Sunday, 16 September 2012

பெரியார் செய்தது என்ன?

பெரியார்...
  • ஏன் திராவிட கழகத்தை தோற்றுவித்தார்?
  • ஏன் சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்?
  • ஏன் பகுத்தறிவு வாதம் பேசினார்?
  • ஏன் சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் பற்றி பேசினார்?
  • ஏன் பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், பெண் கல்வி,  பெண்களுக்கு சம உரிமை வழங்கிட வேண்டும் என்றும் கைம்பெண் திருமணம் எதிர்த்தும் பெண் விருப்பத் திருமணம் செய்தும்  வைத்தார் ?
  • ஏன் ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்களில் தனி கவனம் செலுத்தினார்?
  • ஏன் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார்?
  • ஏன் தேவதாசி முறையை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றினார்?
  • ஏன் வைக்கத்தில் தான் பாடுபட்டதற்கு வேறு ஒருவருக்கு பெயர் கிடைத்த போதும் அதனை பெரிதாக நினைக்காமல் போராட்டத்தில் வெற்றி பெற்றார்?
  • ஏன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார்?
  • ஏன் இந்தி திணிப்பை எதிர்த்தார்?
  • ஏன் தமிழ் எழுத்துகளை சீரமைத்தார் ?
  • ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்?
  • ஏன் நீதி கட்சியில் இணைந்தார்?
  • ஏன் திராவிடர் கழகம் தோற்றுவித்தார்? 
  • ஏன் கருப்பு சட்டை அணிய சொன்னார்?
  • ஏன் குல கல்வி திட்டத்தை எதிர்த்தார்?  
  • ஏன் கழக உறுபினர்களை தோழர் என் அழைக்க சொன்னார்?
  •  ஏன் சென்னை ராஜதானி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்க இரண்டாம் தடவையாக ஆளுநர் ஆர்தர் ஹோப் வேண்டுகோள் விடுத்தும் மறுத்தார்?
  •  ஏன் சோதனைக்குழாய் குழந்தை, செல்போன், உணவு மாத்திரைகள், விமானம், கம்பியில்லாத் தந்தி முதலானவற்றைக் குறிப்பிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்?
  • ஏன்  யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது? 
  • இதுபோன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டு கொண்டு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சொன்னதை போல 'அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாமல் ஏன் என்று கேள்வி கேட்டு உம் என்ற பகுத்தறிவால் விடை காண முயல்வதே' இன்று பிறந்த நாள் கொண்ட அந்த ஒப்பிலா தலைவருக்கு நாம் செய்யும் சிறிய மரியாதையாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்!

கடந்த வருடங்களில் நான் தொகுத்த செய்திகளும் உங்கள் பார்வைக்கு:

http://www.scribd.com/doc/66402344/Quotes-About-periyar
http://www.scribd.com/doc/53721029/periyar


நன்றி!

இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

Tuesday, 4 September 2012

நன்றியின் அடையாளம் வ. உ. சி.


V. O. CHIDAMBARAM PILLAI 0663 Indian Post
நாம் நன்கறிந்த வ. உ. சி. என்று அனைவராலும் போற்றப்படும் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த சுதந்திர போராட்ட தியாகி என்பதும் நாட்டிற்காக என்பதும் செக்கிழுத்தார் பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கிலேயரின் இந்தியா, இலங்கை இடையேயான நாவாய்  வணிகத்திற்கு (இந்த வணிகம் ஆங்கிலேருக்கு முக்கியமானதாகவும் நல்ல பலனை கொடுப்பதாகவும் இருந்தது) எதிராக 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற நாவாய்  நிறுவனத்தைப் பதிவு செய்து பல சோதனைகளை கடந்து நாவாய் வணிகத்தை இயக்கினார் என்பதும் நாம் அறிந்ததே!


இதையெல்லாம் கடந்து அவருக்குள் மொழி புலமை (தமிழ், ஆங்கிலம்), எழுத்து, விளையாட்டு, ஒழுக்க நெறி கடைபிடித்தல், வெளிப்படை தன்மை போன்ற பல திறமைகளையும் குணநலன்களையும் ஒருங்கே அமைந்தவர்.
 வ. உ. சி. ஒரு திறமையான வழக்கறிஞர். ஆனால் வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. அதனால் வசதியான நிலையில் இருந்த வ.உ.சி. பிறகு போதுமான வருமானம் இல்லாமல் தவித்தார். திலகர் மாதம் ரூ.50 வ.உ.சி.க்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் என்ற ஆங்கிலேயர் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற வ.உ.சி.க்கு அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டு தனது நன்றி கடனை தெரிவித்தார்.

 இன்று வ.உ.சி.யின் பிறந்த நாள். 


இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்

இன்று ஆசிரியர் தினம்



இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்