அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆடக் கண்டேனே... என்று ஒரு தமிழ் படத்தின் பாடலைக்
கேட்டிருப்போம்... நம் அருகே சிலர் அக்கரைச்சீமையில் சம்பாதிப்பதற்காக செல்வதை
பார்த்திருப்போம்.. சிலர் அங்கே உள்ள அழகை ரசிப்பதற்காக... சிலர் வியாபார
விடயமாக... சிலர் சிகிச்சைக்காக... என்று விரிந்தாலும்... வெளிநாட்டில் சென்று
வேலை செய்து அதிக பணம் சம்பாதித்து வீட்டுக் கடனை அடைக்கலாம், நம் குடும்பத்திற்கு நல்ல விடிவினைக் கொண்டு வரலாம்... என்று
செல்பவர்களும் உண்டு. இதுபோன்று பலவிதங்களில் வெளிநாடு சென்று வாழும்
இந்தியர்களின் எண்ணிக்கை 3 கோடியினைத் தாண்டுகிறது. இதில் 90 இலட்சம் பேர் வளைகுடா கூட்டுறவு குழு நாடுகளில் (Gulf
Cooperation Council-GCC) வாழ்கின்றனர்
(பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்) ஆனாலும், அவ்வப்போது நாம் கட்செவி அஞ்சலில் (Whatsapp) அவ்வப்போது நமக்கு கிடைக்கும் காணொலிகளானது.... நான் ஒரு புரோக்கரை
நம்பி ஏமாந்து இங்கு வந்து மாட்டிக்கொண்டேன். என்னை ஆடு மேய்க்கச்
சொல்கிறார்கள்... ஒட்டகம் மேய்க்கச் சொல்கிறார்கள்...என்ற இளைஞர்களின்
புலம்பலும்... நான் வீட்டு வேலைச் செய்து என் குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று
வந்தேன்... ஆனால் இங்கே என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்னை எப்படியாவது
காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் கண்ணீரையும் நாம் அடிக்கடி காண முடிகிறது... ஆனால்,
அவர்களை எப்படி காப்பாற்றுவது அவர்களுக்கு
எப்படி உதவி செய்வது என்று தெரியாமல், அந்த காணொலியினை
நாம் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுகிறோம். அப்படியானால் வெளிநாட்டில் வேலை செய்ய
முடிவெடுத்து விட்டோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கே
ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் எழுகிறது.
இதற்கு ஒரு சில தகவல்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
வெளிநாடுகளுக்குச்
செல்வதற்கு முன்னர் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை:
1. நீங்கள் குடியேற்றம் தடை செய்யப்பட்ட
நாட்டிற்குச் செல்லவில்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ளவேண்டும். இந்தத் தகவலை www.mea.gov.in என்ற வலைத்தளத்தில் காணலாம். இதில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டுக்
கொண்டிருக்கும்.
2. முகவர்கள்: நீங்கள் முகவர் மூலமாக வெளிநாடு செல்கிறீ;ர்கள் என்றால் அவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்டவரா
என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். பதிசெய்யப்பட்ட முகவர் விபரங்களை www.emigrate.gov.in
என்ற வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் List of Active RA என்ற இணைப்பைச் சுட்டுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட முகவர்களின் வாயிலாக செல்வதால் என்ன நன்மைகள்
ஏற்படுகிறது?
• புலம்பெயர்ந்தவர்களின் முக்கியத் தகவல்கள் இணையவழியில்
பதிவுசெய்யப்படுகின்றன. (மின்குடியேற்றம்- e-migrate)
• பதிவு பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்களின் மற்றும் வெளிநாட்டில் வேலை
அளிப்பரின் (Foreign Employer) சான்றுக் கடிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
• வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இணைய வழியில் தயாரிக்கப்படுகிறது. இதனால்
மோசடி செய்தலுக்கான வாய்ப்புகள் குறைவு
• புலம் பெயர்ந்தவர்களுக்கு (ரூ.10 இலட்சம்) காப்பீட்டிற்கும் வகை செய்கிறது.
