Friday, 22 April 2011

எனக்கு பிடித்த நன் மொழிகள் சில துளிகள்...


எனக்கு பிடித்த நன் மொழிகள் சில துளிகள்... 

சுயமாக  சிந்தனை செய்யாத மனிதன் அடிமை, சிந்திப்பவனே முன்னேறுகிறான் - இங்க்சர்லால் 

எது உன்னிடம் இல்லையோ அதுதான் உனக்கு மிக தேவை - மலேயா பொன்மொழி 

மன்னித்தல் தண்டித்தலை  விட சிறந்தது. ஏனெனில் தண்டித்தல் மிருக குணம். மன்னித்தல் மனித குணம். - நெப்போலியன் 

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் - பாரதிதாசன் 

என்னுடைய வயதை நான் ஆண்டுகளை கொண்டு அளவிட விரும்பவில்லை. நான் செய்து முடித்த செயல்களை கொண்டே என் ஆயுளை கணக்கிடுகிறேன் - தாமஸ் ஆல்வா எடிசன்


கஞ்சி குடிபதற்கு இல்லார் அதன் காரணம் இன்ன என்னும் அறிவுமில்லார் - பாரதியார் 

பிறப்பினாலே எவருக்கும் பெருமை வராதப்பா
சிறப்பு வேண்டுமென்றல் நல்ல செய்கை வேண்டுமப்பா- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 


இங்கு வரங்களே சாபங்களானால்
தவங்கள் எதற்காக
- கவிகோ அப்துல் ரஹ்மான்  


நாம் படிக்க படிக்க தான் நம்மிடமிருந்த அறியாமையை உணர்கிறோம் - ஷெல்லி

எந்த வீட்டில் புத்தக சாலை இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருகின்றந்து - பிளாடோ 


பிறரை மாற்றி கொள்ள புத்தி சொல்கின்றனர். தன்னை மாற்றி கொள்ள யாருமே நினைப்பதில்லை - லியோ டால்ஸ் டாய்  


பிறர் எழுதியுள்ள நூல்களை கொண்டு உங்களை திருத்தி கொள்வதில் நேரத்தை செலவிடுங்கள். பிறர் வருந்தி உழைத்ததை கொண்டு நீங்கள் சுலபமாக பெற கூடிய பயன் இது- சாக்ரடீஸ் 



நீ புகழுடன் இருக்க விரும்பினால் படிப்தற்கு தகுந்த புத்தகங்களை எழுத்து அல்லது உன்னை பற்றி எழுதுவதற்கு தகுந்தபடி உன்னை மாற்றி கொள்ள.- பிராங்க்ளின்


வரம்பற்ற உற்சாகம் ஒருவனிடம் இருக்குமானால் எப்படிப்பட்ட காரியம் ஆனாலும் வெற்றி பெற்று விட முடியும் - சார்லம் . எம். ஸ்வாப் 


ஒரு மனிதனின் தீய செயல்களை வெறுத்து ஒதுக்கு. அனால் மனிதனை ஒதுக்காதே - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 

உண்மை சொல்வதால் சில சிரமங்கள் ஏற்பட்டாலும் ஒரு வித மன நிறைவை தரும்- ஜெய காந்தன்

ஒரு வினை திறன் உனக்கு தெரியாத போது தெரியாது என்று ஒப்பு கொள்வதற்கு பெயர் தான் அறிவு - கன்பியுசியஸ் 


தவறுகளை  ஒப்பு கொள்ளும் தைரியமும் அதை திருத்தி கொள்ளும் பலமும் தான் உண்மையான வெற்றிக்கு வழி - லெனின்

பழிவாங்குதல் மனித பண்பிற்கு விரோதமான ஒரு மொழி - செனிகா 


உங்களுக்காக பொய் சொல்பவன் உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்- வுட்வேல்  


கருணையே இல்லாமல் அறிவு மட்டும் நிறைய இருப்பதை விட அறிவே இல்லாமல் சிறிதளவாவது கருணையோடு இருபதே உயர்வானது  - விவேகானந்தர்


ஒருவனுக்கு பிடித்தமான பொழுது போக்கே அவனுடைய தொழிலாக அமைந்து விட்டால் அவனை விட கொடுத்து வைத்தவன் யாரும் கிடையாது - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 

காரியம் செய்ய முடிந்தவன் சாதிக்கிறான் செய்ய முடியாதவன் போதிக்கிறான் - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 


தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள் தொலைந்து போகிறது ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள் அதுதான் முக்கியம் - வெச்சிங் 


பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட பிறருக்கு உடையும் கரங்களே புனிதமானவை - அன்னை தெரசா


படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாகுகிறது; உரையாடல் ஒரு மனிதனை எதை குறித்தும் எப்போதும் பேசுவதற்குரிய மனிதாக்குகிறது; எழுதுதல் ஒரு மனிதனை திடமான மனிதனாக்குகிறது- பேக்கன்



ஒரு முள் குத்திய அனுபவம் காதளவு எச்சரிக்கைக்கு சமம் - வோஎஸ்


ஒரு நூல் நிலையம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு ஒன்று மூட படுகிறது - விவேகானந்தர் 













No comments:

Post a Comment