யாவனொவருன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையிலிருப்பதை பற்றி இராப் பகல் வருந்துகின்றானோ, யாவனொவருன் இந்த முப்பது கோடி (தற்போது 121 கோடியை தாண்டி விட்டது !!!) யாவனொவருன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறார உண்பதற்கு உணவும் உடுக்க ஆடையும் இன்றி தவிகின்றார்களே என்று மனமிரங்கி கண்ணீர் சொரிகின்றனோ, யாவனொவருன் இவ்வகை துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டு தனது அறிய வுயிரையும் இழக்க தயாரா இருக்கின்றானோ அவனொருவனே ஜன தலைவன்! அவனொருவனே தேசாபிமானி. அவனொருவனே இத்தேசத்தார் வணங்கும் கண்கண்ட தெய்வமல்லாமல் கேவலம் பொருளை கொண்டும் வாயடியை கொண்டும் பார்த்தோர் மெச்சும் படியான தோற்றத்தை கொண்டும் தேசாபிமானி எனவும் ஜனத் தலைவன் எனவும் பிதற்றுவோர்கள் உண்மையான ஜனத் தலைவர்கள் ஆக மாட்டார்கள்.
- ஜனத் தலைவர்களாவார் யார்? என்ற தலைப்பில் 12 -01 -1907 ம் ஆண்டில் 'இந்திய' பத்திரிகையில் மகாகவி பாரதியார் எழுதியவை.
இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
No comments:
Post a Comment