Tuesday, 5 December 2017

அம்பேத்கர்- சில குறிப்புக்கள்


பிறப்பு:
மராட்டிய மாநிலத்தில்   தீண்டக்கூடாத குலம்  என்று கூறப்பட்டு வந்த 'மகார்'. மகார் இன மக்கள் நிறையபேர்கள் இருந்ததால் தான் 'மகாராஷ்டிரம் என்ற பெயர் ஏற்பட்டது. இவர்களை கோயில் உற்சவக் காலங்களில் பல்லக்கைத் தூக்கும் கடின பணியை மேற்கொள்வர், ஊர் காவல் பணி, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு தகவல் கொண்டு செல்லுதல், இறந்து போனவர்களை எரித்தல் , இறந்துபோன கால்நடைகளை அப்புறப்படுத்தல், ரோமங்களைக் கொண்டு கயிறு திரிதல், தோல் பதனிடுதல்,தோல் சம்பந்தப்பட்ட பணிகள் போன்றவையும் செய்வர்.மாவீரன் சிவாஜி படையிலும், பீஷ்வா படையிலும் இவர்களுடைய தைரியத்தையும் வீரத்தையும் பார்த்து சேர்த்து கொண்டனர். 'மகார் இனப்படை' என்ற படையே இருந்தது. 
மத்தியப்பிரதேசத்தில் 'மாவோ' என்னுமிடத்தில் 14.4.1891 இல் ராம்ஜி சக்பால் மற்றும் பீமாபாய் என்பவர்களுக்கு 14 வது பிள்ளையாக பிறந்தார்.
இவருடைய இயற் பெயர் 'பீமன்' என்பதாகும். தந்தை தாய் பெயரை வைத்து 'பீமாராவ் ராம்ஜி' . வளர்ந்து பெரியவராக ஆனதும் தான் மிகவும் மதிக்கும் தன்னுடைய ஆசிரியரின் பெயரான 'அம்பேத்கர்  என்பதனையும் இணைத்து 'பீமாராவ் அம்பேத்கர்' ஆனார். 
படிப்பு:
லண்டனில் 'பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்தல்' என்ற ஆராய்ச்சி கட்டுரை எழுதி எம்.எம்ஸி பட்டம் பெற்றார். 
'ரூபாயின் பிரச்சினை' என்ற கட்டுரை (இந்தியாவின் நாணயம் ரூபாய், இங்கிலாந்தின் நாணயம் பவுண்டு. இவ்விதம் இந்திய ரூபாயை இங்கிலாந்து நாணயமாக மாற்றப்படும் போது  ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எழுதியிருந்தார். அப்போது இந்தியா இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்ததால் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கத் தயங்கியது. பின்னனர் இவருடைய பேராசிரியரின் ஆலோசனைப்படி கட்டுரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன) மூலம் இவர் 'டாக்டர் ஆஃப் சயின்ஸ்' என்ற பட்டம் பெற்றார். 1923 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த இந்த ஆராய்ச்சி கட்டுரையை தனது பெற்றோர்களுக்கு சமர்ப்பித்தார். இவர் லண்டனில் பொருளாதார படிப்பை 1920 தொடர்ந்தார்.அங்கேயே சட்ட படிப்பையும் தொடர்ந்தார்.
எம்.ஏ., பி.எச்.டி ., டி .எஸ்.சி.,ஜே.பி.எச்., எல்.எல்.டி., டி .லிட்., பார்-அட்லா போன்ற பெருமைக்குரிய பட்டங்களை பெற்று பலராலும் பாராட்டப்பட்டார். 

நூலகம்: 
அம்பேத்கர் வாசிப்பு பிரியர், அவர் சேகரித்து வைத்திருந்த ஆயிர கணக்கான புத்தகங்கள் அவருக்கு பல வகைகளில் உதவியது. எனவே 'இராஜ கிருகம்' என்ற வீட்டை வடிவமைத்து அதன் மாடியில் நூலகத்தை அமைத்தார். இந்த வீட்டை கட்டுவதற்கு வரைபடத்தை அவரே தயாரித்தார். 
தான் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, தான் படித்த புத்தகத்தையெல்லாம் மூட்டை கட்டி கப்பல் மூலம் முதலில் அனுப்பிவிட்டு மற்றொரு கப்பலில் அவர் புறப்பட்டார்.அந்த அளவிற்கு புத்தகம் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார். (ஆனால்  அப்போது முதல் உலகப்போர் நடைபெற்ற சமயமாதலால் ஜெர்மன் நீர்மூழ்கி கப்பல் தாக்கி அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டது ! நல்லவேளையாக இவர் வேறு கப்பலில் கொழும்பு வழியாக பம்பாய் வந்து சேர்ந்தார்!)
இவர் லண்டனில் பொருளாதார படிப்பை 1920 தொடர்ந்தார்.அங்கேயே சட்ட படிப்பையும் தொடர்ந்தார்.  படித்தபோது கூட கலோரியில் படித்ததை விட நூலகத்தில்தான் அதிகம் படித்தார் எனக் கூறலாம். இவர் கல்லூரிக்கு போகாத நாட்களில் லண்டன் மியூசியத்தில் உள்ள நூலகத்தில் காணலாம்.
ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நூல் நிலையம் வைத்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி  சொல்வார்.

பத்திரிக்கை:
அம்பேத்கருக்கு பம்பாயில்  கோலாப்பூர் இளவரசருடன் நட்பு ஏற்பட்டது. அம்பேத்கரின் முற்போக்கு கருத்துக்கள் அவரை மிகவும் கவர்ந்தது. ஆதலால் ,1918 நவம்பர் மாதம் பம்பாய் அரசாங்க டைசன் ஹாம் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராகப் பதவியேற்றார். மஹாராஜாவின் உதவியை கொண்டு மாதமிருமுறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றை அம்பேத்கர் ஆரம்பித்தார். முதல் பிரதி 31.11.1920 அன்று வெளிவந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். ஆசிரியர் பொறுப்பை வேறொரு அன்பார் ஏற்று கொண்டார். 

மக்கள் கல்விக் கழகம்:
தன இன மக்கள் தன்னை போன்று கல்வியில் சிறந்து விளங்க தாழ்த்தப்பட்டோர் கல்வி கழகத்தை 1928 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். 
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கும் நன்மை தரும் எண்ணத்தில் 'மக்கள் கல்விக் கலகத்தினை' (1946) ஏற்படுத்தினார். இந்த கல்விக் கழகம் தான் 'சித்தார்த்தா கல்லூரி' (20.6.1946) என்ற  ஒரு கல்லூரியை அமைக்கவும் உதவியது. அதனை தொடர்ந்து 'மிலிண்ட் கல்லூரி' 1951 இல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆல் அடிக்கல் நாட்டப்பட்டு அம்பேத்கரால் கட்டி முடிக்கப்பட்டது. மிலிண்ட் என்பது கிரேக்கத்தில் சிறந்து விளங்கிய  மன்னரின் (இவரை மக்கள் 'மினாண்டர்' என்று அழைப்பர்) பெயர். எதையும் காரண காரியதுடன் அறிந்து மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று இந்த மன்னர் பெரிதும் விரும்பினார். இந்த ஒப்பற்ற ஞானியாக(புத்த மதத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் -இவரும் -'நாக சேனர்' என்ற புத்த பிக்குவுக்கும் நடைபெற்ற உரையாடல் -தொகுக்கப்பட்டு-'மிலிண்ட்ட பங்கா' என்ற நூலாக வெளியிடப்பட்டது) விளங்கிய இந்த மன்னரை மக்கள் அனைவரும் அறியும்படி செய்தார்.

புதிய கட்சி:
1935 ஆம்  ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய அரசாங்க சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் மாகாண சுய ஆட்சி 1937 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்த முடிவு செய்தது. புனா  ஒப்பந்தத்தை சரிவர மேல் ஜாதியர்கள் செயல்படுத்தாதால் மனம் வருந்திய அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக்கட்சி ஓரும் வேண்டும் என்று எண்ணினார்.  'சுதந்திர தொழிலாளர் கட்சி' என்ற கட்சியை துவக்கினார். அம்பேத்கர் பம்பாயில் போட்டியிட்டார். 17.7.1937 அன்று நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் பிற கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். அதில் எல்.பி. போபட்கர் தோற்றிருந்தார்.சுதந்திர தொழிலாளர் கட்சி சார்பாக 15 தொகுதிகள் வென்றிருந்தனர். அம்பேத்கரும் ஜம்னாதாஸ் மேத்தாவும் எதிர்க்கட்சியில் முக்கிய தலைவர்களாக செயல்பட்டனர். 
தாழ்த்தப்பட்ட மக்களை 'ஹரிஜன் என்று அழைக்கக்கூடாது என்ற கருத்தையும், மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வந்தார். தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் இருந்தார். அரசியலை பொறுத்தவரையில் அனைவரும் நண்பராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று கட்சி ஆரம்பிப்பதைக் கைவிட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒற்றுமை உணர்வை உண்டு பண்ண விரும்பினார். 20.1.1942 ,இல் நடைபெற்ற கூட்டத்தில் இதைத்தான் வலியுறுத்தினார். அங்கே 'கற்பி, ஒன்றுசேர், போராடு' என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். அதுவே தாரக மந்திரமாகவும் ஆனது.  

