நாம் நன்கறிந்த வ. உ. சி. என்று அனைவராலும் போற்றப்படும் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதும் நாட்டிற்காக என்பதும் செக்கிழுத்தார் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கிலேயரின் இந்தியா, இலங்கை இடையேயான நாவாய் வணிகத்திற்கு (இந்த வணிகம் ஆங்கிலேருக்கு முக்கியமானதாகவும் நல்ல பலனை கொடுப்பதாகவும் இருந்தது) எதிராக 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற நாவாய் நிறுவனத்தைப் பதிவு செய்து பல சோதனைகளை கடந்து நாவாய் வணிகத்தை இயக்கினார் என்பதும் நாம் அறிந்ததே!
இதையெல்லாம் கடந்து அவருக்குள் மொழி புலமை (தமிழ், ஆங்கிலம்), எழுத்து, விளையாட்டு, ஒழுக்க நெறி கடைபிடித்தல், வெளிப்படை தன்மை போன்ற பல திறமைகளையும் குணநலன்களையும் ஒருங்கே அமைந்தவர்.
வ. உ. சி. ஒரு திறமையான வழக்கறிஞர். ஆனால் வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. அதனால் வசதியான நிலையில் இருந்த வ.உ.சி. பிறகு போதுமான வருமானம் இல்லாமல் தவித்தார். திலகர் மாதம் ரூ.50 வ.உ.சி.க்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் என்ற ஆங்கிலேயர் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற வ.உ.சி.க்கு அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டு தனது நன்றி கடனை தெரிவித்தார்.
இன்று வ.உ.சி.யின் பிறந்த நாள்.
இ. ஆரோன்
ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment