நாள்: 12.02.2017
இடம்: நமது உலகம் இயற்கை உழவாண்மை பண்ணை, கடகம்-சங்கமங்கலம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட வாரியாக :
- திரு. முத்து கிருஷ்ணன், காரைக்கால்
- மரு. உமா மகேஸ்வரி, காரைக்கால்
- திரு. கலைமணி, திருவாரூர்
- திரு. மணிமாறன்,திருவாரூர்
- திருமதி. கெஜலெட்சுமி,திருவாரூர்
- திரு. மோகன், திருச்சி
- திரு. செந்தில் முருகன், திருச்சி
- திரு. நடராஜன், நாகப்பட்டினம்
- திரு. கனகசபை, நாகப்பட்டினம்
- திரு. ஞானப்பிரகாசம், நாகப்பட்டினம்
- திருமதி. அனு, சென்னை மற்றும்
- ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட், சென்னை
முன்னுரை:
இயற்கை வளங்களை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் வளப்படுத்தல் என்ற நோக்கோடு தோப்பு என்ற வாட்ஸாப்ப் குழு உருவாக்கப்பட்டது. இதில் இயற்கை வளங்கள் மேம்பாடு குறித்த சிந்தனை அடிப்படையாக கொண்டு ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியில் குழுவில் இணைத்து. இதில் முதன் முயற்சியாக இயற்கை வேளாண்மை முறையினை பார்வையிடவும், விதை பந்து தயாரித்தலை தெரிந்து கொள்ளவும் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கவும் முதல் கூட்டம் நமது உலகம் இயற்கை உழவாண்மை பண்ணை, கடகம்-சங்கமங்கலம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டதில் ஏற்பாடு செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்வுகள்:
பங்கேற்பாளர்கள் மற்றும் திரு. முத்துகிருஷ்ணன் அவர்களின் உறவினர்களுடன் இணைந்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் உருவாக்கப்பட்ட நமது உலகம் இயற்கை உழவாண்மை பண்ணையில் அங்கேயே விளைந்த காய்கறிகள் -கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய் போன்றவற்றை நறுக்கி உதவினர்.
நிகழ்வானது கம்மங்கூழுடன் துவங்கியது. தேநீர், குளம்பிக்கு பதிலாக பாரம்பரிய கம்மங்கூழ் வழங்கப்பட்டது.

விதைப்பந்து தயாரித்தல்:
தோழர் கலைமணி அவர்கள், விதைப்பந்து தயாரிக்கும் முறையினை விளக்கினார். அதற்கென அவர் எடுத்து வந்திருந்த உரமூட்டப்பட்ட மண், செம்மண் மற்றும் விதைகள் (கொடுக்காப்புளி, மகிழம் மற்றும் புங்கன்) ஆகியற்றை பார்வைக்கு வைத்து. விதைப்பந்து செய்யும் முறையினை விளக்கினார். விளக்கத்தின் போது எவ்வகை மண் தேர்வு செய்யப்பட வேண்டும், விதைப்பந்தின் ஆயுட்காலம், விதைப்பந்தினை எங்கு பயன்படுத்துவது. விதைப்பந்தின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பன குறித்து விளக்கினார். அவருடைய செய்முறையினை தொடர்ந்து அனைவரும் விதைப்பந்துகள் தயாரித்தனர். சுமார் 200 விதை பந்துகள் தயாரிக்கப்பட்டது. முதலில் பந்துகளை நிழலில் உலர்த்திய பிறகு வெயிலில் காய வைக்கப்பட்டது.

பேசி ரசித்தவை:
'வேளாண்வ விஞ்ஞானி' நம்மாழ்வார், வன மனிதன் 'ஜாதவ் பெயங்' - (அசாம் மாநிலத்தில் 550 ஹெக்டேரில் ஒரு வனத்தையே உருவாக்கியவர் - எறும்பில் துவங்கிய இவரது சேவை அந்த வனத்தில் இப்போது 5 புலிகள், 3 காண்டா மிருகம் 115 யானைகள் வரவும் மற்றும் பல உயிரினங்கள் தாவரங்கள் தோன்றவும் காரணமானவர்). 'நீர் மனிதன்' ராஜேந்திர சிங் மழை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர், சுபாஷ் பாலேக்கர், அண்ணா ஹசாரே, ஜே.சி. குமரப்பா ஆகியோர் விவசாயத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து பேசப்பட்டது.
நமது குடியிருப்பு பகுதிகளில் ஒரு குழியினை வெட்டி அதில் உணவு கழிவுகளை இட்டு உரமாக்கலாம். தனி வீடுகளில் முடியவில்லை எனில் கூட்டாக இணைந்து செய்யலாம். ஆனால் நெகிழி பைகள் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும். நெகிழி பைகளை தனியாக சேகரித்து சுத்தம் செய்து மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் என்று கலந்தாலோசிக்கப்பட்டது..
இயற்கை வள மேம்பாட்டு பணிகள் செய்வதற்கு ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அதனை குழுவில் பகிர்ந்து கொள்ள வேண்டும். செயல்பாட்டில் ஏதேனும் உதவிகள் தேவைப்படின் மற்ற குழு உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெற்று கொள்ளலாம்.
தோழர் கலைமணி மற்றும் அவருடன் இரண்டு தோழர்கள் சுற்றுசூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் (இது கலைமணி அவர்களின் சொந்த முயற்சியாகும், தோப்பிற்க்கு வருவதற்கு முன்பே அவர் தீட்டிய திட்டமாகும்) மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்கும் தோப்பு குழு மூலம் ஏதேனும் வகையில் ஆதரவினை நல்களாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சியால் ஏற்பட்ட நன்மைகள் போன்றவை அவர்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசப்பட்டது.