தேசிய கொடி : 
9.12.1946 ஆம் ஆண்டு கூடிய அரசியல்   நிர்ணய சபை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராகத் .தேர்ந்தெடுத்தது. சுதந்திரம் கிடைத்தபின் செய்ய வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றி  ஆராயப்பட்டது. அப்போது தேசிய கொடி  அமைப்பு பற்றியும் ஆராயப்பட வேண்டுமென்று  முடிவு செய்யப்பட்டு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் அம்பேத்கர் முதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் தேசிய கொடி சிவப்பு , வெள்ளை , பச்சை -மூவர்ண கொடியாக இருக்க வேண்டும் என்ற தன் கருத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு தெரிவித்து அவரும் ஒத்துக்கொண்டார். கொடியின் மத்தியில் உள்ள வெள்ளை நிறத்தில் ராட்டை  இருக்க வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். அம்பேத்கர் அதற்கு இணங்கவில்லை. கொடியில் ராட்டை சின்னம் பொருத்தமுடையது ஆகாது என்று தன் கருத்தை தயக்கமின்றி தெரிவித்தார். மத்தியில் சிறப்பு அம்சங்கள் நிரம்பிய அசோக சக்கரம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அண்ணல் குறிப்பிடவும் அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது. மேலும் சாரநாத் தூணில் உள்ள நான்கு சிங்கமுகங்கள் இந்திய அரசின் சின்னமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அரசியல் அமைப்புச் சட்டம்:
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திறமையினை கருத்தில் கொண்டு 21.8.1947 அன்று முடிவு செய்யப்பட்டு அண்ணலின் தலைமையில் அரசியலமைப்புச் சட்டம் தயாரிக்க பண்டித நேரு மட்டுமின்றி இதர தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அண்ணலின் தலைமையில் எழுவர் குழு இந்த பணியினை செய்தது. மொத்தம் 315 விதிகளும் 8 உட்பிரிவுகளும் இருந்தன. உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தாலும் இறுதி முடிவினை அம்பேத்கரே எடுப்பார். அவர் ஏற்று கொள்ளாத விதிகள் விவாதத்திற்க்கு வந்தால் அவற்றை காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் முடிவுக்கு விடப்படும். அம்பேத்கர் அவர்களின் மாதிரி அரசியலமைப்பின் அடிப்படையில் அவரால் சட்டத்தை வரைவது கடினமாக இருந்தது. சில வளைவு நெளிவுகளை  உண்டு பண்ணவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சிலவற்றை அவர் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தாழ்த்தப்பட்டோருக்காக தனி சலுகைகளை பெற முடியவில்லை. அதாவது 25 வருடங்களுக்கு மேலான  ஐடா ஒதுக்கீட்டை அவரால் பெற முடியவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கு என்று தனித்து அமைக்கப்பட்ட குழுவில் அவர்களுக்கு என்று உரிய சலுகையும், இட ஒதுக்கீடும் 10 ஆண்டுகளுக்கு மட்டும்தான் முடிவு செய்யப்பட்டது. சபை கொண்டுவந்த ஜனநாயக முறைகளுக்கு அண்ணல் கட்டுப்பட வேண்டியதாக இருந்தது. இவ்விதம் 10 ஆண்டுகள் வரை அளிக்கப்பட்ட சலுகைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வளர்ச்சியைத் தராததால் வேறு வழியின்றி 3 முறை அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இவ்விதம் நிறுத்தப்பட்டதால் மேலும் 30 ஆண்டுகளுக்கு அவர்கள் அதிகச் சலுகை பெற முடிந்தது. இதற்கு அண்ணல் மூல காரணமாக இருந்தார். 4.11.1948 நகல் திட்டமாக அரசியல் நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவர் சமர்ப்பித்த போது கூறிய விளக்கவுரையும் நகல் அமைப்பு திட்டமும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போற்றி புகழவும் பட்டன. 
அவர் யாத்த அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி அவரிடம் வேண்டுமென்ற பற்பல கேள்விகள் கேட்கப்பட்டாலும் அவர் பொறுமையுடன் பதிலளித்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது. சொல்லாற்றல் மிக்கவராகவும் இருந்தார். அவருடைய முயற்சிகளில் குறை காண வேண்டும் என்று இருந்தவர்கள் நானி தலை குனியும் வண்ணம் அவருடைய பதில் இருந்தது. 
இவர் அளித்த சட்ட வடிவால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே நல்ல பல நன்மைகள் அனைவருக்குமே கிடைத்தது. தீண்டாமை கூடாது, அனைவரும் சமம் என்ற கருது மக்கள் மத்தியில் நிலவ ஆரம்பித்தது. கொத்தடிமை, பெண்ணடிமை போன்றவை ஒழிய அம்பேத்கரின் சட்டங்கள் வழிவகுத்தன. சமூக நலனுக்கு குறுக்கே நிற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வந்ததில் அம்பேத்கருக்கு பெரும் பங்கு உண்டு. 
அவர் தன்னுடைய கருத்தில் ' அரசியல் சம்பந்தவற்றை நிர்ணயிப்பது மட்டும் அரசியலமைப்பின் நோக்கம் அல்லவென்றும், சமூக-பொருளாதார அமைப்புகளையும் அது தெளிவுபடுத்தி அவற்றிலுள்ள சீர்கேடுகளையும் செழித்து சமூகத்தில் சமத்துவத்தை மலர வைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். மேலும், எந்த அரசியல் அமைப்பும் நிரந்தரமாக இருக்க முடியாது. நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது கால் தேச வர்த்தமானதிற்குத் தக்கபடி அவ்வப்போது உருவாக வேண்டுமே ஒழிய அவற்றுக்கு முன்கூட்டியே நிரந்தர விதிகளை ஏற்படுத்துவது மக்கள் நலம் நாடும் ஜனநாயகமாகாது என்றார். 
48 வது விதியில் 14 வயது வரை கட்டயாக் கல்வி அளிக்க வேண்டும் என்று கொண்டு வந்ததனால் எவ்வளவோ குழந்தைகள் கல்வி பெற முடிந்தது. 
இந்த அரசியல் அமைப்புச் சட்டம் உலகிலேயே எழுத்து வடிவில் அமைக்கப்பட்ட அரசியல் சட்டம் இதுதான் என்ற பெருமை பெற்றது. 
'அரசியல் அமைப்பை உருவாக்க அம்பேத்கரை விடவும் யாரும் அதிகம் உழைத்து கிடையாது' என்று பண்டித நேரு புகழாரம் சூட்டினார். 
26.11.1949 அன்று அரசியல் சாசன சபையில் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பெருமையினை போற்றி பேசியவர்கள் இவரை 'நவீன மனு' என்றும் 'அரசியல் சட்ட விற்பன்னர்' என்றும் புகழ்ந்தனர். 
இவருடைய இந்த பணியினை பாராட்டி இவர் பயின்ற அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகமும் இவருக்கு 'டாக்டர்' பட்டத்தை வழங்கி கௌரவித்தது.


முதல் நூல் :
அம்பேத்கரின் மேற்படிப்பிற்கு பரோடா மன்னர் பெரிதும் உதவினார். அமெரிக்க சென்ற அவர் கேளிக்கைகளில் ஈடுபடவில்லை ' எப்போதும் படித்து கொண்டே இருக்கிறீர்களே வேறு எதிலுமே உங்களுக்கு நாட்டமில்லையா?' என்று கேட்ட நண்பருக்கு 'நான் பண உதவி பெற்று படித்து வருகிறேன். சொந்த நாட்டை விட்டு இவ்வளவு தூரம் வருவது படிக்கவே, எனவே கவனமுடன் படித்து வருகிறேன்' என்று கூறினார். அரசியல், விஞ்ஞானம், ஒழுக்க தத்துவம், மனித தத்துவம், சமூக இயல் மற்றும் பொருளாதாரம் என்று கடினமான பாடங்களை எடுத்து படித்தார்.எம்.ஏ. பட்டம் பெற ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க வேண்டுமாதலால் 'பண்டை கால இந்திய வர்த்தகம்' என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்து, எம்.ஏ.பட்டம் பெற்றார்.  
கருத்தரங்கில் ' இந்தியாவில் ஜாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி படித்தார். பிறகு அந்த ஆராய்ச்சி கட்டுரையை புத்தகமாக வெளியிட்டார். இதுவே அம்பேத்கருடைய முதல் நூலாகும். 

கொலம்பிய பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு 'இந்தியாவில் தேசியபங்கு வீதம்' எனும் பொருளாதார ஆராய்ச்சி கட்டுரை எழுதி சமர்ப்பித்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சி கட்டுரை பின்னாளில் 'இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் மாகாணப் பொருளாதார வளர்ச்சி' என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. இந்த புத்தகத்தை தனது படிப்பிற்கு உதவி செய்த பரோடா மன்னர் 'சபாஜி ராவ் கெய்க் வாட்' அவர்களுக்கு காணிக்கையாகித் தன நன்றி கடனை தெரிவித்தார். 

புனே உடன்படிக்கை

தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும் செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார் .
பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.
பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”
நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாடு:
13.10.1935 இல் நாசிக் மாவட்டம், ஏலா என்னுமிடத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கு சுமார் 10000 நபர்கள் கலந்து கொண்டனர். 'தாழ்த்தப்பட்ட மக்கள் பல வழிகளில் துன்புற்று வருகின்றனர். பொருளாதாரம், கல்வி, அரசியல், போன்ற துறைகளில் மக்கள் முன்னேறி விடாமல் , உயர் ஜாதி மக்கள் முட்க்குடுகட்டை போடுகின்றனர். தாழ்த்தபட்ட மக்கள்  இந்து மதத்திலிருந்து விலகுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
'நாம் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து கொண்டு இதுவரை நாம் பட்ட துன்பங்களும்,வேதனைகளும், போதும். .. ஒரு சீக்கியருக்கும், ஒரு முஸ்லீமுக்கும் கிடைக்கும் மரியாதை இந்து மதத்தில் இருக்கும் நமக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் நான் வேதனையோடு கூறுவேன். நான் இறக்கும்போது ஒரு இந்துவாக இறக்க போவதில்லை என்பது நிச்சயம்' என்று மனம் வருந்தி பேசினார். இதனை தொடர்ந்து 'கௌபா' எனும் முஸ்லீம் தலைவர், 'பாட்ஸி ' எனும் பிஷப்,புத்த மத செயலாளர், அமிர்தசரசிலிருந்து ஒரு சீக்கிய தலைவரும் தங்கள் மதத்திற்கு மாறுமாரு  கேட்டு கொண்டனர். ஆனால்  பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும், 'இந்தியா இந்துக்கள் நாடக இருக்க வேண்டுமானால் அதற்காக முழு மூச்சுடன் பாடுபட வேண்டியவர்கள் உயர்ந்த ஜாதி இந்துக்களே' என்று தன கருத்தை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.
நாசிக்கிலிருந்து வந்த இந்து மதப் பிரதிநிதி குழுவிடம்,' தாம் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்கிறேன் என்றும் அதற்குள், உயர் ஜாதி இந்துக்கள், சொல்லளவில் இல்லாமல் செயல்முறையில் காட்டினால் தாம் மறு பரிசீலனை செய்வதாக கூறினார். 

