Tuesday, 7 August 2018

கலைஞருக்கு இரங்கல்

நான் பிறந்த கல்லக்குடிக்கு 
பெருமை சேர்த்த பெரியவர் 
என் திருமண நிகழ்விற்க்கு
வாழ்த்து செய்தி அனுப்பி நெகிழ வைத்தவர் - கூடுதலாக 
சட்ட மன்ற உறுப்பினரையும் 
அனுப்பி வைத்தவர்
பள்ளி பருவத்திலும் சரி
கல்லூரி பருவத்திலும் சரி - உன்
பேச்சு கேட்பதென்றால் என்னை
அழையாமல் வரவழைத்தாய்
எந்தையை உன் தீவிர தொண்டனாக
தொண்டாற்ற செய்தாய்...!
பகுத்தறிவு பகலவனின் பாசறையில் மலர்ந்தவரே !
அண்ணாவின் அன்பு தம்பியாய் காய்த்தவரே !
கோடி தொண்டர்களின் தலைவராய் கனிந்தவரே!
தொய்வில்லா கொள்கை கொண்டவரே!
தொலைநோக்கு திட்டங்கள் வகுத்தவரே!
தொன்மை மொழி தமிழுக்கு மதிப்பு சேர்த்தவரே!
பல்திறன் ஆளுமை கொண்டவரே!
நாகரீக நாவண்மை கொண்டவரே
எல்லோருக்கும் எளிமையாய் நின்றவரே!
நீண்ட பொதுவாழ்வு வாழ்ந்தவரே!
உன் பூத உடல் அஸ்தமனம் ஆனாலும்
நீர் புகுத்தி சென்ற எண்ணங்கள் என்றுமே உதய சூரியனாகவே வலுசேர்க்கும் !
ஓய்வெடுங்கள் ஐயா!