Thursday, 26 January 2017

இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் - ஒரு சரித்திரம்:







1937, இந்தி மொழியை  இந்தி மொழி பேசாத மாநிலங்களுக்கும் சேர்த்து இந்தியா முழுமைக்கும் ஒரே அலுவல் மொழியாக கொண்டு வருவதற்கு அரசு முயற்சி எடுத்தது. சென்னையில் முதன் முதலாக வெற்றி பெற்ற காங்கிரசின் முதல் ஆளுநர் இராஜகோபாலச்சாரி  தமிழகத்தில் முக்கியமாக பாட புத்தகங்களில் இந்தியை திணிப்பதில் தீவிரம் காட்டினார். இதனை எதிர்த்து, நீதி கட்சியும், தந்தை பெரியாரும் முதல் போராட்டத்தை துவக்கினர். அதனால், அப்போதைய காங்கிரசு 1939 இல் பதவி விலக நேர்ந்தது. காங்கிரசு அரசு பதவி விலகியதையடுத்து சென்னை மாகாண ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' இந்தி கல்வியை விலக்கினார். 1950 இந்தியா குடியரசாக ஆன பிறகு அலுவல்மொழியாக நீண்ட விவாதங்களுக்கு பிறகு இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக இருக்கும் என்றும் அதன் பின்னர் இந்தியே அலுவல் மொழியாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 1965 இல் இந்தியை அலுவல் மொழியாக அரசு அறிவித்தது. இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் இந்தி எதிர்ப்பை தீவிரமாக நடத்தியது. இந்த போராட்டம் 2 மாதங்கள் நடைப்பெற்றது. இறுதியில் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணை மொழியாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது மொழி அழிந்து விட கூடாதென்றும் திரண்டனர் இளைஞர்கள். அதன் விளைவு, 1967 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களால் இந்தி, மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழியாக விளங்க திருத்தும் கொண்டு வந்தது.  வலுவாக காலூன்றி இருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க. ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. காங்கிரசால் இன்னும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் தமிழகத்தில் ஆங்காங்கே மக்கள் திரண்டு செயல் பட்டனர். அதனை தொடர்ந்து    அண்ணாவின் இறுதி சடங்கிற்கு  உலக அளவில் வியக்கும் வகையில் ஒன்னரை கோடி நபர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு ஈழ பிரச்சனை, காவிரி பிரச்சனை  என்று பல போராட்டங்கள் நடந்து வந்தாலும் அது அரசியலாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், ஜனவரி 17 அன்று , 'ஏறு தழுவலில்' காளைகளை துள்ள விடுவதற்க்காக காளையர்கள் ஆரம்பித்த போராட்டம், தொடர் மலையில் சிற்றாறுகள் நிரம்பி பெரு வெள்ளம் ஏற்படுவது போல எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளங்களை திரட்டி சென்றன . செல்லுங்கள் வெல்லுங்கள் என்று  வீட்டில் இருப்பவர்களின் வாழ்த்துக்களுடன். 
கைக்குழந்தையை சுமந்த பெண்கள், திருநங்கைகள், வாலிபர்கள், வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அத்தனை தரப்பு மக்களையும் ஒன்றாக பார்க்கும் இடமாக இருந்தது. இப்படி அனைத்து தரப்பு மக்களையும், திரையரங்குகளிலும், கோவில்களிலும் ஏன் திருவிழாக்களிலும் கூட ஒட்டு மொத்தமாக சமீப காலங்களில் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று.  அரசியல் கட்சிகளுக்காகவும், மத கூட்டங்களுக்காகவும், சாதிய கூட்டங்களுக்காகவும், நடிகர் நடிகர்களுக்காகவும் இதுவரை சுவரொட்டிகளும், பதாகைகளை, துண்டு பிரசுரங்களும் பார்த்த நமக்கு, எந்த ஒரு சுய லாபமும் இல்லாமல் கையில் பதாகைகள், உடம்பில் வாசகங்கள், வாயில் முழக்கங்கள் என்று தமிழகத்தின் பல இடங்களில் குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் என்று தமிழகத்தின் பல இடங்களும் குலுங்கியது. ..
அதன் விளைவு:
உலகமே தனது கண்களை தமிழகத்தை நோக்கி சுழற்றியது. உலகெங்கிலும் ஏறு தழுவல் நிகழ்விற்க்காக ஆதரவுகள் பெருகின. புதிதாக பதவியேற்ற அமெரிக்க அதிபர் திரு. டிரம்ப் அவர்களும் தன்னுடைய ஆதரவை தெரிவித்ததோடு அல்லாமல் peta  அமைப்பின் அலுவலகம் எதிராக போராட்டம் நடத்தவும் அனுமதி வழங்கினார்.
NDTV  தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர், இவ்வளவு இளைஞர்கள் மத்தியில் பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து பிரச்சாரம் செய்வதை பார்த்து டெல்லி கற்று கொள்ளவேண்டும் என்று எழுதினார். 
இளைஞர்களின் முனைப்பும், கண்ணியமும், அறப்போராட்ட திறனை கண்டு உலகமே வியந்து நோக்கியது.

இதில்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், முன்னெடுத்தது  என்னவோ ஏறு தழுவல் தான். இதில் இலவச இணைப்பாக இணைந்து சென்று அனைவரையும் ஆட்டி பார்த்தது peta  எதிர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு, அந்நிய பானங்கள் நிராகரிப்பு, விவசாய பாதுகாப்பு போன்றவை. 

மின்சாரம் நிறுத்தப்பட்டது கைபேசியில் ஒளி இரவில் சூரியன் கண்ணாடியில் பட்டு மின்னியது போல் ஒளிர்ந்தது. 
அனைவருடைய கைபேசி சேவைகளை முடக்குவதற்காக, ஹைமெர் வைக்கப்பட்டது. ஆனால் தொழிநுட்பத் திறன் கொண்ட நமது இளைஞர்கள் மூன்றே நிமிடத்தில் ஹைமெரை முடக்கினர். 
பல்வேறு நாட்டுப்புற கலைகளை கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம்,கூட கானதோர் கண்டனர் 

மெரீனாவில் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்ட போலீசார் - தடுப்பதற்கு தேசிய கீதம் பாடிய இளைஞர்கள் 
கடலோரம் விரட்டிட்டியடிக்கப்பட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.
பீட்டாவின் பக்கமிருந்தோர் பல்டியடித்தனர் 
அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய நாணயத்தின் மதிப்பு 10 பைசா உயர்ந்தது. 
மாவட்டங்கள் கடந்து, மாநிலங்கள் கடந்து, நாடுகள் கடந்து சர்வதேச ஆதரவு பெருகியது.
மழையிலும், பனியிலும், வெய்யிலிலும், உப்பு காற்றிலும், அனல் காற்றிலும் தங்களுடைய ஒற்றுமையை இளைஞர்கள் நிரூபித்தனர். 
ரயில் சேவைகள் உள்ளிட்ட பல போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்கள் சேவைகள் நிறுத்தப்பட்டது.

முதன் முதலாக காவலர் சீருடையுடன் களத்தில் குதித்தார் 
கொச்சையாக பேசிய ராதா ராஜன் பகிரங்க மன்னிப்பு கேட்டார் 
தமிழர்களின் வெற்றியை பார்த்து கன்னடர்கள், மராட்டியர்கள் எருமை பந்தயத்திற்கான அவசர சட்டம் வேண்டும் என பேச ஆரம்பித்துவிட்டனர்.
சமூக பணிகள் மரக்கன்று நடுதல் போன்றவை செய்யப்பட ஆரம்பித்தது. 
எல்லாவற்றிக்கும் மேலாக கண்ணியம் காத்தனர் நம் இளைஞர்கள் உலகிற்க்கே முன்மாதிரியாக அனால் அதனை காவலர்கள் இறுதியில் இளைஞர்களை களைக்கும் விதமாக தடியடிகளும், அவர்களே ஆட்டோக்களுக்கு நெருப்பு வைத்து கலவரத்தையும் தூண்டி கொச்சைப்படுத்தினர்.
இறுதியில் அவசர சட்டம் தீட்டப்பட்டு மாணவர்களின் தொடர் போராட்டத்தால் அவசர சட்டம் நிரந்தர  கொண்டு வரப்பட்டது. இப்போது அனைவரும் ஏறு தழுவலுக்கு தயார். 
இளைஞர்கள் படை வென்று விட்டது. இனி ஆட்சிக்கும் தயாரானால்  தன்னிறைவு தமிழ்நாட்டினை எதிர்பார்க்கலாம். 
--


Friday, 13 January 2017

நினைவுப் பொங்கல்


ஏர் பின்னது உலகம்  என்ற வள்ளுவரின்
வார்த்தைக்கேற்ப இதுநாள் வரை அனைவருடைய
வயிற்றுப்பசியை போக்கியது உழவர்களே...
இன்று...
சுட்டெரிக்கும் சூரியனில் வறட்சியையும்...
பொய்த்த மழையால் விரக்தியையும்...
அண்டை மாநிலத்தவரின் பிடிவாதத்தாலும்...
நீதியற்ற நிலையினாலும்...
மத்திய அரசின் சூழ்ச்சியினாலும்
காக்கவேண்டிய தலைவர்களின் பரிகாசத்தாலும்...
வஞ்சிக்கப்பட்டு கஞ்சிக்குடிக்கவும் வழியிலார்
அதற்கென காரணம் அறிந்தும்
தற்கொலை செய்யும் நிலையிலிருக்கும்
விவசாய பெருமக்களுக்கு
உங்களால் தமிழர்களாகிய  நாங்கள் கொண்டாடிய பொங்கல் நினைவலைகளை
உங்களுடைய ஆறுதலுக்காக சமர்ப்பிக்கிறேன்....
மீண்டும் எழட்டும் உழவு..