மதம் :
எந்த ஒரு மதம் மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் தருகிறதோ, அந்த மதம்தான் புது வாழ்வை தரும். அதுதான் உண்மையான சுதந்திரத்தை தருவதாகும். எனவே, அந்த மதத்தை பின்பற்றி சகோதரத்துவத்தையும்,சமநீதியையும் பெற்றும் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும்  வாழ வேண்டும் என்று கூறினார். மேற்கொண்ட நல்ல தகுதிகள் கொண்ட புத்த மதமேயாகும் என்றார். 
இந்து மதத்திலும் சிற்சில மாற்றங்களை செய்து அதை திருத்தி அமைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். 
புத்த பெருமானின் கொள்கைகள் அவருடைய மனதில் ஆழப்பதிந்து அவருக்கு புத்துணர்வை ஊட்டியதால் புத்த  மதத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. 1935 யிலேயே மதம் மாறும் எண்ணம் கொண்ட  அம்பேத்கர் 1956 இல் புத்தமதத்தை தழுவினார். இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள  தீக்சாபூமியில்  அதிகாரபூர்வமாக விழா எடுத்து மகஸ்தவீர் சந்திரமணி என்ற புத்த பிட்சுவின் ஆசியுடன் புத்த பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் புத்த சமயத்திற்கு மாறினார்கள்.
1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது

அம்பேத்கரின் சிறப்பம்சங்கள்:
  • பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் அர்ச்சகர்கள் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. மாறாக தகுதி படைத்தவர்கள், முக்கியமாக நல்ல ஒழுக்க சீலர்களைத்தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களை அரசு ஊழியகர்களாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவராகச் செயல் படுவர் என்று எடுத்துரைத்தார். 
  • அம்பேத்கர் விவசாயத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். நிலங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட வேண்டும் என்றார். அவ்வாறு நிலத்தை உரிமையாளிடம் இருந்து பெரும் போது உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறினார். 
  • பொதுவாக, அரசியல் அதிகாரம் தான் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம், ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகச் செயல்படுவதோடு ஒரே கட்சியாகவும் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றார். உழைப்பாளர் நலனுக்காகவும் அவர் பாடுபட்டார். 
  • காந்தியோடு கருத்து வேற்றுமை இருந்தாலும் அவரோடு இணைந்து சுதந்திரத்திற்க்காக பாடுபட்டார்.
  • லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் மிகவும் உறுதியுடன் பேசினார்.'இந்தியா விரும்பும் வண்ணம் அரசியலமைப்பைத் தரவேண்டும்; அதற்கு மாறாக அளித்தால் அது செயலற்றதாக இருக்கும். நீங்கள் அளிக்க போகும் அரசியலமைப்பு எங்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப இருந்தால்தான் உங்கள் எண்ணமும் ஈடேறும் என்றார். லண்டன் வட்ட மேசை மாநாட்டில் அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டமாக உருவெடுத்தது. 
  • அண்ணலால் ஜாதியினை அவர் எண்ணிய வண்ணம் ஒழிக்க இயலவில்லை. ஆனால், அதன் மூலம் விளையும் தீண்டாமையை ஒழிக்க முடிந்தது. 
  • ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தனி நபர் நூலகத்தை அமைத்த பெருமை அவரையே சாரும். 
  • கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி  தோற்றுவிக்கப்பட்டது. 
  • 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • நம் நாட்டிலுள்ள பல்வேறு மொழி-இன மக்களை இணைக்கும் ஒரு பாலமாக உள்ள ஆங்கில மொழி கல்வியை புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். 
  • பண்டித நேரு மந்திரி சபையில் அவர் அமைச்சராக இடம் பெற்ற போது 'பகவத் கீதை'யை வைத்து சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்து விட்டார். "புத்தர் ஒழுக்க நெறி" யை வைத்துதான் உறுதிமொழி எடுத்தார். 
  • அறிவியலுக்கு பொருந்தாத-மூட நம்பிக்கையை அடிப்படியாகக் கொண்ட இலக்கியங்கள் அனைத்தையும் வெறுத்தார். 1972 இல் மகர் என்னுமிடத்தில் மனு தர்மத்தை தீ வைத்து பொசுக்கினார்.  
அம்பேத்கரின் மரணம்:

புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.
பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டதுஇதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர் 
மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அம்பேத்கரின் வார்த்தைகள்:


"எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள்பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல்எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது"

'சுய முயற்சியில் கற்பதனால், சுய மரியாதைப் பெறுவதனால், சுய அறிவை வளர்ப்பதனால், சுய எழுச்சியை அடைந்தே தீருவோம்'

"கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்"
"ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்கள், சிங்கங்களை அல்ல. நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்"

"If I find the constitution being misused, I shall be the first to burn it"

"Personally do not understand why religion should be given this vast, expansive jurisdiction, so as to cover the whole of life and to prevent the legislature from encroaching upon that field. After all, what are we having this liberty for? we are having this liberty in order to reform our social system, which is so full of inequities, discriminations and other things, which conflict with our fundamental rights"

" If you believe in living a respectable life, you believe in self-help  which is the best help"

"The relationship between husband and wife should be one of closest friends"

"I measure the progress of a community by the degree of progress which women have achieved"

"Men are mortal. So are ideas. An idea needs propagation as much as a plant needs watering. Otherwise both will wither and die"

"Law and order are the medicine of the body politic and when the body politic gets sick, medicine will be administered"

அம்பேத்கரை பற்றி தந்தை பெரியாரும் நேருவும்:
"டாக்டர் அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர், பகுத்தறிவு வாதி, ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, மனதில் தோன்றும் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துக் கூறுபவர், இப்பெருந் தலைவரைப் போல யாரையும் காண முடியாது" என்று தந்தை பெரியார் புகழ்ந்தார். 
"உயர்ந்த குணங்களின் உறைவிடம், கல்வி, கேள்விகளில், மிகச் சிறந்தவர், தன் மனதிற்கு சரியென பட்டவைகளை நடத்தி வைப்பதில் உறுதியானவர், இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி, ஈடு இணையற்ற பெருமைக்குரியவர்" என்று பண்டித நேரு அண்ணலை புகழந்து கூறினார். 


நன்றி :
1. அண்ணல் அம்பேத்கர், பட்டத்தி மைந்தன், ராமையா பதிப்பகம், 2009.
2. இணையம் 

                                                                     -இ .ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் 

Tuesday, 14 November 2017

Happy Children's Day

தான் அன்பு செய்யப்பட்டிருத்தலை உணர்தலே குழந்தையின் முதல் தேவையும் மகிழ்ச்சியும்....
அதிலிருந்தே ஆரம்பிக்கிறது வளர்ச்சி!
அன்பினை அள்ளி வழங்குவோம் நம் குழந்தைகளுக்கு...

விளையாட்டு பருவத்திலே 

என்னுடைய சிறு வயது பிராயத்திலே நான் கண்ட, விளையாண்ட பல விளையாட்டுகள், இப்போது பார்க்க முடிவதில்லை இன்றைய குழந்தைகளை  அதிகம் தெருக்களில் விளையாடுவதை பார்ப்பது அரிதான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில்! மேலும் விளையாட்டுகளும் அழிந்து கொண்டு வருகின்றனவோ என்ற எண்ணமும் என்னுள் எழுகிறது. ஆதலால் முடிந்தவரை விளையாடிய, கேள்விப்பட்ட, படித்த விளையாட்டுகளை இங்கே ஆவணப்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையில். நான் எழுதுகின்ற கட்டுரைகள் சம்பந்தமான கூடுதல் தகவல்கள் அல்லது புகைப்படங்கள் இருந்தால் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் பழைய விளையாட்டுகளை ஆவணப்படுத்த முக்கிய காரணம்:

  1. விளையாட்டுகள் வாழும் இடம், வாழும் அமைப்பு முறை, கலாச்சாரம், கிடைக்கும் பொருட்கள், மறுசுழற்சி, சுற்றுசூழல் மேம்பாடு போன்றவற்றோடு பின்னிப்பிணைந்து இருந்தது. 
  2. விளையாட்டுகள் குழந்தைகளின் கற்பனை திறனை மேம்படுதுகிறது (பட்டம் அல்லது காத்தாடி அவர்களே சுயமாக செய்வர்)
  3. விளையாட்டுகள் சுயமாக கற்றுக்கொள்ள உதவுகிறது.
இன்னும் இருக்கின்றன நிறைய விடயங்கள் .... இப்போதைக்கு குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சில புகைப்படங்கள் மட்டும்... பழையதை நினைவு படுத்த... நன்றி 




-K.I.AROON JOSHVA RUSEWELT











Friday, 15 September 2017

சதிபதி விரோதம் மிகவே - சிறுகதை 


சேகர், ஒரு தனியார் நிறுவனத்தில, எழுத்தரா இருக்கான். வீட்டில எலி வெளியில புலின்னு சொல்லுவாங்கள்ல? இவன் வீட்டிலேயும் எலி, வெளியிலேயும் எலி. இப்படி இருக்கும் போது ஒரு நாள் சேகர் அலுவலகத்தில டென்ஷனா உட்கார்ந்திருந்தான்.
“ஏன் சேகரு டென்ஷனாகவே இருக்கிறாய்?” வசந்த் கேட்டார். வசந்த்…? சேகர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே அசிஸ்டென்ட் மேனேஜராகப் பணிபுரிந்து வருபவர். இவர் தான் அடிக்கடி சேகரை வம்பளப்பது, அவருக்கு உதவிகள் செய்வது மற்றும் அட்வைஸ் செய்வது என்று இருப்பபவர்.
“இன்னைக்கு வீட்டு வாடகை அனுப்பச் சொன்னா, நான் காலைலேர்ந்து மறந்துட்டேன். இப்ப பேங்கும் மூடியிருக்கும், ஆன் லைன்ல அனுப்பிடலாம்னு பார்த்தா நெட்டும் கனெக்ட் ஆக மாட்டேங்குது, என்ன பண்றதுன்னே தெரியல”
“அப்ப, வேலை அவசரத்துல மறந்துட்டேன்னு சொல்லலாம்ல”
“சொன்னா, நம்ப மாட்டா, என்ன ஆபிஸ்ல அந்த வீணா போன சுகுமாரிக்கிட்ட அரட்டை அடிச்சிகிட்டு இருந்திருப்பீங்க, கேட்டா பிஸின்னு சொல்றதுனு சொல்லுவா!”
“சுகுமாரிய உன் வீட்டுக்காரம்மாவுக்கு எப்படியா தெரியும்?”
“எங்கேயிருந்து போன் வந்தாலும், ரிசப்சனுக்கு போயிட்டுதானே இங்க வரும், ரிசப்ஷன்ல இருக்கிற பொண்ணு அக்கறைல ஒன்னு ரெண்டு கேள்வி கேட்குது, என் ஆளு எனக்கு கால் பண்ணாலே பொதுவா என்னை திட்டுறதுக்கு இருக்கும் இல்லாட்டி என்னை வேலை செய்ய விடாம எரிச்சலூட்டி விட்டு தான் வைக்கும். இந்த நோக்கத்துல கால் வரப்ப நடுவுல குறுக்குக் கேள்வி கேட்டா எப்படி இருக்கும், இதிலே என் வாயி வேற சும்மா இருக்காது, வீட்டுல சில சமயம், நம்ம ஆபிசுல நடக்குற சில விஷயங்கள் சொல்வேன். அதுல சுகுமாரி என் மனைவி பத்தியும் என் மகன் பத்தியும் விசாரிக்குவான்னு சொல்லுவேன். ஆதனால என் மனைவிக்கு அவ பேரக் கேட்டாலே உள்ளுக்குள்ள சும்மா அதிரும். அந்த எரிச்சல என் மேலே அப்படியே கொஞ்சம் கூட மாத்திரை மாறாம இறக்குவா, மேக்ஸிமம் ஹெவி டோஸா அனுபவிப்பேன்”
“ஏன்யா, ஆபிசு விஷயத்தையெல்ல்hம் வீட்டில போயி சொல்ற?”
“நான் என்ன சார் பண்றது, ஒரு நாளைக்கு எப்படியும் 10 மணி நேரமாவது ஆபிசுலதான் இருக்கேன். என் மனைவியும் நானும் பேசணும்னா நான் தான் பர்ஸ்ட் பேசனும்னு எதிர் பார்க்கிறா. இப்படி இருக்கிறப்ப நான் ஆபிசுல இருக்கிற எல்லா விசயமும் தான் ஞாபகத்தில வருது. அதுல அவளுக்கு என்ன பிடிக்காதோ அதையும் மறந்தாப்புல சொல்லிடுவேன்”
“ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்க, உன் பொண்டாட்டிக்கு எப்போதும் உண்மையா இரு. அதாவது பொய் சொல்லாதே. அப்படி பொய் சொன்னாய் என்றால் என்ன பொய் சொன்னன்னு நீ ஞாபகம் வைச்சிரு. ஏன்னா, பெண்களுக்கு இந்த விஷயத்துல ஞாயபகசக்தி ரொம்பவே அதிகம். சரி, அதிருக்கட்டும் உன் மனைவிக்குப் பிடிக்காத விஷயமும் சொல்லிடுவேன்னு சொன்னல்ல? அதென்ன பிடிக்காத விஷயம்?”
“லேடிஸ்கிட்ட பேசக்கூடாது, போண்டா, வடை, சமோசா, பஜ்ஜினு கண்டதையும் சாப்பிடக்கூடாது, வீட்டிலேர்ந்து கட்டி கொடுக்குற மதிய உணவைத் தான் சாப்பிடணும், தேவையில்லாம பார்டிக்கெல்லாம் போகக் கூடாது…”
“போதும்... போதும்.. நீ சொல்றதப் பார்த்தா, குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி வீட்டிலேர்ந்து ஆபிஸ், ஆபிஸ்லேர்ந்து வீடுன்னு தான் இருக்கும் போல, ஆபிஸ்ல கூட அப்படியே உட்கார்ந்த இடத்திலேயேத்தான் உட்கார்ந்திருக்கனும் போல… யோவ்.. நினைச்சுப் பார்த்தாலே சிரிப்பு வருதுய்யா.. கொஞ்சம் கற்பனைப் பண்ணிப் பாரேன்… உனக்குக் கடிவாளம் போட்டா எப்படி இருக்கும்”
“உங்களுக்கு சிரிப்பாத் தான் இருக்கும் சார், உங்க வீட்டில எப்படி?”
“என் வீட்டில என் பேச்சுக்கு எதிர் பேச்சுக் கிடையாதுய்யா?”
“சும்மா சொல்லாதீங்க சார், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.”
“இப்ப ஒரு சாம்பிள் பார்க்கறீயா?” என்று தன்னுடைய மொபைலை எடுத்து கால் செய்தார் வசந்த்.
“ஏய், கல்யாணி, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? காலைல போட்டபாரு ஒரு காஃபி… அப்படியே பினாயிலு மாதிரி இருந்துச்சு! இப்ப நினைச்சாலும் குமட்டிட்டு வருது. இனிமே, பில்டர் காஃபிதான் போடணும் புரிஞ்சுதா? இன்ஸ்ட்டன்ட் வேணாம். ஓ.கே…. ஷே.. சாரி… ம்… குட்… தப்பு பண்ணா அப்படித்தான் வருத்தப்படணும். தட் இஸ் மை கேர்ள்… என்ன… சாயங்காலம் வரும்போது பூ வாங்கிட்டு வரணுமா? சரி சரி போன வையி, ஆபிசுல இருக்கேன் அப்புறம் பேசறேன்.”
“எப்படிய்யா?”
“சூப்பர் சார், திட்டவும் செஞ்சிங்க, அதே சமயம் கூலும் பண்றீங்க, சூப்பர் சார் நீங்க”
“ரொம்ப சிம்பிள்யா உன் பொண்டாட்டிக்கு நீ என்ன செஞ்சா சந்தோஷமா இருக்கும்”
“நான் காலை அமுக்கி விட்டா சந்தோஷமா இருக்கும்”
“அப்ப, அதைத் தொடர்ந்து பண்ணுயா, காயிதே மில்லத் அவங்க அம்மாவுக்கு விடிய விடிய காலை அமுக்குன மாதிரி கூட அமுக்கலாம். என்ன அவர் பாசம் நிமித்தமா பண்றார். நீ பயம் நிமித்தமா பண்ற…”
“பயம்லாம் கிடையாது.. ஏதோ நமக்காக கஷ்டப்படுறாளே அவளுக்கு பண்ணா என்னன்னு தோணுச்சு, அதான்”
“சரி, அதை விடு, நான் உன்கிட்ட கேட்டது… உன்னோட ரொட்டின் வொர்க்க கேட்கல… உன் மனைவிக்கு நீ ஏதாவது ஸ்பெஷலா செஞ்சு அவளுக்கு அதுப் பிடிக்கணும். அதத்தான் நான் சொல்ல வரேன்”|
“ஓ… அப்படிக் கேட்கறீங்களா…அவளுக்கு கடலை மிட்டாய் பிடிக்கும்…வேணா வாங்கிக் கொடுக்கட்டா…”
“என்ன கடலை மிட்டாயா… என்னய்யா… இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி பேசிக்கிட்டு இருக்க? சரி பரவாயில்லை… வித்தியாசமா நீ என்ன பண்ணு… உன் பொண்டாட்டிக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுக்கறத விட செஞ்சிக் கொடுத்துடேன்.”
“ஒரு தடவை அதையும் செஞ்சேன் சார்.. என்ன ஆச்சு தெரியுமா? வெல்லப்பாகு அடுப்புல வைச்சிட்டு நிலக்கடலையில் தோலை நீக்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று தீஞ்ச வாடை வந்ததென்று பார்த்தால். வெல்லப்பாகு அடிப்பிடித்து பாத்திரமும் எரிந்து கொண்டிருந்தது. அந்தப் பாத்திரமும் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. அன்றிலிருந்து கடலை மிட்டாய் கடையில் வாங்கிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன்”
“ஏன்யா, நான் வாங்கிட்டு போற மாதிரி மல்லிகைப் பூ வாங்கிட்டு போலாமே?”
“அவளுக்கு மல்லிகைப் பூ வாசமே ஆகாது சார்”
“அப்ப எதுதான் சந்தோஷத்தைத் தரும்”
“அவளோட அம்மா, அப்பாவப் பார்த்தா சந்தோஷமா இருக்கும்”
“அப்ப அவங்கள வர வைக்க வேண்டியதுதானே”
“அவங்க வந்தாங்கன்னா அவங்களுக்கும் சேர்த்து நான் சேவகம் பண்ண வேண்டியிருக்கும், என் மாமனார், என் பொண்டாட்டி ஒவ்வொரு நாளும் கேட்கிறத. மொத்தமா ஒரே நாள்ல கேட்பாரு மனுஷன். வீட்டில வேற வெத்தலை போட்டு புளிச்சு புளிச்சுன்னு துப்புவாரு. எல்லாத்துக்கும் மேல அவங்க ரெண்டு பேரும் வந்தாங்கன்னா, நான் ஹால்ல படுத்துக்கணும் அவங்க என் பொண்டாட்டியோட பெட்ரூம்ல படுத்துக்குவாங்க”
“அய்யய்யோ அப்படின்னா இந்த பிளான் வேண்டாம். வேற என்ன தான்யா பண்றது?”
“என் பொண்டாட்டி ஒரு புரியாத புதிர் சார், நான் எதை எப்படி பண்ணாலும் அதில் குற்றம் நடந்தது என்ன என்பதை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பாள். சாதாரண ஒரு விஷயத்தைக் கூட ஒரு மோசமான மாதிரியாக சொல்லுவாள். அவள் பேசும் போது அழுத்தம் தாங்காமல் இரத்தம் கொதித்து, சுண்டி கைகள் உப்பிக் கொள்வது போலவும் ஒவ்வொரு முறையும் என்னுடைய இதயம் வீங்கிக் கொண்டே நுரையீரலை அடைத்து நுரையீரல் நெஞ்சாங்கூட்டை தாண்டி வந்;து உடலை தாண்டியும் வெடித்துவிடுவது போல் தோன்றும். அவ்வளவு பாரமாக இருக்கும். அவள சந்தோஷப் படுத்தணும்னு நெனச்சா நான் அவமானம்தான் படணும். நான் அமைதியா இருந்தாலே போதும்”
“அப்படி இல்லையா உனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன். ஒன்றும் இல்லை ஒரு 500 ரூபாய்க்கு ஒரு நல்ல புடவை எடுத்துக் கொடு. எனக்கென்னவோ உனக்கு புடவை எடுத்துக் கொடுத்து நாளாயிற்று. இன்று வாங்கிக் கொடுக்கணும் போல தோனிற்று அதனால் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பார். எந்தப் பெண்ணிற்கும் புடவை கட்டாயம் பிடிக்கும்”
“சரிங்க சார், அவளுக்கு இதனால சந்தோஷம் கிடைக்குமான்னு தெரியலை. ஆனால், நீங்க சொல்றீங்க என்பதற்காக நாளைக்கே நான் டிரை பண்றேன்.”
“யோவ், நாளைக்கு வேணாம்யா உன் ராசிக்கு நாளைக்கு சந்திராஷ்டமம்”
“நீங்க வேற சார், எனக்கென்னவோ எனக்கு மட்டும் தினமும் சந்திராஷ்டமம் இருக்கற மாதிரி தான் ஒரு ஃபீலிங்;. ஒவ்வொரு நாளும் அவ்வளவு கொடுமையா நகருது. அன்னைக்கு எனக்கு புரோமஷன் ஆயிடுச்சுன்னு மகிழ்ச்சி செய்தி சொல்லப் போறப்ப, சந்தோஷத்துல என் பொண்டாட்டி கையை தட்டி விட்டுட்டேன். அவள் கையில இருந்த டம்ளர்லேருந்து கொஞ்சம் தண்ணீர் சிந்தியிருச்சி. என் புரமோஷன் விஷயம் போயி தண்ணி விவகாரம் பெரிசாயிடுச்சி அப்புறம் என் பொண்டாட்டிக்குத் தெரியாம தண்ணியடிச்சிட்டு வந்து படுத்துட்டேன்.”
“தண்ணியடிச்சிட்டுன்னா, லிக்கரா?”
