'தொண்டு செய்து பழுத்த பழம்' பெரியாரை குறித்து பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உரை. இன்றும் இளைஞர்களின் எழுச்சிகளை நாம் பல்வேறு இடங்களில் காண்கிறோம். அசோகர் குளத்தை வெட்டினார், மரத்தை நட்டார் என்ற மகத்துவத்தை
வரலாறில் படித்த போது புரியவில்லை. வறட்சி அதன் அர்த்தத்தை நன்கு உணர்த்தி சென்றது. தண்ணீர் பஞ்சம், மாசடைந்த காற்று என்று எங்கு நோக்கினும் கூப்பாடுகள். எதிர்காலத்தில் பிரச்சினை வராமல் இருக்கவும், தற்போது தற்காத்து கொள்ளவும், சமூக அக்கறை கொண்டு படிப்பினையும், வகிக்கும் பதவியையும் கழட்டி வைத்து களத்தில் இறங்கி பணிபுரிகின்றனர். நாள் தோறும் குளம் தூர் செய்த, மரக் கன்று நட்ட, விதை பந்து வீசிய செய்திகள் பார்க்க முடிகிறது சுற்றுசூழல் மட்டுமல்ல ... கல்வி, சுகாதாரம், சமூக நீதி, குழந்தை பாதுகாப்பு, பசிப்பிணி நீக்கம் என பலதுறைகளிலும் பல்வேறு வகைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் பின்னணியில், வறுமை, வெறுமை, விரக்தி, தோல்வி ,உடல்நல பிரச்சினை என்ற பலவற்றையும் தாங்கி பணிபுரிபவர்களை கண்டிருக்கிறேன். ஆனால் அதனை பொது வெளியில் அவர்கள் காட்டுவதில்லை. தாங்கள் எடுத்த காரியம் சிறப்புற முடிகிறதா என்ற தீவிரமும் அதில் கிடைக்கும் முடிவில் கிடைக்கும் திருப்தியும் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியில் இருக்கச் செய்வதுமே இவர்கள் பணியாக இருக்கிறது. இவர்கள் பற்றி தெரியாத அரைகுறையாக தெரிந்தவர்கள் பேசும் விமர்சனங்களையும் இவர்கள் எதிர்கொள்ளாமல் இல்லை. என்னவாக இருந்தாலும் நல்ல பலனை எதிர்பார்த்து தன் கடனை செய்பவர்களை இந்நாளை விட்டால் வாழ்த்துவதற்கு வேறு சிறந்த நாள் எதுவுமில்லை.
தன்னலம் இருந்தாலும் இல்லையெனினும் பொது நலத்துடன் செயல்படும் அனைத்து தன்னார்வலர்களுக்கும்
#தன்னார்வலர் தின வாழ்த்துகள்
No comments:
Post a Comment