Sunday, 26 July 2020

ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் பிறந்த நாள்

அறிஞர் அண்ணாவினை  அவருடைய பேச்சாற்றல் வியந்து மக்கள் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவதுண்டு. அப்படியென்றால் நிஜ பெர்னார்ட் ஷா பேச்சாற்றல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கல்லூரி பருவங்களில் இவருடைய நையாண்டிகள், கருத்துக்கள் பல படித்ததுண்டு. இவருடைய வார்த்தைகள் உற்சாகம் ஊட்டுபவையாக மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கக் கூடியவை.

சேக்ஸ்பியர் நாடகங்கள் சோகம் என்றால் இவருடைய நாடகம் நகைச்சுவை, அதில் அரசியல் கேலியும் இருக்கும், சமூக சிந்தனையும் இருக்கும்.
'நான் மட்டும் சேக்ஸ்பியர் காலத்தில் இருந்தால் அவருக்கு எதிராக நாடகங்கள் போட்டு அவரை ஓட்டாண்டி ஆகியிருப்பேன்' என்று நையாண்டி பேச்சுக்கள் நிறைந்திருக்கும் இவரை பற்றி படிக்கையில்!

கிரிக்கெட்டை குறித்து 'ஒரு வட்டத்திற்குள் 11 முட்டாள்கள், வட்டத்தைச் சுற்றி 11 ஆயிரம் முட்டாள்கள்' என்று உரைத்தவர் இவரே.

இவருடைய நாடகங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் தங்களுடைய வசனங்களில் நேரிடையாக மக்களிடம் கேள்விகள் கேட்கும் பாணியை வைத்திருந்தார். இதில் பெரும்பாலும் சமூக கருத்துக்கள் இடம் பெறுவதால் அவர்களை சிந்திக்கவும் தூண்டும்.

இவருக்கும் வின்சென்ட் சர்ச்சிலுக்கும் இடையே நடைபெறும் வார்த்தை போர்கள் உலகப்புகழ் பெற்றவை.

இவரிடம் பேசும் போது  கவனித்துதான் பேசுவார்கள். ஒருமுறை பெர்னார்ட் ஷா தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து உருளைக்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது உருளைக்கிழங்கு அவித்து சாப்பிடுவது ஒரு நாகரீக கருதப்பட்ட நேரம் அது. அப்போது அவரை பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் தனக்கு ஷா உருளைக்கிழங்கு சாப்பிடுவதை பார்த்து, தனக்கு இது போன்று உருளைக்கிழங்குகளை சாப்பிடுவதெல்லாம் பிடிக்காது. இதெல்லாம் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். ஷா அமைதியாக கேட்டுக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு உருளைக்கிழங்கு தட்டில் இருந்து தவறி தரையில் உருண்டோடியது. ஷாவின் வாசலில் ஒரு கழுதை கட்டப்பட்டிருந்தது. அந்த கழுதை உடனே அந்த உருளைகிழங்கை சாப்பிடுவதுபோல் சென்று, உருளைக்கிழங்கை நுகர்ந்துபார்த்து விட்டு சாப்பிடாமல் விட்டுவிட்டது. உடனே வந்திருந்த நண்பர், ஷாவிடம் 'பார்த்தீர்களா, கழுதை கூட உருளைக்கிழங்கு சாப்பிடமாட்டேன்கிறது ' என்று சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்த ஷா 'ஆமாம், கழுதைகள் உருளைக்கிழங்கு சாப்பிடாதுதான்...' என்றார். அவ்வளவுதான் அடுத்தகணமே அந்த நண்பர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபோன்று பல்வேறு சுவைகள் அவர் வாழ்வில் நிரம்பியிருக்கும்.

'சாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான் , சாதிக்க முடியாதவன் போதிக்கிறான்'.

Most people do not pray; they only beg.

Power does not corrupt men; fools, however, if they get into a position of power, corrupt power.

Some look at things that are, and ask why. I dream of things that never were and ask why not?

Imagination is the beginning of creation. You imagine what you desire, you will what you imagine and at last you create what you will.

போன்ற வாசகங்கள் புகழ் பெற்றவை 

இவர் ஒருவரே இலக்கியத்திற்காக நோபல் பரிசையும் ஆஸ்கார் விருதையும் பெற்றவர்.


# இன்று ஜார்ஜ் பெர்னார்டு ஷாவின் பிறந்த நாள்.