“ம்க்கும்… லிக்கருக்கு நான் வீட்டை விட்டு வெளியே போனாத்தானே முடியும், எங்க வீட்டில ஒரு அடி பம்பு இருக்கு, என் பொண்டாட்டி மேல கோபம் வந்தா, அந்த அடி பம்பத்தான் ஆத்திரம் தீர அடிப்பேன். தண்ணிக்கு தண் கிடைக்கும் என் ஆத்திரமும் தீரும், எப்படி சார், கோபத்திலேயும் நான் புரொடக்டிவா யோசிக்கிறேன் பார்த்தீங்களா? என் பொண்டாட்டிக்கு இது தான் என்கிட்ட பிடிச்ச விஷயமே!” புன்னகையுடன் கூறினான் சேகர்.
“கொடுமைடா சாமி” தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார் வசந்த்.
….
அன்று சேகர் முகம் வாட்டமாக இருந்ததைக் கவனித்த வசந்த் சேகரை அழைத்தார்.
“என்ன சேகர், நம்மளோட திட்டப்படி நேற்று சேலை வாங்கிக் கொடுத்திட்டியா?”
“சேலைலாம் வாங்கிட்டுத்தான் போனேன் சார், ஆனால், சேலை வாங்கும்போதுதான் எனக்கு ‘பளிச்’னு ஒரு யோசனை தோன்றியது. அதன் பிரகாரம் செய்தேன். அதுதான் எனக்கு சொதப்பலாயிடுச்சு”
“ஏன் என்னாச்சு?”
“என் பொண்டாட்டிக்கு இரட்டிப்பு சந்தோஷம் தரலாம்னு, என் மாமனார், மாமியாரை போன் பண்ணி வரச் சொன்னேன். அவங்களும் வந்துட்டாங்க, அவங்க கையால என் பொண்டாட்டிக்கு சேலையைக் கொடுக்கச் சொல்லலாம்னு அவங்ககிட்ட சேலையை நீட்டினேன். அவங்க ‘ஓ, மாப்பி;ள்ளை திடீர்னு போன் பண்ணி வரச் சொல்லவும் என்னமோ ஏதோவோன்னு நினைச்சிட்டேன். எனக்கு சேலை வாங்கித்தரணும்னு உங்களுக்கு இவ்வளவு ஆசையா, எவ்வளவு மார்டனா வாங்கிட்டு வந்திருக்கீங்க, சூப்பர் மாப்பிள்ளை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இத நான் ஸ்பெஷல் புடவையாக வைச்சிக்கிறேன்னு’ அவங்க எடுத்துக்கிட்டாங்க”
“அய்யய்யோ, அப்புறம்?”
“அப்புறம் என்ன, என் மாமனாரும் என்னை ஏக்கத்தோட பாத்தாரு, அப்புறம் அவரையும் கடைக்கு அழைச்சிட்டு போயி வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தேன்.”
“உன் பொண்டாட்டிகிட்ட இதன் பிண்ணனி என்னவென்று சொன்னியா இல்லையா?”
“சொன்னேன், அவள் எதுவும் பேசவில்லை அமைதியாக சென்றுவிட்டாள். ஆனால், அவள் பார்வையில் ‘இதக்கூட உறுப்படியா செய்ய தெரியாத மக்கு’ என்று சொல்வது போலத்தான் இருந்தது.”
“இப்பப் புரியுதுயா, நீ ஏன் வீட்டில திட்டு வாங்குறன்னு, பிரச்சனை அங்க இல்லையா, உன்கிட்டதான் இருக்கு, உன் பொண்டாட்டி உன்னை திருத்த முயற்சி பண்றா, ஆனா உன்னால முடியுமான்னு தெரியலை! என்னையெல்லாம் ஒரு மாடலா எடுத்துக்கிட்டு செயல்படுத்தப் பாருடா, நீ ஒரு சிங்கமா இருக்கணும் அதாவது, ஆண் சிங்கம், அதிகமா வேட்டையாடாது, பெண் சிங்கம் தான் எல்லோருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்யும், அந்த நிலையை நீ உருவாக்கனும், நீ எப்பொழுதுமே விரைப்பாக இருக்கனும்யா, ஆனா, ஒரு தட்டு தட்டினா உடைஞ்சி போயிடக்கூடாது, அப்படி ஒரு விரைப்பான ஒரு மனுஷனா மாறனும்”
“இது எப்படி சாத்தியம்?”
“ஏதாவது உன் பொண்டாட்டி வேலை சொன்னான்னா காது கேட்காத மாதிரி இரு… ஆனால் அதையே எப்போதும் பின்பற்றாதே…அப்பப்ப பண்ணு…! காலை அமுக்கி விடுற நேரத்தைக் குறை… அல்லது காலை அமுக்காதே, கேட்டால் உடம்பு சரியில்லை என்று சொல்லு…கடைக்கு போக சொன்னால் எனக்கு ஆபிஸ் வேலை இருக்குன்னு சொல்லு… உன் பொண்டாட்டி சத்தம் போட்டா… நீ அவளை முறைத்துப் பார்… எதிர்த்துப் பேசு… சத்தமா பேசு… முடிஞ்சா ரெண்டு அடியப் போடு…”
“சார், நீங்க பேசுறதப் பார்த்தா சந்திரமுகி படத்துல கங்கா சந்திரமுகியா மாறுறத எக்ஸ்பிளைன் பண்ற மாதிரி இருக்கு”
“இதெல்லாம் சாத்தியமா?”
“சாத்தியமே, எல்லாம் சாத்தியமே”
“ஆனால், எனக்கு அவளைப் பாhத்தாலே எல்லாம் மாறிடுமே சார், நான் என்ன பண்றது சார்?”
“என்னைப் பார்த்துக் கத்துக்கோ, வா, சாப்பிட்டுகிட்டே பேசுவோம், என் மனைவிகிட்டே எப்படி பேசறேன்னு பாரு?”
இருவரும் டைனிங் ஹால் சென்றனர். அங்கே சில ஸ்டாப் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
“ஏய் கல்யாணி, என்ன கருமாந்தரத்தைடி கட்டிக் கொடுத்திருக்க?”
சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர், வசந்த் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.
“என்னவோ, நீ, சிக்கன் வெரைட்டில எக்ஸ்பர்ட்டுனு சொன்ன, பெப்பர் சிக்கன்ல பெப்பர் கம்மியா இருக்கு?.. என்ன பெப்பர் விலை அதிகமா…? உங்கப்பன் வீட்டு காசா போகுது…? நான் சம்பாதிக்கிறேன். எனக்கு செலவு ;செய்யப்போற இதில என்ன மிச்சம் வேண்டிக் கிடக்கு? மைசூர் போண்டாவுல மைசூர் இருக்க வேணாம்… ஆனால், பெப்பர் சிக்கன்ல பெப்பர் இருக்கனும்ல, இது கூடவா தெரியாது?, நீ என்ன சின்னப் பிள்ளையா? எனக்கு சாப்பிடுற மூடே போச்சு… இனிமே எனக்கு லஞ்ச் கட்டுறதா இருந்தா என்கிட்ட காட்டிட்டு தான் வைக்கனும் புரியுதா? வை ஃபோன…”
“எப்படிய்யா?”
“என்ன சார், கொஞ்சம் பெப்பர் குறைஞ்சதுக்கா இந்த வாங்கு வாங்குறீங்க. பாவம் சார் மேடம்”
“இப்ப நான் கோபப்படலைன்னா, எனக்குன்னு கவனமா செய்ய மாட்டா, அவ இஷ்டத்துக்குப் பண்ணுவா? அப்புறம் நாம எப்படி நமக்கு புடிச்ச மாதிரி சாப்பிடறது? சில விஷயத்துல நாம பாவம் பார்க்கக்கூடாது. இதுதான் என் சக்ஸசுக்குக் காரணம்” இருவரும் பவர் நேப் எடுக்கச் சென்றனர்.
…..
அன்று வசந்த் வந்திருக்கும் கிளையன்டுகளிடம் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். டீ சாப்பிடுவதற்காக வசந்தைக் கூப்பிடலாம் என்று நினைத்த சேகர் அவர் பிசியாக இருப்பதை உணர்ந்து தனியாக அலுவலகத்திற்கு வெளியே இருக்கும் டீ கடைக்கு டீ குடிக்கச் சென்றான். அப்போது, ரிசப்சனுக்கு வந்த அந்த லேடியின் முகத்தைக் கவனித்தான். எங்கேயோ பார்த்த முகம். இப்போது நன்கு உற்று கவனித்தான். ஆம் அவர்களே தான். முடிவு செய்தவனாய் கேட்டான்.
 “மேடம், நீங்க வசந்த் சாரோட ஓய்ஃப் தானே?”
“ஆமா” வியப்புடன் நோக்கினாள் வசந்தின் மனைவி திவ்யா.
“எப்படி இருக்கீங்க மேடம், உங்க போட்டோவ ஒரு தடைவ சார் காமிச்சிருக்கார். உங்கள மாதிரி பொறுமையான ஒரு ஆளை நான் பார்த்ததேயில்லை மேடம், இந்த மனுஷன் உங்கள இந்தப் பாடு படுத்தறார். ஆனா, நீங்க, எவ்வளவு பக்குவமா, எல்லாத்தையும் கையாள்றீங்க, நீங்க உண்மையிலே வெரி கிரேட் மேடம்”
“நீங்க புகழ்ற அளவுக்கு நான் ஒண்ணும் பண்ணலையே…!” வியப்புடனும் விஷயம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் திவ்யா கேட்டாள்.
“இல்லைங்க மேடம், என் மனைவியையும் ஒரு முறை உங்ககிட்ட அறிமுகப்படுத்தறேன் மேடம், குடும்பத்தை எப்படி நிர்வாகிக்கிறதுங்கற அவளுக்கும் சொல்லிக் கொடுங்க”
“வாட் யூ மீன் மிஸ்டர்….?”
“ சேகர் மேடம்.. என் பேரு.. ஆனா.. எனக்கு இன்னொரு பேரு இல்லை… ஆனா, சாரு உங்களுக்கு இன்னொரு பேரு இருக்குன்னு சொல்லியிருக்காரு…” வெட்கப்பட்டு நெளிந்தான் சேகர்.
“வாட்…? என்ன பேர்; சொன்னாரு”?
“கல்யாணி…”
“கல்யாணி..!!!” திவ்யாவின் முகம் இறுகியது.
“ம்ம்… கல்யாணி, அந்த பேரு சொல்லிக் கூப்பிட்டாத்தான் உங்களுக்குப் பிடிக்குமாமே…தப்பா நினைச்சிக்காதீங்க மேடம்… கல்யாணிங்கற பேரு சொல்லி கூப்பிட்டா நீங்க எப்படி வெட்கப்படுவீங்கன்னு ஒரு தடவை வர்ணிச்சாரு பாருங்க… அத நான் சொல்லக்கூடாது மேடம்…”
“பரவாயில்லை சொல்லுங்க…” உள்ளே கோபம் கொந்தளித்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் திவ்யா,
“ஐஸ்கிரீம் அடில பத்த வைச்சா, அது எப்படி உருகுமோ, அந்த மாதிரி உருகுவீங்கன்னு, ஒரு தடவை வர்ணிச்சார்… இந்த மாதிரி ஒருத்தர் வர்ணிக்கனும்னா அதுக்கு உண்மையான காதல் இருந்தால் மட்டும் தான் முடியும் மேடம். ஹி இஸ் சச் எ ஜெம் ஆப் பெர்சன் மேடம், இந்த மாதிரி ஒரு கணவன் அமையணும்னா கொடுத்து வைக்கணும் மேடம். ஆனா, அவருக்கு வர்ற கோபம் கொஞ்சம் அதிகம்தான்! அன்னைக்கூட நீங்க ஆசையா சிக்கன் பிரியாணி செஞ்சு சிக்கன் பெப்பர் ஃபிரை செஞ்சு கொடுத்து அனுப்பியிருந்தப்பக் கூட  அவர் உங்ககிட்ட பெப்பர் கொஞ்சம் கம்மியா இருக்குன்னு என்னா வாங்கு வாங்கினார்? அன்னைக்கு டைனிங் ஹாலே ஆடிப் போயி பார்த்தது. இந்த மனுஷனுக்கு இவ்வளவு கோபம் வருதே வீட்டிலே எப்படி சமாளிக்கிறாங்கன்னு ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருந்தாங்க.”
“ என்ன சிக்கன் பிரியாணியா… வித் சிக்கன் பெப்பர் ஃபிரை? நான் செஞ்சி கொடுத்ததா சொன்னாரா…?”
“அவரு சொல்லியிருக்காரு மேடம்… உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்னு… அதுக்காக உங்களுக்குப்பிடிச்ச டப்பர் வேர்ல அவருக்கு நீங்க போட்டு கொடுத்ததை அவரு சொல்ல மறக்கலை.. ஆனால்… நீங்க தான் என்னவோ புதுசா கேட்கிற மாதிரி கேட்கறீங்க மேடம்…”
‘என் கிச்சன்ல நான் வெஜ் சமைக்கிற அளவுக்கு போயிடுச்சா’ மனதிற்குள் எரிமலையாய் வெடித்தாள் திவ்யா.
“சரி கல்யாணிங்கற என் பெட் நேம்ல வேற என்னவெல்லாம் சொல்லியிருக்கார்?”