• பதிவு பெற்ற முகவர்களின் பதிவை நிறுத்த அல்லது ரத்து செய்வதின்
வாயிலாக துயரத்தில் உள்ள புலம் பெயர்ந்தவர்களின் குறைகளை களைவதற்கு பதிவுபெற்ற
முகவர்கள் மீது விரைவான நடவடிக்கையை அரசு எடுக்கலாம்.
• பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனை/துயரம்/மன அழுத்தம்/சொந்த நாடு
திரும்புதல் குறித்து, அவர்களை அதில் இருந்து மீட்பதற்கு
பதிவுப்பெற்ற முகவர்கள் கடமைப்பட்டவர்களாவர்.
முக்கியக்குறிப்பு: இந்த முகவர்களுக்கும் ‘வீட்டு வேலை’ செய்வதற்காக புலம் பெயர்பவர்களை
அனுப்பி வைப்பதற்கான அனுமதி கிடையாது. வீட்டு வேலை சம்மந்த பணிகளுக்காக புலம்
பெயரும் பெண்கள் வெளிநாட்டில் வாழும் வேலை அளிப்பவர் என்ற இணைய தளத்தில் தங்கள்
தேவையை பதிவு செய்திருப்பர். அவருடைய தேவையின் பொருட்டு வேலை செய்யத் தயாராக
இருப்போரும் பதிவு செய்து. இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த ஒப்பந்தத்தின்
அடிப்படையில் தான் ‘வீட்டு வேலை’ சார்ந்த பணிக்குச் செல்ல வேண்டும். இதற்கென்று தனி முகவர்கள்
கிடையாது. அப்படி முகவர்கள் அணுகினால் நீங்கள் விற்கப்படபோகிறீர்கள் என்பது
அர்த்தமாகும்.
3. முகவர்களுக்காக அரசால்
நிர்ணயிக்கப்பட்ட சேவைக் கட்டணம் ரூ.30,000 மட்டுமே.
அதிகம் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
4. மெட்ரிக் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் செவியிலியர் பணி நிமித்தம்
செல்லும் பெண்கள் ஆகியோருக்கு 18 நாடுகளில் (ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா , ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேஷியா, ஈராக், ஜோர்டான், லெபனான், லிபியா, மலேசியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, தாய்லாந்து மற்றும் ஏமன்) குடியேற்ற
சோதனை தேவைப்படும் (Emigration
Check Required) கடவுச்சீட்டினை (Passport) பெற வேண்டும். மற்றவர்கள் குடியேற்ற சோதனை தேவைப்படாத (Emigration
Check Not Required) கடவுச்சீட்டினை
பெற்றுக்கொள்ளலாம்.
5. 18 குடியேற்ற சோதனை தேவைப்படும்
நாடுகளுக்கு (ECR) தொழிலாளர்கள் செல்லும் முன், குடியேறுபவர்களின் தலைமைப் பொதுக் காப்பாளரின் (Protector General of
Emigrants (PGE)) அலுவலகம், தங்களுடைய 10 (புது டெல்லி, ராபெரேலி, ஜெய்ப்பூர், சண்டிகார், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், கொச்சின்) குடிபுகுந்தோருக்கான பாதுகாவலர் அலுவலகத்தின் (Protector
of Emigrants-PoE) வாயிலாக
குடியேற்ற அனுமதி வழங்குகிறது.