கேட்டு மகிழ்ந்தவை:
விதை பந்து தயாரிக்கும் முறை
மீன் அமிலம் தயாரிக்கும் முறை
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை
கன ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை
கொடியின் வேலி கால்கள் சாய்வாக அமைக்கப்பட்டிருப்பதின் செய்முறை விளக்கம்
நீர் அறுவடை செய்ய பயன்படுத்தப்பட்ட யுக்திகள் ...

கண்டு களித்தவை :
மேட்டு பாத்தி முறை
ஊடு பயிர் முறை
மூடாக்கு
நீர் சேகரிப்பு குட்டை மற்றும் கிணறு
நுண்துளை நீர் தெளிப்பான் முறை
பூந்தோட்டம்
வெங்காய, புடலை வகைகள் , உளுந்து, கத்தரி, வாழை, அவரை, , சாகுபடி
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை
கன ஜீவாமிர்தத்தால் இரண்டே நாளில் மேற்பகுதிக்கு வந்து குட்டி ஈன்றுள்ள மண்புழு குட்டிகளுடன்.
ஜீவாமிர்தத்தால் மேற்பகுதிக்கு வந்த மண்புழுக்கள்
கொடி படர அமைக்கப்பட்ட கம்பி வலைகள் ...
உண்டும் பருகியும் ருசித்தவை:
கம்மங்கூழ்
தூயமல்லி அரிசி சாதம் உடன் தோட்டத்தில் விளைந்த பூசணி (கூட்டு), அவரை (கூட்டு),கத்தரி (பொரியல்),கத்தரி சாம்பார், நீர் மோர், ரசம், அவல் பேரீட்சை இனிப்பு கலவை, பானை நீர்,

கொடுத்து மகிழ்ந்தவை:
கலைமணி அவர்கள் எடுத்து வந்த மகிழம் மற்றும் கொடுக்காப்புளி ஆகிய செடிகளை முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தோம்.