“உங்களோட ஒவ்வொரு அசைவையும் அழகா வர்ணிப்பாருங்க மேடம், வீட்டில வாஷிங் மெஷின் இருந்தாலும் தான் கையாளேயே சாருக்கு நீங்கத் துணி துவைச்சுக் கொடுக்கணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை, வீட்டை சுத்தமா வைச்சிக்கிறது முக்கியமா பாத்ரூம் டாய்டெல்லாம் வெளி ஆளக் கூப்பிடாம நீங்களே செய்யறது…அவருக்குப் பிடிச்ச மாதிரி விதவிதமா சாப்பிடற அயிட்டங்கள்… காய் வகைகள்… மட்டனு, சிக்கனு, மீனு, நண்டுன்னு விதவிதமான கறி வகைகள்…சார் சாப்பிட்டுவிட்டு கிளம்புன பிறகு நீங்க சாப்பிடுறது…அவரு தூங்கி எழுந்திருக்கும் போது உங்கள் முகத்தில் முழித்தால் தான் அவருக்கு நான் நன்றாக இருக்கும் என்பதால், அவருக்கு முன் எழுந்து, குளித்து, பெட் காஃபியோடு அவரை எழுப்புவது… இன்னும் எவ்வளவோ சொல்லலாம் மேடம்… ஆனா நேரம் போதாது மேடம… எனக்கும் இருக்காளே.. காலைல அவ எனக்கு முன்னாடி எழுந்தா என்னை தூங்க விட மாட்டா மேடம். அவ முகத்தில முழிக்கும் போது என்னவோ கிங்காங் என்னை குளோசப்ல பார்க்கற மாதிரியே இருக்கும்… அதனாலேயே நான் குப்புறப்படுத்துக்குவேன். அந்த பொஷிசன்லேயே எழுந்திருப்பேன். இருந்தாலும் என்னை விட மாட்டா. என்னை உடனே காலைக் கடன்களை முடிக்க சொல்வா… காலைக் கடன்னா, நான் பல்லு விலக்குறது, பாத்ரூம் போறது அப்படின்னு நினைக்காதீங்க…. வீட்டுக்குச் செய்ய வேண்டிய காலைக் கடன்கள் அதாவது பாத்திரம் விலக்குறது, துணி துவைக்கிறது, அவளுக்கு டீ போட்டுத் தரது, புள்ளைய குளிக்க வைக்கிறது, காலைலக்கும் மதியத்திற்கும் டிபன் தயார் செய்றது இதன் என் காலைக் கடன் மேடம்… கொடுமையா இருக்கும் மேடம்…”
“ஏன் உங்க வீட்டில எங்கேயாவது வேலைக்குப் போறாங்களா?”
“சாப்பிடறது.. தூங்குறது… டிவி பார்க்கறது…சினாக்ஸ் சாப்பிடறது…அவங்க சொந்தக் காரங்கக்கிட்ட போன்ல பேசிக்கிட்டே இருக்கிறதுனு…அப்புறம் என்னை மானிடர் பண்ண ஒரு கால்னு ரொம்ப பிசியா இருப்பா மேடம்”
“அப்ப உங்க வீட்ல வேலைக்கு ஏதும் டிரை பண்ணலையா?”
“வேலைக்கெல்லாம் போனா மேடம், ஆனால், அவ என்கிட்ட நடந்துகிற மாதிரியே எல்லோர்கிட்டேயும் நடந்துக்குவா, தனக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை மரியாதை இல்லாமல் பேசுவது. எதுவும் பேச வேண்டிய விஷயங்கள் இருந்தால் அவளோட இமிடியேட் பாஸ்கிட்ட பேசமாட்டா நேரடியா டாப் மேனேஜ்மெண்ட்கிட்ட தான் பேசுவேன்னு அடம் பிடிப்பா… இப்படி இருந்தா எந்த கம்பெனிதான் இவளை நிரந்தரமா வைச்சுக்கும்… அதான் ஒரு கம்பெனியில ஒரு மாசத்துக்கு மேல தங்கமாட்டா…” வருத்தத்துடன் கூறினான் சேகர்.
“ஓ… ஐ ஆம் வெரி சாரிங்க… தேவையில்லாம உங்க கதைய கேட்டு கஷ்டப்படுத்திட்டேன், ஆமா… என்ன இன்னும் சாரக் காணோம்…”
“அதெல்லாம் பரவாயில்லை மேடம், அன்னைக்கு நீங்க கொடுத்து அனுப்பிச்ச பால் பாயசம் சூப்பர் மேடம், என் வாழ்க்கையில அப்படி ஒரு பால் பாயசம் நான் சாப்பிட்டதேயில்லை மேடம்”
“பால் பாயசம்…!!!”
“ஆமா மேடம், பால் பாயசம், பருப்பு பாயசம், முறுக்கு, அதிரசம், ரவா உருண்டைனு நீங்க செஞ்சி கொடுத்த பதார்த்தங்கள் எல்லாமே சூப்பர் மேடம், நானே இதை செஞ்ச கைக்கு தங்க வளையல் தான் போடணும்னு சொல்வேன்”
“அப்படி போடறதா இருந்தா, பத்து ரூபாய் நோட்டை சில்லரை மாத்திக் கொடு போது;ம்னு” சார் கூட சொல்வார் நானும் கொடுத்திருக்கேன் நீங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டீங்கன்னு சிலாகித்து சொல்வார்”
“என்ன சில்லரை காசா…?
“என்ன மேடம், எல்லாத்தையும் முதல்லேர்ந்து கேட்கறீங்க… இப்படியே விட்டா உங்களுக்குப் பிடிக்கும்னு உங்க கையால சாருக்கு மருதாணி போட்டு அனுப்பிச்சீங்களே? அதுவும் தெரியாத மாதிரி கேட்பீங்களா? சாரு எவ்வளவு பேருகிட்ட காமிச்சி சந்தோஷப்பட்டார் தெரியுமா, கரெக்டா காதலர் தினமும் அதுவுமா அவர் கையில மத்தியில ஹார்டின் வரைந்து போட்டிருந்தீங்களே மேடம்… மறந்துடுச்சா?... அப்புறம் அன்னைக்கு அப்படித்தான்…..”
“போதும் சேகர்… போதும்…” காதைப் பொத்திக் கொண்டு கத்தினாள் திவ்யா.
“நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நான் நினைக்கல, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் ரெண்டு வருஷமா எங்க ஆபிஸ் பிராஜக்ட்டுக்காக ஸ்வீடன் போயிருந்தேன். இன்னைக்கு சாயங்காலம் திரும்புறதா எங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லியிருந்தேன். அப்படிச் சொன்னா அவருக்கு பெரிய சர்ப்பிரைசா இருக்கும் நினைச்சேன். கடைசியில எனக்குப் பெரிய சர்ப்பிரைஸ் கிடைச்சது.”
“அப்ப கல்யாணிங்கறது”
“நான் கிளம்புறதுக்கு ஒரு வாரத்திற்கு முன் தான் என் வீட்டுப் பகுதியில் கீரை விற்க வந்தவள். அவளுடைய கதையை கேட்ட போது ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்தக் கதையைக் கேட்ட என் கணவர், வேண்டுமானால் அவளை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையை சொன்னார். நான் ஸ்வீடன் போன பிறகு இவருக்கு சமைத்துப் போட உதவியாக இருக்கட்டும் என்று நான் தான் அவளை வேலைக்குச் சேர்த்தேன். கீரைவிற்க வந்தவள்.. வேலைக்காரியாக ஆனாள்… இப்போது வீட்டுக்காரியாக ஆக முயற்சிக்கிறாளா? இன்னைக்கு ஒரு கை பார்க்கிறேன்.
“அய்யய்யோ அப்படின்னா நீங்கதான் மேடம் உண்மையிலே அப்பாவி, தன் வீட்டில இன்னொருத்தி குடும்பம் நடத்துறது கூட தெரியாம இருந்திருக்கீங்களே…மேடம், ஒரு நிமிஷம், நீங்க ஸ்வீடன்ல இருந்தேன்னு தானே சொன்னீங்க..?”
“அப்பப்ப ஒரு கால் ஸ்வீடன்லேர்ந்து வரும் மேடம், இவரு கால் அட்டெண்ட் பண்ணி முடிச்சிட்டு, ராட்சசி, குண்டோதரி, கொடுமைக்காரி…ன்னெல்லாம் சார் திட்டுவார் மேடம்… நான் கேட்டா, அது ஸ்வீடன் கிளைண்ட்டுன்னு சொல்வார்… நானும் ஆபிசுல கேட்டுப் பார்த்துட்டேன் ஸ்வீடன்ல எங்களக்கு பிசினஸ் வேலையே கிடையாது… ஒரு வேளை சார், ஏதாவது கதையடிப்பார்னு நினைச்சேன்.. கடைசியில நீங்கதானா அது…பாவம் மேடம் நீங்க… “
“ஆமாம், அந்த ராட்சசி நான் தான் சேகர்” கண்கலங்கினாள் திவ்யா
“சாரி மேடம், நான் தேவையில்லாம உங்ககிட்ட உளறிட்டேன்… அதோ சாரே வர்றாரு பாருங்க மேடம், என்னோட ஹம்பிள் ரிக்வொஸ்ட் பிளீஸ் எதுவா இருந்தாலும் வீட்டோட இருக்கட்டும். இங்க சாருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு மேடம்…”
அதற்குள் அங்கு வந்த வசந்த், “ஹாய் ஸ்வீட்டி, வாட் எ சர்ப்ரைஸ், நீ ஈவினிங் வருவாய்னு உனக்காக ஸ்பெஷல் ஏற்பாடுகள் பண்ணியிருக்கேம்மா… திடீர்னு வந்து நிற்கிற…”
“ஸ்பெஷல்ன்னா சிக்கன் பிரியாணியும் சிக்கன் பெப்பர் ப்ரையுமா…”
“வாட்.. நீ தான் சுத்த சைவமாச்சே, நம்ம வீட்டிலே ஒரு பாத்திரத்தில கூட முட்டை கூட படாது அப்படி இருக்கிறப்போ எப்படி சிக்கன்?”
“சும்மா நடிக்காத… கல்யாணி கதையெல்லாம் கேட்டாச்சு, உன்னையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு என் பேரன்ட்ஸ எதிர்த்து போராடி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்…”
“வாட் யூ மீன்…”
“வில் யு பிளீஸ் சட் அப்… ராஸ்கல்…ஸ்வீடன்ல இருந்தாலும் நித்தமும் உன்னையத் தான்டா நினைச்சிக்கிட்டு இருந்தேன். எனக்கு எத்தனையோ புரபோசல்ஸ் கூட வந்தது. உன் அன்ப மதிச்சித்தான் உன்னையே நினைச்சி வாழ்ந்துகிட்டு இருந்தேன். ஆனா, இவ்வளவு பொறுக்கியா இருப்பன்னு நினைக்கில… அதுவும் ஒரு கீரைவிக்கிறவளோட… ச்சை…மனுச பதரே…”
சேகருக்கு ஒன்றும் புரியவில்லை… அங்கு நிற்பதா இல்லை கிளம்புவதா என்று புரியவில்லை… வசந்த் சேகரை முறைத்துப் பார்த்ததை உணர்ந்த சேகர் நைசாக கிளம்ப எத்தனித்தான்.
“நான் கிளம்புறேன் மேடம்….சா…சார்…” நா தழு தழுக்கக் கூறினான் சேகர்.
“ரொம்ப நன்றிங்க சேகர்… நீங்க மட்டும் என்கிட்ட சொல்லலைன்னா நான் இந்தாளு பேச்ச முழுசா நம்பியிருப்பேன்” இரு கைகளையும் கூப்பி நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்க கூறினாள்.
“திவ்யா….” ஆறுதலாக தொடுவதற்கு சென்ற வசந்தின் கையைத் தட்டிவிட்டாள் திவ்யா. இதற்குள் சத்தம் கேட்டு அனைத்துப் பணியாளர்களும் எழுந்து வந்து வேடிக்கைப் பார்த்தனர்.
“என்னடி ரொம்ப பிகு பண்றே.. ஊர்ல இல்லாததா நான் பண்றேன்.. நான் ஆம்பள டி…” வசந்த் பேசி முடிப்பதற்குள் ‘பொளேர்’ என்ற அறை விழுந்தது.
“பரதேசி நாயே… செய்யறதையும் செஞ்சிட்டு.. திமிராவாப் பேசற… வீட்டிற்கு வந்த காலை வெட்டிடுவேன்…” ஆவேசமாக சீறிவிட்டு கிளம்பினாள் திவ்யா..
ஆண்ங்கற கெத்தைக் காட்ட நினைத்த வசந்த் அறை விழும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனாலும், வீட்டிற்கு போக வேண்டுமே… கல்யாணியை காக்க வேண்டுமே… “திவ்யா… திவ்யா…நில்லுமா…” திவ்யாவின் பின்னாடியே ஓடினான் வசந்த்.
“நம்மையெல்லாம் ஓட ஓட விரட்டுவான் இப்ப எப்படி ஓடுறான் பாரு… ஒழுங்கா இருந்ததாத்தான் என்ன?” என்று சேகரை நோக்கி பேசினார் கேசியர் குமரன்.
“ஆமா சார், நான் கூட அவர் சொன்னதையெல்லாம் கேட்டு அவர் மனைவி மேல பயங்கரமா மரியாதை வச்சிருந்தேன். கடைசியில கீரைக்;காரியப் பத்தித்தான் இவ்வளவு பெருமையா சொல்லியிருக்கான். பாருங்க”
“ஆமாமாம்…” ஆமோதித்தார் குமரன்.
“உங்க வீட்ல மேடம் இருக்காங்களா, இல்லை ஊருக்குப் போயிருக்காங்களா சார்…?
“ஐயா சாமி…. உன்கிட்டய்யா… ஏற்கனவே நான் வசந்துக்கு நடந்ததப் பார்த்தேனே… அடுத்து எனக்கு குறி வைக்கிறியா…? நல்லா இருக்குற குடும்பத்துல குண்டை போட்டுறாதப்பா.. ஆளை விடு…” வேகவேகமாக தன் இருக்கைக்குச் சென்றார் குமரன்.
சேகர் ‘பரவாயில்லை என் பொண்டாட்டி ராட்சசி மாதிரி குதிச்சாலும், என்னை வெளிய யார்கிட்டேயும் விட்டும் கொடுக்க மாட்டா… என்னை விட்டும் போக மாட்டா… இது மாதிரி எத்தனை பேருக்கும் அமையும். சேகரு, நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிடா’ என்று தனக்குத்தானே சபாஷ் சொல்லிக்கொண்டே அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் டீக் கடைக்கு நடந்து வந்தான். அங்கு ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இருந்து ‘வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே’ என்ற பாடலில் ‘சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே’ என்ற வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தது.
 


Sunday, 20 August 2017

எழுதி முடித்த கதை -சிறுகதை 

ஆழ்வார்குறிச்சியின் இரண்டு பக்கங்களில் நெல்வயல்கள் நடுவில் உள்ள தார் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து தலையை இடப்பக்கமாக திருப்பிப் பார்த்தார் சங்கர். பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட தென்றல்; நெற்கதிர்களைக் கடந்து நெல் வயலில் ஆவியாகிக் கொண்டிருந்த நீரையும் சேர்த்து இழுத்து வந்து சங்கர் முகத்தினை குளிர்ந்த காற்றால் வருடியது. அந்த சுகத்தின் இனிமையில் தன் கண்களை மூடி உலகத்தினை மறந்து ஒரு நிமிடம் லயித்தார். அந்த சாலையைக் கடந்த ஒரு நிமிடம் சங்கருக்கு 50 வருடம் தவம் இருந்து பெற்ற ஒரு சுகத்தைக் கொடுத்தது. அந்த சுகத்தினூடே சடாரென்று ஒரு கதைக்கான கரு மனதில் கண நேரத்தில் சுழன்று சென்றது. தூக்கத்தில் கனவு கண்டு விழிப்பவன் போல திடீரென்று கண் விழித்துப் பார்த்தவர். மறுபடியும் கண்ணை மூடி கதையை மனதிற்குள்ளே விவரிக்க முயன்றார். தன் மனதிற்குள்ளேயே கதையை விரிவுபடுத்திக்கொண்டார். கண் மூடியிருந்தாலும் அவர் எண்ண ஓட்டத்தை அவருடைய புருவம் அவ்வப்போது சுருங்கியும் விரிந்தும் காட்டிக் கொண்டிருந்தது.



80 பக்க தமிழ் கட்டுரை நோட்டு... 30 பக்கமே எழுதப்பட்டிருந்து... மாதவனுக்கு பள்ளி விடுமுறையாதலால் அந்தக் கட்டுரை நோட்டு அவனுக்கு உபயோகப்படாது என்று தோன்றியது... இருந்தாலும் அவனிடம் ஒரு வார்த்தைக் கேட்டு விடுவோம் என்று மாதவனை அழைத்தாh.

'என்;னப்பா?'

'இந்த நோட்டு உனக்கு உபயோகப்படுமா?' கட்டுரை நோட்டைக் காண்பித்தார்.

'இல்லப்பா'

'சரி நான் பயன்படுத்திக்கிறேன்'

'ம்ப்பா...' ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான். வெளியில் கிரிக்கெட் பேட்டும் பாலுமாக நண்பர்கள் அவன் விடுதலைக்காகக் காத்திருந்தனர்.

சங்கர் அந்த நோட்டைத் திறந்து பார்த்தார். 'ஆறு தன் வரலாறு கூறுதல்'. சங்கருக்கு இளமைக் காலம் சுழன்று சென்றது. தானும் சிறு வயதில் 'ஆறு தன் வரலாறு கூறுதல்' கட்டுரை எழுதியிருந்ததை நினைவு கூர்;ந்தார். நல்லவேளை தன் மகனுக்கும் ஆற்றினை பார்க்கும் பாக்கியம் இருக்கிறது. பேரப் பிள்ளைக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை என்று எண்ணியவாறே... கதையைத் தொடங்குவதற்கு அந்தக் கட்டுரை நோட்டின் வெற்றுப்பக்கத்தைத் திருப்பினார்.

கதையின் தலைப்பை எழுத வேண்டும்... சரி.. அதை கடைசியில் எழுதிக் கொள்வோம்...

அந்தக் கட்டுரை நோட்டின் கடைசிப் பக்கத்தைத் திருப்பினார். அவர் யோசித்தக் கதைகளில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும் என்று நினைத்தவற்றை மறந்து விடாமல் இருப்பதற்காக சிறு சிறு குறிப்புகளை எழுதினார். அடுத்தபடியாக அந்தக் குறிப்புகளை வரிசைப் படுத்த வேண்டும். எந்தக் குறிப்புகளை எங்கே சேர்க்க வேண்டும். ஏதேனும் குறிப்பு உறுத்தலாக இருக்குமா அதனை நீக்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

'என்னங்க கருவேப்பிலைய ஃப்ரிட்ஜ்ல வைக்க மறந்துட்டேன்' எடுத்து வைச்சிருங்க...

'சமையல்கட்டிலிருந்து மனைவி கண்ணம்மாவின் குரல் டிவி சத்தத்தையும் தாண்டி ஒலித்தது'

கவனம் முழுவதும் வரிசைப்படுத்த வேண்டும் என்று இருந்ததால்... அரைகுறையாக காதில் விழுந்ததை பொருட்படுத்தாமல் பேனாவின் மூடியைத் திறந்தார் சங்கர்.

'சொன்னது காதில விழுதா.... இல்லையா....' சத்தம் இரண்டு மடங்கு அதிகமாக எழுந்தது... சங்கரின் சிந்தனையை உலுக்கி சர்ரென்று கோபத்தை மூட்டியது.

'என்ன?'

'ஏன் என்ன கேட்டேன்னு தெரியாதா..?'