உங்கள் பணி
ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட விடயங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்:
• தொழில்
• ஒப்பந்த கால அளவு
• வேலை நேரம்
• தகுதி காண் பருவம் (Probation Period)
• சம்பளம் மற்றும் படிகள்
• விடுப்புகள்
• வான் வழி பயணம்
• உணவு வழங்கல்
• தங்குமிட விபரங்கள் மற்றும் காப்பீடு
• ஒப்பந்தத்தை இரத்து செய்தல், இறுதியில்
கிடைக்கப்பெறும் பயன்கள்
• நியமனதாரர் (Nominee)
• குறைகளைக் களைதல் முறைகள்
வெளிநாடு
செல்வபர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்பயண மருத்துவப் பரிசோதனை:
வளைகுடா
நாடுகளில் GCC ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களின் அமைப்ப்pன் (GCC Approved Medical
Centres Association-GAMCA) மருத்துவப்
பரிசோதனையில தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் ஆகும்.
• இந்த மருத்துவப் பரிசோதனையில் தேர்வு பெற வில்லையெனில் நுழைவிசைவு (Visa) கிடைக்காது.
• இந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கை 3 மாதங்கள் வரை மட்டுமே செல்லும்.
• மருத்துவப் பரிசோதனை அறிக்கை நகல் மற்றும் பணம் கட்டியதற்காக பற்றுச்
சீட்டினையும் வைத்திருக்க வேண்டும்.
• அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமையங்களின் பட்டியலை கீழ்க்காணும் வலைதள
இணைப்பில் காணலாம்:
இந்தியாவில்
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்கள் மங்களுர், அகமதாபாத், பெங்களுரு,லக்னோ, மும்பை, சென்னை, புதுடில்லி, ஐதராபாத், ஜெய்பூர், திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு, மஞ்சேரி, திரூர், கொச்சி, கோவா மற்றும் கொல்கத்தாவில் அமைந்துள்ளன.
வெளிநாட்டில் உங்கள் நண்பன் இந்திய தூதரகம்:
• இந்தியத் தூதரகம் அல்லது உயர் ஆணையத்தில் இந்தியத் தூதர் மற்றும்
காமன்வெல்த் நாடுகளில் உயர் ஆணையர் இருப்பர்.
• இங்கே ஆலோசகர் பிரிவுகளின் கீழ்
·
தொழிலாளர் பிரிவு
கவனிப்புப் பிரிவு
இறப்புப் பிரிவு
இந்தியர்கள் மற்றும் ஏனையோரை பதிவு செய்தல்
·
கடவுச்சீட்டுப் பிரிவு
·
நுழைவுஇசைவுப் பிரிவு
• தொழிலாளர் பிரிவின் கீழ் கீழ்க்காணும் பிரச்சனைகள் கையாளப்படுகிறது
ழ வேலை வழங்குபவர் ஊதியங்கள் வழங்காதது/காலம் தாழ்த்தி
வழங்குவது, மாற்று ஒப்பந்தம்
ழ கூடுதல் பணி நேரம், தரக்குறைவாக நடத்துதல்/கொடுமைப்படுத்துதல்/உடலளவில்/மனதளவில்
இடையூறு விளைவித்தல் அல்லது தவறாக நடந்து கொள்ளுதல்
ழ கடவுச்சீட்டை தன் வசம் வைத்துக் கொள்ளுதல்,
உள்ளுர் காவல்துறையிடம் பொய்யான புகார்களை
பதிவு செய்தல்
ழ நிலுவைத் தொகைகளை செலுத்தாதது, விடுப்பு எடுக்க அனுமதி அளிக்காதது, போதிய வசதியின்மை, மோசமான வாழும் சூழல்கள் ஆகியவை
குறித்து,
ழ இறந்து போன இந்தியர்களின் உடலை கொண்டு
செல்லுதல்,
ழ இறந்து போன இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய
இழப்பீட்டைக் கோரிப்பெறுதல், சிறையில் அடைக்கப்பட்டுள்ளோர்களுக்கு
தூதரகத்தின் உதவி, நீதிமன்ற வேலை நாட்களிலும்கூட அங்கு
செல்ல விடாமல் தடுத்தல், தொழிலாளர் முகாம்களுக்கான வருகை
குறித்து போன்ற சிக்கல்களை கவனிக்கின்றனர். மேலும் உள்ளுர் அதிகாரிகள்/அயல்நாட்டு பணி
வழங்குவோர்களுடன் அவர்களின் இறப்பிற்கு பின்னர் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய
உரிமைகளைத் தீர்வு செய்தல்.
ழ மேலும், இந்தியர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை அளித்தல், சட்டத்திற்கு புறம்பாக வசிக்கும் இந்தியர்களை அவர்களின் தாயகத்திற்கு
திருப்பியனுப்புதல் போன்றவை.
• கடவுச்சீட்டுப் பிரிவு:
ழ புதிய கடவுச்சீட்டுகள், புதிய கடவுச்சீட்டு கையேடுகளை புதுப்பித்தல், அவசர சான்றிதழ் மற்றும் ஏனைய பயண ஆவணங்களை வழங்குதல், இந்திய குடிமகன் அட்டையை வழங்குதல், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையாக மாற்றப்பட வேண்டிய இந்திய
மரபுவழியினர் அட்டை, பகராள் செயல்உரிமை, பணி ஒப்பந்தங்கள் போன்ற ஆவணங்களுக்கு சான்றொப்பமிடுதல், இந்தியர்களின் பிறப்பு, இறப்பு மற்றும்
திருமணங்களை பதிவு செய்தல்.
• நுழைவுஇசைவுப் பிரிவு
ழ வெளிநாட்டவரின் நுழைவிசைவு விண்ணப்பங்களை
செயல்முறைப்படுத்தல், இந்திய தூதரகத்திலிருந்து அனுமதி
பெறுதல், இந்தியாவில் குடியிருக்காத
விண்ணப்பதாரர்களின் பதவிகள் பட்டியலை பராமரித்தல், நுழைவிசைவு வழங்குதல், மற்றும் தூதரக
முகாம்கள் வசதி செய்துத் தருதல்.
• வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக உள்ள திட்டங்கள்:
இந்திய சமூக நல நிதியம் (Indian
Community Welfare Fund)
விமானப்பயணம்,
பெண்களுக்கான உதவி, உணவு மற்றும் தங்கும் வசதி, சட்டரீதியான
உதவி, இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லுதல்,
அவசரகால மருத்துவச் சிகிச்சை, அபராதங்கள் போன்றவற்றை வெளிநாட்டில் இருப்பவர்களுக்காக இந்த நிதியில்
இருந்து செய்யப்படுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியருக்கான காப்பீடு திட்டம் (Pravasi
Bharathiya Bheema Yojana)
e-migrate அமைப்பில் குடியேற்றச் சான்றிதழ் வேண்டி தாக்கல் செய்வதற்கு முன்னர்,
இந்தக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய
வேண்டும். இதன் தவணைத் தொகை ரூ.275 (இரண்டாண்டுகள்)
மற்றும் ரூ. 375 (மூன்றாண்டுகள்).
இதன் மூலம்
விபத்து மரணம் மற்றும் செயல்திறன் குறைபாடு ஏற்படின் ரூ.10 இலட்சம் வரை இழப்பீடு கிடைக்கிறது. இறப்பு ஏற்பட்டால் தாயகம் கொண்டு
வரும் வசதிகள், துணையாளுக்கான விமானப் பயணக் கட்டணம்.
மருத்துவஉதவி ரூ.1 இலட்சம் வரை (அதிகபட்சம் ரூ.50000
2 நபர்களுக்கு), மகப்பேறுச் செலவுகள்- சுகப்பிரசவத்திற்கு ரூ.35000 அறுவைச் சிகிச்சைப் பிரிவிற்கு ரூ.50000 மற்றும் சட்டசெலவுகளுக்கு ரூ.45000 வரை இ;த்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
துணைத்தூதரகக் குறைகள் கண்காணிப்பு
அமைப்பிற்கான வலைத்தளம் (MADAD)
தொழிலாளர்
கொடுமை, ஆள் எடுப்பு முகவர்கள், ஆதரவாளர் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள், இந்தியக் குடிமக்களைத் தாயகத்திற்கு அனுப்புதல், இந்தியக் குடிமக்களின் இருப்பிடங்களைக் கண்டுபிடித்தல், இறப்புஃகாயத்திற்கு இழப்பீடு, இறந்துவிட்ட குடிமக்களின் உடல்களைக் கொண்டு செல்லுதல் மற்றும்
திருமணத் தகராறு தொடர்புடைய விவகாரங்கள் ஆகியவை தொடர்பான விவகாரங்களின் மீதான
குறைகளைத் தீர்ப்பதற்கான இணையவழி துணைத் தூதரகக் குறைகள் கண்காணிப்பு அமைப்பு
இதுவாகும்
வலைத்தளம்: https://portal2.madad.gov.in
இந்த
வலைத்தளத்தில், தொழிலாளர்கள் தங்கள் குறைகளை, இணைய வழியில் அனுப்பவும், பதிவு செய்யவும்,
புகாரின் நிலையை அறியவும், இறுதியாகத் தீர்க்கப்படும் வரையில் மேல்முறையீடு செய்யவும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகப் பதிவு செய்யவும்,
முழுக் குறைகளையும் சிறப்பாகத் தடமறியவும் இது
அனுமதிக்கிறது. துணைத்தூதரகக் குறைகளின் நிலை அறியவும், மேல் நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாட்டிலிருக்கும்
அனைத்து இந்தியத் தூதரகங்களுக்கும்/தூதுக்குழுக்களும் இந்த வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு வாழ் இந்தியருக்கான உதவி மையம் (Pravasi
Bharathiya Sahayata Kendra -PBSK)
புலம்பெயர்
மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்குத் 11 மொழிகளில் (இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, மலையாளம், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, ஒரியா, கன்னடம் மற்றும் வங்காள மொழி) தேவையான தகவல்களை 24x7 மணிநேர உதவி
சேவை அளிக்கிறது.
உலகின்
எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம்:
கட்டண எண்: + 91-11-40503090/45680197/26885021
மின்னஞ்சல் : helpline@mea.gov.in
கட்டணமில்லா
எண்: 1800-11-3090 (இந்தியாவிலிருந்து மட்டும்)
இந்தியத் தொழிலாளர்கள் வள மையம் (Indian
Workers Resource Centre -IWRC)
துபாய், சார்ஜா, ஜெடா, ரியாத் மற்றும் கோலாம்பூரில் செயல்பட்டு வருகிறது. 24x7 மணி நேரக்
கட்டணமில்லா உதவி எண், குறை மனுக்களை பதிவு செய்தல் மற்றும்
கண்காணித்தல், விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும்
ஆலோசனை அமர்வுகளை ஏற்பாடு செய்தல்.
புலம்பெயர்
மக்களுக்கான வள மையம் (Migrants Resource
Centre -MRC)
உடனடி ஆலோசனை
வசதி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் 3-அபைசயவந மற்றும்
துணைத் தூதரகக் குறைகள் கண்காணிப்பு அமைப்பிற்கான வலைத்தளம், வாயிலாகக் குறைகளைப் பதிவு செய்தல், நேரடியாகப் பணியமர்த்தப்பட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல
வேண்டியிருக்கும் தொழிலாளர்கள், யாதொரு புலம்பெயர் மக்களுக்கான வள
மையத்திற்கும் நேரடியாகச் சென்று, இணைய வழியில் குடியேற்ற அனுமதி
கோருவதற்கான உதவியைப் பெறலாம்.
இடம்:
புதுதில்லி, ஹைதராபாத், கொச்சி, சென்னை மற்றும் லக்னோ.
தனது நாட்டிற்கு பணம் அனுப்புதல்:
• இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்தியாவின் அயல்நாட்டு
குடியுரிமை பெற்ற நபர்கள் (Non-Resident External Account –NRE) கணக்குத் துவங்க தகுதியுடையவர்கள் ஆவார்.