செயல்பட வேண்டிய தளங்களாக திட்டமிடப்பட்டவை :
பசுமை விழிப்புணர்வு
மரக்கன்றுகள் நடுதல்
விதை பந்துகள் தயாரித்தல்.
மழை நீர் சேகரிப்பு
இயற்கை விவசாயம்
இயற்கை மருத்துவம்
இயற்கை விளை பொருட்களை நுகர்தல்
பாரம்பரிய விளையாட்டுக்கள், பாடல்கள், கதைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்று கொடுத்தல்.
பாரம்பரிய கலைகளை ஊக்குவித்தல்
தற்சார்பு கிராமங்களை உருவாக்கல்
விவசாயத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
நீர் சேகரிப்பு தளங்கள், ஆறுகள் போன்றவற்றினை இயல்பு நிலைக்கு மாற்றுதல் போன்றவை
பயிற்சியாளர் முத்து கிருஷ்ணன் அவர்களை பற்றி:
ஏழை மாணவர்களை முன்னேற்ற காரைக்காலில் பள்ளியினை .நிர்வகித்தவர். இவரும் காரைக்காலில் பிரபல மகப்பேறு மருத்துவரான இவரது துணைவியாரும் தீர்மானமாக தன மகளை தங்கள் பள்ளியிலேயே வைத்து இப்போது மருத்துவராகவும் மாற்றியிருக்கிறார். இன்னும் ஒரு முக்கியமாக கவனிக்கப்பட அம்சம் என்னவென்றால் வெண்மணி நினைவாக தன் மகளுக்கும் வெண்மணி என்றே பெயர் சூட்டியுள்ளார். மேலும் இவர் பள்ளியில் சென்று பார்த்தோம் என்றால் இவரே மாணவர்களுக்கு நாடகம், கரகம், ஒயிலாட்டம் என்று அனைத்தையும் கற்று கொடுத்து கலை நிகழ்ச்சியில் சிறப்பிக்க வைப்பார். தற்போது விவசாயத்தை மற்றும் முழு மூச்சாக செய்து வருகிறார்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். இவர் தற்போது பராமரித்து வரும் நமது உலகம் இயற்கை உழவாண்மை பண்ணை கூட நம்மாழ்வார் அவர்களால் துவக்கப்பட்டதாகும். நம்மாழ்வார் இறப்பதற்கு முன்பு கூட இந்த இடத்திற்கு வந்திருந்து சென்றிருக்கிறார். அப்போது அவர் பேசுவதற்காக கட்டப்பட்ட விளம்பர தட்டி கூட இன்றும் அப்படியே வைத்திருக்கிறார். இயற்க்கை மற்றும் சுத்தமான தரமான பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார். சுமார் 20 ஏக்கர் நிலத்தில் இணைந்து விவசாயம் செய்து வருகிறார். தந்து நிலத்திற்கு தேவையான தண்ணீரை மழை வரும் போது நிலத்தடியில் சேமிக்கிறார்.
மசானபுஃபுகோகா, நம்மாழ்வார், காந்தி, திருக்குறள் (பெரும்பாலான கேள்விகளுக்கு திருக்குறள் மேற்கோள்களே வருகின்றன !), ஜெ.சி. குமரப்பா என்று எல்லோரை பற்றியும் இஸ்ரவேலின் விவசாய புரட்சி பற்றியும்
பேசுகிறார். அவ்வப்போது மருத்துவமும் வருகிறது. இன்னும் இருக்கிறது இவரை பற்றி பேசி கொண்டிருக்க. சுருங்க சொல்லின் சகல கலா வல்லவர். நாங்கள் கிளம்பும் போது அவர் எங்களை கேட்டுக்கொண்டது. "இந்த பணியில் ஈடுபடுபவர்கள் முதலில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நாங்கள் ஏற்கனவே நம்மாழ்வாரை இழந்து விட்டோம்"

பயிற்சியாளர் கலைமணி அவர்களை பற்றி:
இவர் சுற்று சூழல் ஆர்வலர், இது வரை 15000 மரங்களை நட்டும் தானமாக வழங்கியும் உள்ளார். கடந்த வருடம் ம தி மு க மாணவரணி சார்பில் கல்வி மற்றும் சமூகத்தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான 'உயிரறக் காவலர்' விருது பெற்றுள்ளார். விகடன் நடத்திய மாணவ பத்திரிகையாளர் பயிற்சியும் தன்னுடைய கல்லூரி பருவத்தில் பெற்றுள்ளார்.

பயிற்சியாளர் மோகன் அவர்களை பற்றி:
இவர் தொழிற் கல்வி பயின்றவர். சேர்ந்தவர் இவருடைய அண்ணன் வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கர் அவர்களிடம் ஜீரோ பட்ஜெட் பயிற்சி எடுத்தவர். அண்ணனிடம் விவசாயம் கற்று விராலிமலையில் குறைந்த இடத்தில் அதிக மகசூல் எடுத்தவர்கள். திரு. முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளார்.

வெளிப்பாடுகள்:
உடனடி வெளிப்பாடுகளாக சில நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன, அதாவது சத்துணவில் வீணாகும் முட்டை கழிவுகளை பயன்படுத்தல், மரக்கன்றுகள் பள்ளியில் நடுவதற்கான ஒப்புதல், விதை பந்துகள் தயாரித்தல், கருவேலமரம் அழித்தல், இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் பிற மாவட்டங்களில் கூட்டங்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் ஏற்பாடுகள் போன்றவை நடை பெற்று வருகின்றன. ஆனால் முழு வெளிப்பாடு கிடைத்தவுடன் பதிவிடல் சிறந்தது என்பதால் முடிவுகள் தெரிந்தவுடன் தகவல் அளிக்கப்படும்.

முடிவுரை:
இந்த பயணம் ஒரு அனுபவ பயணமாக இருந்தது. அனைவரும் தங்கள் மனதில் தீர்மானங்களை ஏந்தி சென்றனர். வேளாண்மை தெரியாதவர்கள் கூட எளிதாக செய்து விடலாம் என்ற ஆர்வம் அனைவருக்குள்ளும் ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை கூடும் போது இடைப்பட்ட காலங்களில் என்ன பணிகள் செய்யப்பட்டன என்பதனை பகிர வேண்டும் என்ற தீர்மானத்தோடும், அடுத்த முறை கூடும் போது அமைப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவோடு அனைவரும் திரும்பி சென்றனர்.

நன்றி!
அறிக்கை தயாரிப்பு:
க. இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்
அறிக்கை தயாரிப்பு:
க. இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்