Monday, 24 December 2012


எல்லோரையும் போலதானே பெரியார்? 

 தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியை சொடுக்குக...

 

 

http://www.4shared.com/file/7IEBjRRc/Periyaar.html

 or

http://www.4shared.com/office/OZ4HUr9R/Periyaar.html

or

 http://www.scribd.com/doc/168263323/Periyaar1

நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்



Monday, 1 October 2012

கிங் மேக்கர் யார்?



- இவருடைய இயற் பெயர் காமாட்சி
- இவருடைய பிறந்த சிறு கிராமமான விருதுநகர் இன்று இவரால் விருதுநகர் மாவட்டமாக நிமிர்ந்து நிற்கிறது.
- இவருடைய புனை பெயர்கள் கிங் மேக்கர், பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்ம வீரர் (செயல் வீரர்),

தென்னாட்டு காந்தி
- தந்தை பெரியார் கொடுத்த தைரியத்தில் என்னால் படுத்து கொண்டே ஆட்சியை பிடிக்க முடியும் என்று முழக்கம் இட்டவர்.
- வயதானவர்கள் கட்சியில் பதவி வகுக்க கூடாது இளையவர்களுக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்ற K -PLAN ஐ கொண்டு வந்தவர்.

ஜவஹர்லால் நேருவும் அதனை ஏற்று கொண்டார். சொன்னதோடு இல்லாமல் தனது முதல்வர் பதவியை பக்தவட்சலத்திடம் ஒப்படைத்தார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் இவர் வழியில் பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்
- ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்ட காங்கிரஸ் ஐ மிகவும் திறம்பட நடத்தியவர். ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்த்ரி வருவதற்கு இவரே முக்கிய காரணம். எதிர்பாராத விதமாக லால் பகதூர் சாஸ்த்ரியின் திடீர் மரணம் இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அதிக சிக்கலை ஏற்படுத்திய போதும் இவருடைய முயற்சியால் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமரானார். இந்த இரண்டு பிரதமர்களும் ஆட்சி அமைக்க இவரே முக்கிய காரணம். இதன்னலேயே இவர் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டார்.
ஆம் இவர்தான் தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்து அகில இந்தியக் காங்கிரஸின் ஒரே தமிழ் தலைவர் என்ற பெருமையை பெற்ற காமராஜர்.


இவருடைய சாதனைகளில் சில துளிகள்:

- ராஜாஜி கொண்டு வந்த குலகல்வி திட்டத்தை (அதாவது தனது தந்தை என்ன தொழில் செய்தாரோ அந்த தொழிலை மட்டும் தான் செய்ய வேண்டும். அதற்காக பாதி நேரம் கல்வியும் மீதி நேரம் (மாணவர்கள்) தந்தையுடன் சேர்ந்து குல தொழிலையும் கற்று கொள்ள வேண்டும் . மாணவிகள் தாயுடன் சேர்ந்து சமையல் பணிகளை கற்று கொள்ள வேண்டும். இந்த பணிகள் நடை பெறுகின்றனவா என்று கண்காணிப்பு பணி வேறு நடைபெற்றது! இந்த திட்டத்தின் கீழ் நிதிநிலை காரணம் காட்டப்பட்டு 6000 கல்வி சாலைகள் மூடப்பட்டது!) கைவிட்டார்.
- 12000 புதிய கல்வி சாலைகளை உருவாக்கினார்.
- கடும் சோதனைகள் மத்தியில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவர் காலத்தில் தான் தமிழகத்தில் படிப்பவர்களின் சதவீதம் உயர்ந்தது.
- சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) இவருடைய முயற்சியால் உருவானது.
- இவரால் உறவான பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்:

பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

இவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள்:

மணிமுத்தார் அணை
வைகை அணை
ஆழியார் அணை
சாத்தூர் அணை
கிருஷ்ணகிரி அணை


நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Sunday, 16 September 2012

பெரியார் செய்தது என்ன?

பெரியார்...
  • ஏன் திராவிட கழகத்தை தோற்றுவித்தார்?
  • ஏன் சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்?
  • ஏன் பகுத்தறிவு வாதம் பேசினார்?
  • ஏன் சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் பற்றி பேசினார்?
  • ஏன் பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், பெண் கல்வி,  பெண்களுக்கு சம உரிமை வழங்கிட வேண்டும் என்றும் கைம்பெண் திருமணம் எதிர்த்தும் பெண் விருப்பத் திருமணம் செய்தும்  வைத்தார் ?
  • ஏன் ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்களில் தனி கவனம் செலுத்தினார்?
  • ஏன் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார்?
  • ஏன் தேவதாசி முறையை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றினார்?
  • ஏன் வைக்கத்தில் தான் பாடுபட்டதற்கு வேறு ஒருவருக்கு பெயர் கிடைத்த போதும் அதனை பெரிதாக நினைக்காமல் போராட்டத்தில் வெற்றி பெற்றார்?
  • ஏன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார்?
  • ஏன் இந்தி திணிப்பை எதிர்த்தார்?
  • ஏன் தமிழ் எழுத்துகளை சீரமைத்தார் ?
  • ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்?
  • ஏன் நீதி கட்சியில் இணைந்தார்?
  • ஏன் திராவிடர் கழகம் தோற்றுவித்தார்? 
  • ஏன் கருப்பு சட்டை அணிய சொன்னார்?
  • ஏன் குல கல்வி திட்டத்தை எதிர்த்தார்?  
  • ஏன் கழக உறுபினர்களை தோழர் என் அழைக்க சொன்னார்?
  •  ஏன் சென்னை ராஜதானி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்க இரண்டாம் தடவையாக ஆளுநர் ஆர்தர் ஹோப் வேண்டுகோள் விடுத்தும் மறுத்தார்?
  •  ஏன் சோதனைக்குழாய் குழந்தை, செல்போன், உணவு மாத்திரைகள், விமானம், கம்பியில்லாத் தந்தி முதலானவற்றைக் குறிப்பிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்?
  • ஏன்  யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது? 
  • இதுபோன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டு கொண்டு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சொன்னதை போல 'அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாமல் ஏன் என்று கேள்வி கேட்டு உம் என்ற பகுத்தறிவால் விடை காண முயல்வதே' இன்று பிறந்த நாள் கொண்ட அந்த ஒப்பிலா தலைவருக்கு நாம் செய்யும் சிறிய மரியாதையாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்!

கடந்த வருடங்களில் நான் தொகுத்த செய்திகளும் உங்கள் பார்வைக்கு:

http://www.scribd.com/doc/66402344/Quotes-About-periyar
http://www.scribd.com/doc/53721029/periyar


நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Tuesday, 4 September 2012

நன்றியின் அடையாளம் வ. உ. சி.


V. O. CHIDAMBARAM PILLAI 0663 Indian Post
நாம் நன்கறிந்த வ. உ. சி. என்று அனைவராலும் போற்றப்படும் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதும் நாட்டிற்காக என்பதும் செக்கிழுத்தார் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கிலேயரின் இந்தியா, இலங்கை இடையேயான நாவாய்  வணிகத்திற்கு (இந்த வணிகம் ஆங்கிலேருக்கு முக்கியமானதாகவும் நல்ல பலனை கொடுப்பதாகவும் இருந்தது) எதிராக 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற நாவாய்  நிறுவனத்தைப் பதிவு செய்து பல சோதனைகளை கடந்து நாவாய் வணிகத்தை இயக்கினார் என்பதும் நாம் அறிந்ததே!


இதையெல்லாம் கடந்து அவருக்குள் மொழி புலமை (தமிழ், ஆங்கிலம்), எழுத்து, விளையாட்டு, ஒழுக்க நெறி கடைபிடித்தல், வெளிப்படை தன்மை போன்ற பல திறமைகளையும் குணநலன்களையும் ஒருங்கே அமைந்தவர்.
 வ. உ. சி. ஒரு திறமையான வழக்கறிஞர். ஆனால் வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. அதனால் வசதியான நிலையில் இருந்த வ.உ.சி. பிறகு போதுமான வருமானம் இல்லாமல் தவித்தார். திலகர் மாதம் ரூ.50 வ.உ.சி.க்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் என்ற ஆங்கிலேயர் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற வ.உ.சி.க்கு அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டு தனது நன்றி கடனை தெரிவித்தார்.

 இன்று வ.உ.சி.யின் பிறந்த நாள். 


இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

இன்று ஆசிரியர் தினம்



இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Wednesday, 29 August 2012

உடல் உறுப்பு தானம் ஒரு பார்வை:


உடல் உறுப்பு தானம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்!





நன்றி : முற்றம்

உடல் உறுப்பு தானம் என்ற இந்த விடயம் பலருக்கும் தெரியாததால் நம் கண் முன்னே நம்முடைய அன்பானவர்கள் பலரையும் இழக்க நேரிடுகிறது.
இந்த விழிப்புணர்வு பலருக்கும் இருக்குமேயானால் பல உயிர்களை நாம் காத்திருக்க முடியும்.
முடிந்தால் யோசித்து பாருங்கள்.
நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Tuesday, 21 August 2012

மணலுக்கு மாற்று வழிகள்

நம்மில் அநேகர் மணல் சுரண்டபடுவதை தடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்போம். ஆனால் அதை தடுப்பதை பற்றி பேச வேண்டுமானால் மாற்று வழி வேண்டுமல்லவா?
மாற்று வழிகளைத் தெரிந்து கொள்ள கீழ் காணும் சுட்டியை சொடுக்கவும்.

http://www.scribd.com/doc/103533400

நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்


எந்த பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தலாம் ?






இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்


Sunday, 1 July 2012

இயற்கை எனக்களித்த பதில் ...

பக்கமெல்லாம் பாடங்கள் 

பக்குவமில்லை எல்லாம் ஏற்ற!

ஏற்றியதெல்லாம் அனுபவங்கள் 

வாய்ப்புகளில்லை எல்லாம் பகிர!

சரியென்கிறது பகுத்தறிவு 

முடக்கப் பார்க்கிறது மூடநம்பிக்கை

 நடக்க திணவெடுக்கிறது நன்னெறி 

கடக்க தடையாய் நிற்கிறது அகந்தை 

உழைப்பால் கிறங்கடிக்கிறது உடம்பு 

நினைப்பால் மலுங்கடிக்கிறது மனது 

போட்டி போட்டு ஓட்டங்கள் 

ஜெயித்து கொண்டேயிருக்கிறது நேரம் 

என்னதான் செய்வது ...?

மற்ற உயிரனமெல்லாம் 

அசரவில்லையே எதற்கும் !!!

 
உரக்கக் கேட்டேன் ...

"
உனக்குரியது எதுவும் இல்லை 

கற்றதை சொல்லி கொடு 

பெற்றதை அள்ளி கொடு 

மற்றதை தள்ளி விடு "

அமைதியை பார்த்தது இயற்கை ...!

-
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் 

Sunday, 24 June 2012


இந்த உலகில் நல்லவை தீயவை ஆகிய இரண்டையும் ஆதரித்து|எதிர்த்து சொல்வதற்கு அநேக கதைகள், உதாரணங்கள், தத்துவங்கள் போன்றவை உள்ளது. ஆனால் யார் எதை கடைபிடிக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழல் மற்றும் மனப்பான்மையை பொறுத்து அமைகிறது.  - க. இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் 


Monday, 4 June 2012

GREEN ECONOMY: DOES IT INCLUDE YOU?

இன்று உலக சுற்றுசூழல் தினம்
மரக்கன்றுகள் வைப்போம்!
பசுமை காப்போம்!
தலைமுறைகள் வாழ வழி வகுப்போம்!
நன்றி!


கடந்த வருடம் இதே நாள் மலரும் நினைவுகள்

அன்புடையீர்!
வணக்கம்,
நம்முடைய 1000 மரக்கன்றுகள் நாடும் (நடும்) விழாவானது இனிதே நிறைவுற்றது. 
சிறப்பம்சங்கள்:
  • இந்நிகழ்ச்சி சமுதாய மேம்பாடு அமைப்பு, ஈஷா பசுமை கரங்கள் திட்டம் மற்றும் தியாகி பௌண்டேஷன் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது. 
  • 1000 மரக்கன்றுகள் இலவசமாக தந்துவுதவியவர்கள் - ஈஷா  பசுமை கரங்கள் திட்டம் மற்றும் இணை பேராசிரியர் சந்திர சேகர் அவர்களின்  தியாகி பௌண்டேஷன், பட்டுகோட்டை.  
  • கொடுக்கப்பட்ட மர வகைகள் - தேக்கு, மகாகனி, சரகொன்றை, யானை குண்டுமணி, சிசு மற்றும் வேம்பு.
  • ஊராட்சி மன்ற தலைவர் மரக்கன்றுகள் ஏற்றி வருவதற்கு வாகனம் தந்து  உதவினார். 
  •  சமுதாய மேம்பாடு அமைப்பினர் முந்தைய தினமே முகாமிட்டு நிகழ்சிகளை வழி நடத்தினர். 
  • மரக்கன்றுகள் பொது இடங்கள் மற்றும் வீடு வீடாக கொடுக்க பட்டது. மரக்கன்றுகள் பெறுவதற்கு பெரும்பாலான மக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே குழிகள் வெட்டி வைத்துள்ளது கண்கொள்ள காட்சியாக இருந்தது.  
  • இளைஞர்கள் இரும்பு சட்டிகளில் மரக்கன்றுகளை கொண்டு சென்று ஒவ்வொரு வீடுகளாக சென்று அவர்கள் குழி வெட்டி வைத்திருகிறார்களா என்று சரி பார்த்து தேவையான மரக்கன்றுகளை சமர்ப்பித்தனர். 
  • மகளி சுய உதவி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர் மற்றும் நிகழ்ச்சிக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
  • கூட்டத்தின்போது சுற்று சூழல் பற்றியும் அதற்கு கோவிலூர் கிராம மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி பேசப்பட்டது. 
  • தேவதாஸ்  என்ற இளைஞர் இலவசமாக பதாகையை எழுதி கொடுத்தார். 
  • கோவிலூர் கல்வி தரத்தை உயர்த்த சமுதாய மேம்பாடு அமைப்பினரிடம் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது. மேலும் நூலகத்திருக்கு  இடம் ஒதுக்கி தருவதற்கு தயாராக இருப்பதாகவும் நூலகத்திருக்கு தேவையான புத்தகங்கள் கொடுத்து உதவுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. 
  • வரதராஜன் என்ற  இளைஞர் நிகழ்ச்சி பார்த்த இரண்டு மணிநேரத்தில் தன் ஊரான கருபில்லா  கட்டளையில் இளைஞர்களுக்கான  கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டார். அங்கும் சுற்று சூழல் குறித்தும் அவ்வூரின் நிலை குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. 
குறிப்பு: 
பங்கு கொண்ட அனைத்து உறுபினர்களுக்கும், ஏற்பாடு செய்த கோவிலூர் கிராம 
இளைஞர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தவி செய்த அனைவருக்கும் 
நன்றிகள். மேலும் இந்த நிகழ்வுக்கு தொலைபேசியிலும், 
மின்னஞ்சலிலும் ,
  நேரடியாகவும் ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது நன்றிகள். 


சமுதாய மேம்பாடு அமைப்பு சார்பாக  
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் 









  





நன்றி! 
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Wednesday, 16 May 2012

மணல் கொள்ளை


ஆடையோ வெள்ளை 
அடிப்பதோ மணல் கொள்ளை! 
எண்ணமோ சந்ததிகளுக்கு
 நல் அறைகள் !
கட்டுவதோ உண்மையில்
எதிர்கால கல்லறைகள் ...

(பி. கு. ஆறு இலையேல் சோறு இல்லை)

ஆறுகள் தான் மிக பெரிய நீர் சேகரிப்பு தொட்டி
மணல்கள் பூமிக்குள் தண்ணீரை சேகரிக்கும் வேலையை
செம்மையாக செய்கின்றன
மணல் கொள்ளைக்கு நீங்களும் ஒரு காரணம் ஆக வேண்டாம்
தயவுசெய்து எதிர்கால சந்ததிக்கு தண்ணீர் விட்டு வையுங்கள்
நமக்கே தண்ணீர் பற்றாகுறை வந்து விட்டது 
என்பதை நினைவில் வையுங்கள்
நீர் ஆதார நிலைகள் குறைந்து வருகின்றன!
யோசித்து பாருங்கள்!
நல் முடிவு எடுங்கள் !
நன்றி!
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் 


Tuesday, 8 May 2012

மதம்

மதம்:

மனிதனை 

பக்குவப்படுத்த உருவாக்கப்பட்டது!
பகுத்தது மனிதனை!!!

இப்போது,
பகுப்பே பக்குவமாய்..!!!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் 



Discipline



மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய கூடாது என்று நினைகின்றாயோ அதையே மற்றவர்களுக்கும் செய்யாது இருப்பதே ஒழுக்கம் ஆகும்
- பெரியார் ஈ. வெ. ராமசாமி



ஓவியம் 
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Monday, 30 April 2012


Show More Labor Day Pictures, Images



























Labor is the only prayer that Nature answers- Robert Green Ingersoll


-K.I.AROON JOSHVA RUSEWELT