்வப்போது ஞாபகசத்தியை இழந்து விடுவார், அதாவது ஞாபக மறதி நோய்தான். இவ்வளவு நாளாக மாதுவை நீங்கள் எப்படிப் பார்த்தீர்களோ இனி ஜெயந்தி அப்படி இருப்பாங்க” டாக்டர் சொன்னார்.
“இதுக்கு அப்ப என்னதான் டாக்டர் வழி”
“அதான் சொன்னேனே… ஃபாரின்லேர்ந்து தான் வரவைக்கனும். ஆனால், இன்னொரு விஷயமும் இருக்கு, முடிவு என்னவாக இருக்கும்னு என்னால உறுதியா சொல்ல முடியாது”
“அப்புறம் எதுக்கு டாக்டர் ஃபாரின்லேர்ந்து வரவழைக்கிறீங்க. என் மனைவியை நானே பார்த்துக்கறேன் டாக்டர். நீங்க டிஸ்சார்ஜ் செய்வதற்கான ஃபார்மாலிடிகளைப் பாருங்க” உறுதியாகச் சொன்னான் மாது.
மாது தன்னுடைய பாக்கெட் நோட்டை ஜெயந்தியிடம் ஒப்படைப்பதற்கு எடுத்து வைத்தான். மறக்காமல் ஜெயந்தியின் செல்போனிலும் ரிங்டோனை மாற்றினான் “ஜெயந்தி, என் கண்ணே… நான் உன் கணவன் மாது பேசுகிறேன்.. கால அட்டெண்ட் செய்மா” அந்த வாசகம் பேசி முடித்தவுடன் மாதுவின் கண்களில் கண்ணீர் தழும்பியது. மறுபடியும் மறுபடியும் அதைப் போட்டுக் கேட்டான். ஜெயந்தி எவ்வளவு சிரமப்பட்டிருப்பாள். என்னுடைய ஞாபக மறதி அவளை எவ்வளவு பாடு படுத்தியிருக்கும். எப்படியாவது இந்த பிரச்சனையிலிருந்து ஜெயந்தியை மீட்க வேண்டும். தீர்மானமாக முடிவெடு;த்தான் மாது. ஜெயந்தியை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்தான். இண்டர்நெட்டில் ஞாபகசக்தியை மீட்டுக் கொணரும் வழிவாய்ப்புகளை தேடி தேடி படித்தான். இறுதியில் மூளை மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சையெடுத்து வருகிறான். நாம் எப்படி எதிர்பார்க்கின்றோமோ அதேபோல் ஜெயந்தியும் விரைவில் சரியாகி விடுவாள் என்று மாதுவும் காத்துக்கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment