Monday, 1 October 2012

கிங் மேக்கர் யார்?



- இவருடைய இயற் பெயர் காமாட்சி
- இவருடைய பிறந்த சிறு கிராமமான விருதுநகர் இன்று இவரால் விருதுநகர் மாவட்டமாக நிமிர்ந்து நிற்கிறது.
- இவருடைய புனை பெயர்கள் கிங் மேக்கர், பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்ம வீரர் (செயல் வீரர்),

தென்னாட்டு காந்தி
- தந்தை பெரியார் கொடுத்த தைரியத்தில் என்னால் படுத்து கொண்டே ஆட்சியை பிடிக்க முடியும் என்று முழக்கம் இட்டவர்.
- வயதானவர்கள் கட்சியில் பதவி வகுக்க கூடாது இளையவர்களுக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்ற K -PLAN ஐ கொண்டு வந்தவர்.

ஜவஹர்லால் நேருவும் அதனை ஏற்று கொண்டார். சொன்னதோடு இல்லாமல் தனது முதல்வர் பதவியை பக்தவட்சலத்திடம் ஒப்படைத்தார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் இவர் வழியில் பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்
- ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு மிகுந்த குழப்பத்துடன் காணப்பட்ட காங்கிரஸ் ஐ மிகவும் திறம்பட நடத்தியவர். ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்த்ரி வருவதற்கு இவரே முக்கிய காரணம். எதிர்பாராத விதமாக லால் பகதூர் சாஸ்த்ரியின் திடீர் மரணம் இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அதிக சிக்கலை ஏற்படுத்திய போதும் இவருடைய முயற்சியால் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமரானார். இந்த இரண்டு பிரதமர்களும் ஆட்சி அமைக்க இவரே முக்கிய காரணம். இதன்னலேயே இவர் கிங் மேக்கர் என அழைக்கப்பட்டார்.
ஆம் இவர்தான் தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்து அகில இந்தியக் காங்கிரஸின் ஒரே தமிழ் தலைவர் என்ற பெருமையை பெற்ற காமராஜர்.


இவருடைய சாதனைகளில் சில துளிகள்:

- ராஜாஜி கொண்டு வந்த குலகல்வி திட்டத்தை (அதாவது தனது தந்தை என்ன தொழில் செய்தாரோ அந்த தொழிலை மட்டும் தான் செய்ய வேண்டும். அதற்காக பாதி நேரம் கல்வியும் மீதி நேரம் (மாணவர்கள்) தந்தையுடன் சேர்ந்து குல தொழிலையும் கற்று கொள்ள வேண்டும் . மாணவிகள் தாயுடன் சேர்ந்து சமையல் பணிகளை கற்று கொள்ள வேண்டும். இந்த பணிகள் நடை பெறுகின்றனவா என்று கண்காணிப்பு பணி வேறு நடைபெற்றது! இந்த திட்டத்தின் கீழ் நிதிநிலை காரணம் காட்டப்பட்டு 6000 கல்வி சாலைகள் மூடப்பட்டது!) கைவிட்டார்.
- 12000 புதிய கல்வி சாலைகளை உருவாக்கினார்.
- கடும் சோதனைகள் மத்தியில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவர் காலத்தில் தான் தமிழகத்தில் படிப்பவர்களின் சதவீதம் உயர்ந்தது.
- சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) இவருடைய முயற்சியால் உருவானது.
- இவரால் உறவான பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்:

பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

இவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள்:

மணிமுத்தார் அணை
வைகை அணை
ஆழியார் அணை
சாத்தூர் அணை
கிருஷ்ணகிரி அணை


நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

No comments:

Post a Comment