நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய வலைப் பதிவில் நான் நுழைகிறேன். இதற்கு நான் உயர்திரு. பாரத்ரத்னா. டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையே ஆகும்.
உங்களுடைய சாதனைகளை நாடறியும்! நான் தனியாக எடுத்துச் சொல்ல எதுவுமில்லை.
இரங்கல் பா:
கலாம் அவர்களே!
எதனைக் கண்டு நான் வியப்பேன்!!!
உங்களுடைய குழந்தைத்தனமா? – அல்லது
குழந்தைகளுடனான உங்கள் அன்பையா?
அக்னி ஏவுகணையா? – அல்லது
போலியோ குழந்தைகளுக்கு நீங்கள் அமைத்த
எடை குறைந்த காலிபரா?
இந்தியாவிற்கு நீங்கள் அளித்த கௌரவமா?- அல்லது
உங்கள் முன்மாதிரி எளிமையா?
உங்கள் இசையார்வமா? – அல்லது
உங்கள் இசைபுலமையா?
உங்களுடைய அஞ்ஞான பற்றா? – அல்லது
விஞ்ஞான மேதமையா?
எவ்வளவோ உண்டு போற்றி புகழ!!!
ஆனால் ஒன்று மட்டும் உறுதி!
அனைவர் உள்ளத்திலும் கனவினை விதைத்தீர்கள்!
இன்றும் என்றும் எங்கள் நினைவில் இருப்பீர்கள்!
இன்று நீங்கள் விதைக்கப்பட்டீர்கள்
நாளை விருட்சங்கள் விஸ்பரூபமெடுக்கும்!!!
உங்களுக்கு ஆயிரம் கோடி சலாம்.
இன்று (30.07.2015) உயர்திரு. பாரத்ரத்னா. டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்னுமிடத்தில் விதைக்கப்பட்டார்.
-இ. ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment