Sunday, 24 June 2018

Pride March

வண்ணங்கள் ஒவ்வொன்றும் அழகானவை...ஒரு சிலருக்கு நீலம், சிலருக்கு கருப்பு, சிலருக்கு வெண்மை என்று சிலருக்கு 2 வண்ணம் சிலருக்கு 3 வண்ணம் சிலருக்கு பல வண்ணங்கள் என்று பிடிக்கும்.அவை அனைத்தும் ஒரே இடத்தில் பார்ப்பது கொள்ளை அழகு. அது போன்ற மக்களிலும் பல வண்ணங்களில் (வகைகளில்~பாலியல் தேர்வின் அடிப்படையில்) இருக்கின்றனர். அவரவர் தேர்வு அவரவர் அழகு. தேர்வுகள் பிறவாக இருந்தாலும் மனிதர்கள் தான் என்று ஒரினமாக திரண்ட பெருமைக்குரிய பேரணி(Pride March) இன்று 10 வது ஆண்டாக எழும்பூரில்(Egmore) நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு பூரிப்படைவது போன்று ஒருவர்க்கொருவர் நட்பு பாராட்டி மகிழ்ந்து களித்தனர்.
வழக்கம் போல் நான் மதிப்புக்குரியவர்களாக பார்க்கும் மக்களின் உரிமைக்காக செயல்படும் முனைவர்.சியாமளா நடராஜ் மற்றும் ராம்கி என்று அழைக்கப்படும் முனைவர். ராமகிருஷ்ணன் அவர்களை அழைத்து சிறப்பளித்தது மேலும் அழகு. 

இந்த முறை மனித உரிமைகளின் மற்ற பரிணாமங்களாக இருக்கும் அம்பேத்கர், பெரியார் உருவங்கள் தாங்கிய பதாகைகள், மொழி உணர்வு... போன்றவைகளையும் காண முடிந்தது...






















சிறப்பு

Tuesday, 5 June 2018

உலக சுற்று சூழல் தினம்

உலக சுற்று சூழல் தினம் என்றதும், உடனே இந்த நாளில் மரம் நட்டால் இந்த நாள் சிறப்பாக அமையும் என்ற எண்ணம் தான் முதலில் வந்து நிற்கிறது. ஆனால், இந்த நாளுக்கென்று இல்லாமல், நம் கண்ணுக்கு முன்பாகவோ, கண்ணுக்கு புலப்படாமலோ, விஷமில்லா விவசாயம் செய்தும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரங்கள் நட்டும், தெரிந்தோ தெரியாமலோ விதையினை பரவசெய்வோர், இயற்கை நீர் நிலைகளை பாதுகாக்க முனைவோர், நெகிழி பயன்பாட்டை குறைத்து கொள்வோர் என்று பல வழிகளிலும் இயற்கையின் அழகினை சிதையாமல் பார்த்துகொள்வோரை நினைத்து பார்ப்பதும் அவர்களை பாராட்டுவதும் தான் இந்நாளினை சிறப்பிக்கும் என்று கருதுகிறேன். நெடுவாசல், தூத்துக்குடி, கூடங்குளம், நியூட்ரினோ போன்று பல வகைகளில் இயற்கையை பாதுகாக்க போராடி வரும், போராட்டத்தில் தன் உயிரை கூட மாய்த்திருக்கும் தோழர்களுக்கு என்னுடைய மரியாதைக்குரிய வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
 எதிர்கால சந்ததி சுவாசத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்கட்டும்.