விறுவிறுவென்று சென்ற சங்கர் ஃபிரிட்ஜை திறந்து பார்த்தார். ரொம்ப நாளாக உள்ளே அழுகி மாதுளை வாயைப் பிளந்து கொண்டு தெரிந்தது. கண்ணை மூடி இருக்கும் பக்கம் திருப்பினார். ஒரே ஒரு முறை மட்டும் திறக்கப்பட்டு ஒரு வருடமாக ஃபிரிட்ஜிலேயே குடியிருக்கும் பேரிட்சை பாக்கெட்டும், hம் டப்பாவும் மேலும் கோபத்தை கூட்டியது. மறுபடியும் இடது பக்கம் தலையைத் திருப்பினார். ஆதில் சருகு போன்று உள்ள கருவேப்பிலைகள் என்னைத் தூக்கிக்கோ என்பது போல் அவரைப் பார்த்தது. வேக வேகமாக அந்தக் கறிவேப்பிலையை எடுத்து வந்து கண்ணம்மா முன் வேகமாக நீட்டினார்'

'என்னது இது?'

'கறிவேப்பிலை..'

'ஏன் என் தலையில வையேன்....'

கருவேப்பிலையை சற்று உயர்த்துவதுபோல் உயர்த்தி திரும்பவும் கீழே கொண்டுவந்தார்.

'நினைச்சேன், நீ இததான் பண்ணுவன்னு....நான் உன் கிட்ட என்ன கேட்டேன்?'

'நீதானேடி... ஃபிரிட்ஜில இருக்க கருவேப்பிலையை எடுத்து வரச் சொன்ன?'

'உன் காதுல ஈயத்த காய்ச்சி ஊத்த....என்னத்தத்தான் கவனிக்கிறியோ.... வெளியில இருக்கிற கருவேப்பிலையை...'

'கறிவேப்பிலை...'

'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... கறிவேப்பிலையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கச் சொன்னேன் ஐயா... உள்ள கிடக்கிறத என் தலையில வைக்கச் சொல்லலை...

சங்கர் எதுவும் பேசாதவறாய் காய்ந்த கறிவேப்பிலையை குப்பைத் தொட்டியில் போட்டார் மனைவியைக் கவனித்துக் கொண்டே ? இல்லையென்றால் அதிலும் வேறு ஏதேனும் மாற்றுக் கருத்து வந்து விடக் கூடாது அல்லவா?;

மறுபடியும் எழுதலாம் என்று ஆரம்பித்த போது தொலைக்காட்சியில் செய்தி துவங்குவதற்கான சத்தம் கேட்டது. அப்படியே மூடி வைத்தார் சங்கர்.

செய்தி முடிந்த வேளையில் சாப்பிட்டுவிட்டு மறுபடி ஆரம்பிக்கலாம் என்று நினைத்த சங்கரை பால்ய நண்பர் ஆறுமுகம் வரவும் அவருடன் கிளம்பி வெளியே சென்று விட்டார். என்னதான் நண்பருடன் வெளியே அளாவிலானும் அவருடைய எண்ணம் முழுவதும் கதையை முடிக்க வெண்டும் என்ற எண்ணத்துடனே  இருந்தது.

அனைவரும் உறங்கியவுடன் எழுதலாம் என்று நோட்டைக் கையில் எடுத்தார். லைட்டை ஆஃப் பண்ண சொல்லி தூக்கத்தலிருந்தபடியே மகன் செல்வா எரிச்சலுற்றான். உடனே எழுந்து உட்கார்ந்து எழுதுவதற்காக வீட்டின் வெளியே வந்து லைட்டை ஆன் செய்தார் ஒரு திண்ணையில் சங்கரின் அப்பா தூங்கிக் கொண்டிருந்ததால் மறு திண்ணையில் உட்கார்ந்து எழுத எத்தனித்தார்...

'இந்த நேரத்தில என்னடா பண்ற?'

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவர் எதிரில் வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக் கொண்டே அவர் தந்தையை கவனித்தார்.

'தூங்கலையாப்பா?'

'எங்கடா, தூக்கம் வருது வயசாயிபோச்சுல... இனிமே இந்தக் கட்டை நிம்மதியா கடைசி தூக்கம் தூங்கறவரைக்கும் தூக்கம் இல்லாமத்தான் காலத்தைக கழிக்கணும்;, சரி நீ என்ன பண்ற ஏதாவது கணக்கு எழுதறியா?'

'இல்லப்பா... கதை ஒண்ணுத் தோணுச்சு, அதான் எழுதலாம்னு...'

கேட்டமாத்திரத்தில் அப்பா ஒன்றும் சொல்லாமல் வாயைக் கொப்பளித்துவிட்டு படுத்துக் கொண்டார். பாவம், அவரும் எப்படியாவது சங்கரின் கதையை பத்திரிக்கைகளில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் இருந்தார். ஆனாலும், அவருக்கும் அந்த பாக்கியம் இன்னும் கிட்டவில்லை. இவன் சிறுவயதில் எப்படி ஆர்வத்தோடு இருந்தபோது சங்கரை ஊக்குவித்தாரோ அதே போலத்; தான் இப்போதும் இருக்கிறார்? ஆனாலும் சங்கரால் இப்போதும் கதையைத் தொடர முடியவில்லை...? என்ன செய்வது அப்பாவின் குறட்டை சத்தத்தின் மத்தியில் எழுதுவதற்கான சிந்தனையைவிட அப்போது ஏற்பட்ட மனஅழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்ற குழப்பத்தில் வீட்டிற்குள் சென்று படுத்துத் தூங்கிவிட்டார் சங்கர். அவருடைய பல பிரச்சனைகளை தீர்க்கும் ஆயுதமாக பல சமயங்களில் அவருடைய தூக்கம் மட்டுமே இருந்துள்ளது.

பதினைந்து நாட்கள் கடந்து விட்டது. ஒருவழியாக பல சிரமங்கள், இடையூறுகள் மத்தியில் ஒரு வழியாகக் கதையினை எழுதி முடித்து விட்டார் சங்கர். அதனை மகன் செல்வா புத்தகங்கள் வைத்திருக்கும் அலமாரியில் மற்ற புத்தகங்களின் மேல் வைத்துவிட்டு நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்.

அந்த ஊரில் இருக்கும் நூலகத்திற்கு இவருடைய வயதினை ஒத்தவர்கள் தான் தவராகச் செல்கின்றனர். அங்கு உள்ள மத்த புத்தகங்களைப் படிக்கின்றனரோ இல்லையோ அனைத்து செய்தித்தாள்களையும் புரட்டி முடித்துவிடுவர். அவ்வாறு அன்று நூலகத்திற்கு சென்று வார மற்றும் மாதாந்திர இதழ்களை தேடிப் பிடித்து அதன் முகவரிகளைக் குறித்துக் கொண்டார்.

மனதில் பெரிய உத்வேகம் அவருள் குடிகொண்டது. அவருடைய கால்கள் வீட்டை நோக்கி வேக வேகமாக நடையைக் கட்டின. வீட்டிற்கு வந்தால் அலமாரிகள் காலியாக இருந்தன. ஒரு புத்தகத்தையும் காணவில்லை கூடவே இவருடைய நோட்டும்....!

'செல்வாhhhh......!!!' ஆத்திரத்தில் கத்தினார் சங்கர்.

'என்னப்பா?'

'இங்க இருந்த நோட்டு எங்கடா?'

'இருப்பா.... வர்றேன்'

கையில் ஐந்தாறு மரவள்ளிக் கிழங்குகளை எடுத்து வந்து நீட்டினான்.

'என்னடா இது?'

'மரவள்ளிக் கிழங்கு விக்கிறவன் சைக்கிள்ல வந்தான்பா... அதான் அவன்கிட்ட நோட்டு புத்தகம்லாம் கொடுத்துட்டு இத வாங்கிட்டேன். நான்தான் அடுத்த வகுப்பு போறேன்ல இனிமே இது எதுக்கு?'

'அறிவு கெட்ட மூதேவி....' என்று கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.

'என்னாச்சுடா...' கேட்டுக்கொண்டே சங்கரின் நண்பர் வீட்டிற்குள் நுழைந்தார்.

'இந்தப் பய என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கான் பாரு...' என்று சொல்லிக் கொண்டே மகனின் பக்கம் திரும்பினார்.  செல்வா வாசல் பக்கம் தலைதெறிக்க ஓடி மறைந்தான்.

'என்னடா... ஏன் போட்டு அடிச்சிகிட்டு இருக்க... பொதுவா நீ கையெல்லாம் ஓங்க மாட்டீயே... இன்னைக்கு என்னாச்சு?'

'ஆதங்கத்துல கோபப்பட்டு அடிச்சிட்டேன்டா... இந்த முறை கதை நல்லா வந்திருந்தது. ஆனால், அதை மரவள்ளிக் கிழங்குக்கு போட்டுட்டான்'

'சரி விடுடா... கதைதான் உனக்குத் தெரியும்ல... மறுபடி எழுதிட வேண்டியதுதானே?'

'ஹும்... எவ்வளவு கதை தெரியுமா? என் மனதில் உதித்தாலும் எழுத முடிவதில்லை. எழுதினாலும் பத்திரிக்கைக்கு அனுப்பினால் அதன் நிலை என்னவென்றே தெரிவதில்லை. இந்தக் கதையாவது நான் எழுதி முடித்துவிட்டு தொலைத்து விட்டேன்.. பல கதைகள் நான் எழுதாமலேயே தொலைத்து விட்டேன்... என் நினைவில் தோன்றி மறைந்த பல கதைகள் ஒரு வருடம் கழித்தோ அல்லது அதன் பின்னரோ ஏதோ ஒரு வடிவில் இன்னொருவர் வழியாக தோன்றி அதனை உலகமே பெருமிதமாக நினைக்கும் போது அருமையாக கோல் போடும் வாய்ப்புக் கிடைத்தும் பயன்படுத்தாத கால்பந்து வீரரைப் போல்தான் உணர்கிறேன். ஒரு காகம் கூட தான் தின்ற விதைகள் இன்னொரு இடத்தில் விழுந்து மரமாக பரிணமிக்க வைக்கின்றது. ஆனால், என் கதையும் அப்படித்தான் என் கதைக் கருவினை இன்னொருவருக்கு தோன்றி எங்கோ ஒருவர் அதே சிந்தனையை பிற்காலத்தில் உருவாக்குவது என் விதை வேறு எங்கோ முளைப்பதைப் போன்ற எண்ணம். ஆனால், அது என்னுடையாக விதையாக இருந்தது என்பதை சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை.ஒன்றை பெறுவதற்கு எதையாவது இழந்து தான் ஆக வேண்டியது கட்டாயமானதாக இருக்கிறது....' சொல்லும் போது சங்கரின் கண்களில் இருந்து எட்டிப் பார்த்த கண்ணீர் துளி சங்கர்; கதை போலவே வெளியே வர மனதில்லாமல் கண்ணிற்குள்ளே பரந்து கரைந்தது.