Saturday, 29 April 2017

பாவேந்தர் பாரதிதாசன்


இன்று பிறந்தநாள் காணும் இவரை பற்றிய சில விடயங்கள் மனதில் வந்து செல்கின்றன.

கனக சுப்புரத்தினம் ஆகிய இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவர் .

திராவிட இயக்கத்தில் இவர் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தன் படைப்புகள் மூலம் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு கொள்கைகளை வெளியிட்டவர் .
தந்தை பெரியாரால் 'புரட்சி கவிஞர்' என்ற பட்டமும் அறிஞர் அண்ணாவிடம் இருந்து 'புரட்சி கவி' என்ற பட்டமும் பெற்றவர்.
இவருடைய 'பிசிராந்தையார்' நாடகத்திற்க்காக 'சாகித்ய அகாதமி' விருது பெற்றவர்.
கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை என்று அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.
'பாண்டியன் பரிசு' 'குடும்ப விளக்கு' 'இருண்ட வீடு' 'அழகின் சிரிப்பு' 'எதிர்பாராத முத்தம்' போன்றவை அவருடைய படைப்புகளில் சில
."புதியதோர் உலகம் செய்வோம்"
"சங்கே முழங்கு" என்று எழுச்சியூட்டியவர்
"தன் பெண்டு தன்பிள்ளை தன சோறு..." என்று குறுகிய வாழ்க்கை வாழ்வதை கண்டித்தவர்.
'தொண்டு செய்து பழுத்த பழம்' என்று ஆரம்பிக்கும் பாடலை பெரியருக்காக இயற்றியவர்
கல்வி பயில அழைப்பு விடுக்கும் ' தலை வாரி பூச்சூட்டி உன்னை பாட சாலைக்கு போ என்று சொன்னால் உன் அன்னை' என்று அழகுற இயற்றியவர்.
அமிழ்து அமிழ்து என்று தொடர்ந்து வேகமாக சொல்லிக்கொண்டே இருந்தால் 'தமிழ்' என்று வார்த்தை வந்து விழும். அதனையும் எளிதாகவும் அழகாகவும் மேலும் தமிழ் உணர்வையும் ஊட்டக்கூடிய பாடல் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' ஆகும்.
இணைந்து செயல் படுதல் குறித்து
'சங்கங்களால் நல்ல சங்கங்களால் மக்கள் சாதித்திட கூடும் பெருங்காரியம்' என்று எழுதியவர்
தமிழக அரசு இவர் பெயரால் வருடந்தோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு 'பாரதிதாசன் விருதினை' வழங்கி கௌரவிக்கிறது.
அவர் பெயரை கொண்ட திருச்சி 'பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்' தான் நான் படித்தேன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்.
நன்றி

No comments:

Post a Comment