• இந்தக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் தொகைகள் இந்திய ரூபாய்களாக
வைக்கப்படும். இவை, சேமிப்புக் கணக்குகளாகவோ, நடப்புக் கணக்குகளாகவோ, நிரந்தர
வைப்பீட்டுத் தொகைகளாகவோ அல்லது தொடர் வைப்புத் தொகைகளாகவோ இருக்கலாம்.
• இந்தக் கணக்குகளுக்கு அந்நியச் செலவாணி மூலம் செலுத்தப்பட்டு,
அவை ரூபாய்களாக மாற்றப்படும், இந்தக் கணக்குகளுக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படமாட்டாது.
• Ordinary
Non-Resident Rupee Accounts, Foreign Currency Non–Resident Accounts (Banks),
Non-Resident Non-Repatriable Rupee Deposit Accounts (NRNR) என்ற வகை வங்கிக் கணக்குகளும் உள்ளன.
• பணம் அனுப்புவதற்கு வெஸ்டர்ன் யூனியன் மற்றும் மணிகிராம் போன்ற பண
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் வங்கிகள் வாயிலாக, பண விடை (Money
Order) காசோலை (Cheque) அல்லது கேட்பு வரைவோலை (Demand Draft) மூலமாக அனுப்பலாம்.
• நீங்கள் வீட்டிற்கு திரும்பும்போது அதிகபட்சம் $ 5000 எடுத்துவரலாம். ஆனால், அவ்வளவு பணம்
ரொக்கமாக எடுத்து வருவது பாதுகாப்பற்றது.
மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை:
• வெளிநாட்டிற்குச் செல்லும் போது எடுத்துச் செல்லப்படும் அனைத்து
ஆவணங்களின் நகல்களும் (கடவுச் சீட்டு, நுழைவிசைவு,
ஒப்பந்த நகல் போன்றவை) வீட்டில் கொடுத்து
வைத்திருக்க வேண்டும்.
• பணிபுரியப் போகும் இடம், தங்கும் இடம்
ஆகியவற்றின் விபரங்கள், தொடர்பு எண்கள், தூதரக விபரங்கள் குறித்து குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட வேண்டும்.
• சென்றடைய வேண்டிய நாட்டை அடைந்தவுடன் இந்திய தூதரகம்/துணைத் தூதரகத்தை தொடர்பு கொண்டு நீங்களாகவே பதிவு செய்து கொள்ள
வேண்டும்.
• தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிற்குச்
செல்லும் இந்திய தொழிலாளர்களுக்கு புறப்படுதலுக்கு முந்தைய புத்தாக்கப்
பயிற்சியினை வழங்குகிறது.
• அந்தநாட்டின் நடத்தைகள், உணவுப்
பழக்கவழக்கம், கலாச்சாரங்கள் ஆகியவற்றை மதிக்க
வேண்டும். எப்போதும் சட்டத்தையும் விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்
• மதம் சார்ந்த சின்னங்கள், போதைப்பொருட்கள்,
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும்
தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம்.
• உங்கள் கடவுச்சீட்டு குறைந்தது 6 மாதங்களாவது செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
• எந்தவகை பொட்டலங்களையும் மற்றவர்களிடமிருந்து பெற்று விடாதீர்கள்.
• வெளிநாட்டில் ஏதேனும் சிக்கல் என்றால் தூதரகத்தை அணுகுவது சிறந்தது.
மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள அணுகவும்:
1. அகதிகள் மறுவாழ்வு மற்றும்
தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம்,
சேப்பாக்கம்,
சென்னை -600005
தொலைபேசி :044-28525648,
28515288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in/nrtchennai@gmail.com
1.
Shri. T.L. S. Bhaskar
Chief
Administrative Officer
India
Centre for Migration
Pravasi
Bharatiya Kendra
Rizal
Marg, Chanakyapuri,
New
Delhi -110021
Tel:
+91-11-24156415
No comments:
Post a Comment